search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது அசாருதீன்
    X
    முகமது அசாருதீன்

    என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்

    டிராவல்ஸ் ஏஜென்சியின் உரிமையாளர் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடருவேன் என அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    மராட்டிய மாநில அவுரங்காபாத் நகரில் உள்ள டேனிஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்சியின் உரிமையாளர்  முகமது ஷாஹாப் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் மற்றும் கான், அவாக்கல் ஆகிய 2 பேர் மீது சிட்டி சவுக் போலீஸ் நிலையத்தில் ரூ.20.96 லட்சம்  மோசடி செய்ததாக புகார் அளித்து உள்ளார்.

    அவர் அளித்துள்ள புகாரில்  கடந்த ஆண்டு நவம்பரில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன்   தனிப்பட்ட உதவியாளரின் வேண்டுகோளின் பேரில் அவருக்கும்  மற்றும் சிலருக்கு ரூ. 20.96 லட்சம் மதிப்புள்ள பல்வேறு சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக தனது புகாரில் குற்றம் சாட்டி உள்ளார்.

    மேலும்  ஆன்லைனில் பணம் செலுத்துவதாக பலமுறை உறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் முகமது அசாருதீன் மற்றும் கான், அவாக்கல் ஆகிய மூன்று பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி), 406 ( நம்பிக்கையை மீறுதல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த குற்றச்சாட்டு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில்,  ‘‘இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை, மேலும் இது வெளிச்சத்திற்கு வரும்படி செய்யப்படுகிறது. புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. புகார்தாரருக்கு எதிராக ரூ. 100 கோடி  மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன்’’ என கூறி உள்ளார்.
    Next Story
    ×