என் மலர்

  செய்திகள்

  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்
  X
  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்

  சைப்ரஸ் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இந்தியா விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் நடைபெற இருக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
  கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் நாட்டில் மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட் பெடரேசன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற இருக்கிறது.

  சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணங்களை முடிந்த அளவிற்கு தவிர்க்கும்படி இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் உலக கோப்பையில் இருந்து விலகுவதாக இந்திய தேசிய ரைபிள் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

  சைப்ரஸ் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. சந்தேகம் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
  Next Story
  ×