என் மலர்
விளையாட்டு
பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை 116 ரன்னில் சுருட்டி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். கேப்டன் ஹீதர் நைட் 47 பந்தில் 62 ரன்களும், ஸ்கிவர் 29 பந்தில் 36 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. அலியா ரியாஸ் 41 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற 116 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான். இதனால் இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் நடைபெற இருக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் நாட்டில் மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட் பெடரேசன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற இருக்கிறது.
சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணங்களை முடிந்த அளவிற்கு தவிர்க்கும்படி இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் உலக கோப்பையில் இருந்து விலகுவதாக இந்திய தேசிய ரைபிள் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
சைப்ரஸ் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. சந்தேகம் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் 400 முதல் 450 ரன்கள் குவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் இந்தியா படுதோல்வியடைந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் 400 முதல் 450 ரன்கள் வரை குவிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி டிராபியில் சாதனைப் படைத்தவருமான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறுகையில் ‘‘விராட் கோலி சில போட்டிகளில் ரன்கள் அடிக்காமல் உள்ளார். அவர் மீண்டும் வலுவாக வருவார் என எதிர்பார்க்கிறேன். புஜாரா அதிக அளவில் ரன்கள் அடிக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் அடிக்கும் ரன்களை மூன்று இலக்கமாக மாற்ற வேண்டும். அப்படி அடிக்கவில்லை என்றால் 350 முதல் 400 ரன்கள் வரை அடிக்க முடியாது. பின்னர் கடினமாகிவிடும்.
200 முதல் 250 ரன்களே அடித்தால், ஆடுகளம் ஒத்துழைக்காவிடில் ஒருபோதும் வெற்றி பெற இயலாது. முதலில் பேட்டிங் செய்தாலும், 2-வது பேட்டிங் செய்தாலும் 400 முதல் 450 ரன்கள் அடிக்க வேண்டும்.
வெலிங்டனில் முதல் இன்னிங்சில் இந்தியா விளையாடும்போது ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் பவுன்சர் யுக்தியை பயன்படுத்தியபோது, 2-வது இன்னிங்சில் நாம் சிறப்பான வகையில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். இரண்டு இன்னிங்சிலும் நம்பர் ஒன் அணி 200 ரன்னைத் தாண்டாதது விரும்பக்கூடியது அல்ல.
2-வது டெஸ்டில் இந்தியா மிகவும் கடினமான வகையில் பழைய நிலைக்கு திரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு முன்பும் அவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். எப்போதெல்லாம் நெருக்கடிக்கு ஆளாகிறார்களோ அப்போதெல்லாம், மிகவும் வலுவாக திரும்பியுள்ளனர் ’’ என்றார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ‘செரி ஏ’ லீக் கால்பந்து போட்டிகள் மூடிய மைதானத்திற்குள் நடைபெறும் என தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்குப் பிறகு ஈரான், இத்தாலியில் அதிக அளவிலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஸ்போர்ட்ஸ் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியின் முதன்மையான கால்பந்து லீக்கான ‘செர்ரி ஏ’-வில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து போட்டிகளில் நடைபெற்ற இருக்கிறது. இதில் யுவென்டஸ் - இன்டர் மிலன் மோதும் போட்டியும் ஒன்று. இந்த ஐந்து போட்டிகளும் மூடிய மைதானத்திற்குள் நடைபெறும், ஒளிபரப்பு உரிமை பெற்ற டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்த சிலரே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் படுதோல்வியில் இருந்து இந்தியா கடுமையான வகையில் மீண்டு வரும் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் படுதோல்வியடைந்தது இந்தியா.
கிறிஸ்ட்சர்ச்சில் நாளை 2-வது டெஸ்ட் நடக்கிறது. முதல் போட்டிக்கான ஆடுகளம் போன்றே 2-வது போட்டிக்கான ஆடுகளமும் புற்கள் நிறைந்த வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் எனக் கூறி வருகின்றனர். ஆனால் தோல்வியில் இருந்து இந்தியா சிறந்த வகையில் மீண்டு வரும் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளது. உலகின் எந்தவொரு சூழ்நிலைக்கு ஏற்பவும் அவர்களால் மாறிக்கொள்ள முடியும். அவர்கள் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு விரைவாக சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை பற்றி அவர்களுடைய சாதனைகள் பேசும்’’ என்றார்.

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் தென்கொரியாவின் வொன் சூன்-வூவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் கிரிகோர் டிமிட்ரோவ் வாவ்ரிங்காவையும், டெய்லர் பிரிட்ஸ் கைல் எட்மண்ட்-ஐயும், ஜொன் இஸ்னெர் டாமி பால்-யையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வரும் கிறிஸ்ட்சர்ச்சின் ஆடுகளத்தின் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான வெலிங்டன் ஆடுகளம் எப்படி பச்சைபசேல் என்று காட்சியளித்ததோ, அதேபோன்றுதான் கிறிஸ்ட்சர்ச்சின் ஆடுகளமும் காட்சி அளிக்கிறது.
நேற்று பிசிசிஐ கிறிஸ்ட்சர்ச் மைதானத்தின் படத்தை வெளியிட்டது. ஆடுகளத்திற்கும், அவுட் பீல்டு இடத்திற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்தியா அணி விரைவிலேயே தோல்வியடைந்து விடும் என ரசிகர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியா முன்கூட்டியே இந்தியாவுக்கு திரும்ப விமானத்தை முன்பதிவு செய்ய முடியும், ஆடுகளத்தை பார்த்த பிறகு பிரித்வி ஷாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது போன்று டுவிட்டர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Spot the pitch 🤔🤔#NZvINDpic.twitter.com/gCbyBKsgk9
— BCCI (@BCCI) February 27, 2020
கணுக்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 2-வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்தத் தொடருக்கு முன் இவர் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் உடற்தகுதியை நிரூபித்து முதல் டெஸ்டில் விளையாடினார்.
நாளை 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
நேற்று காலையில் வலைப்பயிற்சி மேற்கொண்ட இஷாந்த் சர்மா, மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் காயத்தின் தன்மை குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்படும்.

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று கான்பராவில் நடந்த லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா- தாய்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. லீசெல்லா லீ, சன்னே லுயஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.
இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி படைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியின் அபார பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தாய்லாந்து அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தாய்லாந்து அணியில் இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக ஒன்னிச்சா கம்சோம்பு 26 ரன்கள் எடுத்திருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுனே லூஸ், ஷப்னிம் இஸ்மாயில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதம் அடித்த லீசெல்லா லீ ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி படைத்துள்ளது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று கான்பராவில் நடந்த லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா- தாய்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனை லீசெல்லா லீ சதம் அடித்தார். அவர் 101 ரன் எடுத்து அவுட் ஆனார். இது அவரது முதல் சதம் ஆகும். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
சன்னே லுயஸ் 61 ரன் எடுத்தார். தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.
இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி படைத்தது.
இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 194 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.

2-வது டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள வீரர்கள் தயாராக உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
நாங்கள் முதல் டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. ஆனால் நான் எப்போதும் இதுபோன்ற தோல்வி ஏற்படுவது நல்லது தானே என்று நம்புகிறேன். இதுபோன்ற தோல்விதான் உங்களது மனநிலையை திறக்கும்.
நீங்கள் தோல்வியை சுவைக்கவில்லை என்றால் உங்கள் மனநிலை ஒரு முடிவை தீர்மானிக்கும் அல்லது அந்த முடிவை இறுதி செய்து விடும்.
நியூசிலாந்தில் தோல்வியை சந்தித்தது நல்லது தான். இதன் மூலம் கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நியூசிலாந்து அணி என்ன செய்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது ஒரு நல்ல பாடம்.
2-வது டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். இதில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒரு தோல்வி ஏற்பட்டதால் பயப்பட தேவையில்லை. இந்த அணியின் பாதையை மாற்ற வேண்டும் என்று யாரும் நினைக்கவும் வேண்டாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டும், ஒருநாள் போட்டியும் முற்றிலும் வேறுபாடு கொண்டவை. இங்கிலாந்து- நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. ஆனாலும் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு எந்த சாக்கு போக்குகளை சொல்ல நாங்கள் இங்கு வரவில்லை.
அஸ்வின் உலகம் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவது தேவையானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சரிவில் இருந்து எழுச்சி பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச்:
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.
இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார். இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும்.
இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் விராட் கோலி கடைசியாக ஆடிய 20 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் தடுமாற்றமும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய துணை கேப்டன் ரஹானே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நாம் இன்னும் அதிக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் மனஉறுதியும், தெளிவான மனநிலையும் இருந்தால் போதும். அதுவே உதவிகரமாக இருக்கும். வெலிங்டனில் நடந்ததை நாம் மறக்க வேண்டும். முந்தைய டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அந்த கோணத்தில் தான் பயிற்சியிலும் ஈடுபடுகிறோம். ஆடுகள சீதோஷ்ண நிலை குறித்தே தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கக்கூடாது. அவற்றை தாண்டி அத்தகைய சூழலில் ரன் எடுப்பது எப்படி என்பதை பார்க்க வேண்டும்.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது. இங்கு ஒரு டெஸ்டில் நாம் வெற்றி பெற்றாலும் 60 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெகுதூரம் முன்னேறி விட முடியும். அதனால் தான் முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன்.
இதே மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணி கடந்த மாதம் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆடியது. அதில் விளையாடிய ஹனுமா விஹாரி (அந்த ஆட்டத்தில் 51 மற்றும் 100 ரன்கள் எடுத்தார்) இந்த ஆடுகளம் வெலிங்டனை விட நன்றாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் இருக்கும். முதல் நாளிலேயே ஆடுகளத் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.
அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருவருமே தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். யாரை நீக்கினாலும் அது கடினமான முடிவாகத் தான் இருக்கும்.
இவ்வாறு ரஹானே கூறினார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் நியூசிலாந்து 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.
இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டையில் டிரென்ட் பவுல்ட் (37 விக்கெட்), டிம் சவுதி (32 விக்கெட்), நீல் வாக்னெர் (23 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஜாலம் நீடிக்குமா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி.
நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் அல்லது அஜாஸ் பட்டேல்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.