search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீராங்கனைகள்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீராங்கனைகள்

    பெண்கள் டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை 42 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை 116 ரன்னில் சுருட்டி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். கேப்டன் ஹீதர் நைட் 47 பந்தில் 62 ரன்களும், ஸ்கிவர் 29 பந்தில் 36 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

    பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. அலியா ரியாஸ் 41 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற 116 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான். இதனால் இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
    Next Story
    ×