என் மலர்
விளையாட்டு
கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய போது 2 பவுலர்களால் தனது தூக்கத்தை தொலைத்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை:
சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடலில் இணைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஆரம்ப காலத்தில் உங்களை மிரட்டிய பவுலர்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ‘நான் இந்திய அணிக்குள் நுழைந்த போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ உலகின் அதிவேக பவுலராக திகழ்ந்தார். 2007-ம் ஆண்டு ஒரு நாள் தொடரின் போது, மணிக்கு சீராக 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் அவரது வீச்சை எப்படி கொள்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன். இதனால் எனது தூக்கத்தையும் தொலைத்து இருக்கிறேன்.
இதே போல் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். அதனால் அவரது பந்து வீச்சை ஒரு போதும் சந்திக்கக் கூடாது என்று நினைப்பேன். எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய போது, இவர்கள் இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள கடினமாக இருந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசுகிறார்கள். குறிப்பாக துல்லியமாக பந்து வீசும் ஹேசில்வுட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்க விரும்பமாட்டேன்’ என்றார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ள ரோகித் சமாவிடம் உங்களது சிறந்த இரட்டை சதம் எது? என்று கேட்ட போது, ‘எனது இரட்டை சதங்கள் அனைத்தும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பு வாய்ந்தது தான்’ என்று பதில் அளித்தார்.

ரோகித் சர்மா இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் தான் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இவ்வாறு கம்பீர் கூறினார்.
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முன்பே இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்பிளே 900 விக்கெட்டுகளும் (அவர் எடுத்துள்ள விக்கெட் 619), ஹர்பஜன்சிங் 700 விக்கெட்டுகளும் (அவர் எடுத்துள்ள விக்கெட் 417) கைப்பற்றி இருப்பார்கள் என்று மற்றொரு கேள்விக்கு கம்பீர் பதில் அளித்தார்.
இதற்கிடையே கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். தனது கனவு டெஸ்ட் அணியில் கேப்டன் பொறுப்பை அனில் கும்பிளேயிடம் வழங்கியுள்ளார். கம்பீரின் இந்திய டெஸ்ட் அணி வருமாறு:சுனில் கவாஸ்கர், ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கபில்தேவ், டோனி, ஹர்பஜன்சிங், கும்பிளே (கேப்டன்), ஜாகீர்கான், ஸ்ரீநாத்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தான். ஒட்டுமொத்தத்தில் அவரை சிறந்தவர் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது சிறந்தவராக விளங்குகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒரு உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் ரோகித் தான். விராட் கோலியையும், ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டு பார்ப்பது கடினம். விராட் கோலி நம்ப முடியாத ஒரு வீரர். அவரது சாதனைகளே அதற்கு சான்று. ரோகித் சர்மா இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் டோனி தான். ஆரம்ப காலத்தில் ரோகித் சர்மா அணியில் இடம் பெறாத போது கூட அவரிடம் பேசி டோனி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவரை ஒரு போதும் ஓரங்கட்டியது கிடையாது. அந்த சமயத்தில் வேறு எந்த வீரருக்கும் இவ்வளவு ஆதரவு அவர் கொடுத்ததில்லை. இதே போல் விராட் கோலியையும் டோனி சரியாக பயன்படுத்தினார். இன்றைய தலைமுறையில், சுப்மான் கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்களும் திறமையானவர்களே. டோனியின் பாணியில் அவர்களுக்கு கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆதரவு அளிக்க வேண்டும். அதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்’.

இவ்வாறு கம்பீர் கூறினார்.
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முன்பே இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்பிளே 900 விக்கெட்டுகளும் (அவர் எடுத்துள்ள விக்கெட் 619), ஹர்பஜன்சிங் 700 விக்கெட்டுகளும் (அவர் எடுத்துள்ள விக்கெட் 417) கைப்பற்றி இருப்பார்கள் என்று மற்றொரு கேள்விக்கு கம்பீர் பதில் அளித்தார்.
இதற்கிடையே கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். தனது கனவு டெஸ்ட் அணியில் கேப்டன் பொறுப்பை அனில் கும்பிளேயிடம் வழங்கியுள்ளார். கம்பீரின் இந்திய டெஸ்ட் அணி வருமாறு:சுனில் கவாஸ்கர், ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கபில்தேவ், டோனி, ஹர்பஜன்சிங், கும்பிளே (கேப்டன்), ஜாகீர்கான், ஸ்ரீநாத்.
இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்கொலை செய்துகொள்ளலாம் என 3 முறை எண்ணியதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர் இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர்.
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரோகித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2015 உலகக் கோப்பையில் நான் காயமடைந்தபோது முழுமையாக குணமடைய எனக்கு 18 மாதங்கள் ஆகின. அது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலம் என்று சொல்லலாம்.
நான் மீண்டும் விளையாடத் தொடங்கியபோது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை யோசித்தேன் என தெரிவித்தார்.
மார்ச் 2018-ல் ஷமியின் மனைவி, அவர் மீது குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டது. இதனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும்வரை பிசிசிஐ, ஷமியின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினார்.
அந்தச் சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் அப்போது என்னுடன் இல்லாமல் போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். இக்கட்டான சூழ்நிலையில் என்னுடன் முழுவதும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன் எனவும் உருக்கமாக கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, கரடு முரடான அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் உள்ளது என கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று காலை நிலவரப்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இன்றுடன் 40 நாட்கள் முழு ஊரடங்கு முடிவடைகிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் கொரோனாவின் செயின் அறுக்கப்படவில்லை. தற்போதுதான் முக்கிய நகரங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மேலும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதுள்ள நிலை கரடு முரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு இணையான சூழ்நிலையாக உள்ளது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று உள்ளது. சீமிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றிற்கு பந்து நன்றாக துணைபோகும். பேட்ஸ்மேன் சற்று தவறு செய்தாலும் அவ்வளவுதான்.
பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்க வேண்டும். அதேவேளையில் சிறிய தவறு கூட செய்யாமல் கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியை ஜெயிக்க முடியும். தற்போதுள்ள சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், எம்எஸ் டோனி தனக்கு ஒரு ஆலோசகர் மாதிரி எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷாப் பண்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘‘கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்எஸ் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார்.
எந்தவொரு பிரச்சினையை நான் சந்தித்தாலும், அவரை எளிதில் அணுகலாம். பிரச்சினைக்கு முழுமையான தீர்வை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். ஏனெனில் நாம் முழுமையாக அவரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைப்பார். பிரச்ச்சினையை சரி செய்தவற்கான குறிப்புகளை மட்டும் கூறுவார். அது நாம் பிரச்சினையை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.
அவர் எனக்கு மிகவும் பிடித்தமான பேட்டிங் இணை ஆவார். அவர் களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதுமானதாகும்’’ என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மும்பை:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளில் பயிற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உள் அரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஆனால் மும்பையில் இடங்கள் எல்லாம் நெரிசலாக காணப்படுகின்றன. எனவே அபார்ட்மெண்டை விட்டு வெளியேற முடியாது.
மும்பையில் விளையாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இங்கு எல்லாம் விலை அதிகம். நான் அபார்ட்மெண்டில் வசிக்கிறேன். நல்லவேளையாக அதில் பால்கனி உண்டு. எனது பயிற்சியாளர் கூறியபடி அந்த இடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடற்பயிற்சிக் கூடங்களை விரைவில் திறப்பார்கள். அப்போது அங்குச் சென்று பயிற்சி மேற்கொள்வேன்.
என்னுடைய பேட்டிங் பயிற்சியை, ஆட்டத்தை மிஸ் செய்கிறேன். அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவை விட கொடியவர் என்று கூறிய கெய்லின் குற்றச்சாட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சர்வான் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜமைக்கா:
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவரை தக்க வைத்துக் கொள்ளாமல் ஜமைக்கா அணி அவரை விடுவித்தது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது. ஜமைக்கா அணியில் இருந்து தன்னை வெளியேற்றியதற்கு அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் முக்கிய காரணம் என்று கெய்ல் குற்றம் சாட்டினார். கொரோனாவை விட கொடியவர் சர்வான், நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார். அவர் ஒரு பாம்பு, முதிர்ச்சியற்றவர் என்று சகட்டு மேனிக்கு சர்வானை கெய்ல் திட்டித் தீர்த்தார். இந்த நிலையில் கெய்லின் குற்றச்சாட்டை மறுத்து சர்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘2020-ம் ஆண்டு சி.பி.எல். போட்டிக்கான ஜமைக்கா அணியில் இருந்து கெய்லை நீக்க எடுத்த முடிவில் எனது பங்கு எதுவும் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். கெய்ல் வெளியிட்ட வீடியோ பதிவில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி பலருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். என்னைத்தான் குறி வைத்து அதிகமாக தாக்கியுள்ளார். ஆனாலும் என்னைத் தவிர அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ள மற்றவர்களின் நலன் காக்கவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகம் ஆனதில் இருந்து கெய்லுடன் தான் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவரது அபார திறமை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அது மட்டுமின்றி அவர் எனது நெருங்கிய நண்பரும் ஆவார். ஆனால் அவரது இத்தகைய தவறான குற்றச்சாட்டுகள் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உதவி பயிற்சியாளராக பணியாற்றிய போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நான் பல்வேறு வழிகளில் முயன்றதாக கூறியது, தனக்கு மதிப்பு அளிக்காத வகையில் வெளிநாட்டு வீரர்களை தூண்டியதாக கூறியது உள்ளிட்ட எந்த புகாரிலும் உண்மையில்லை. கெய்ல் சர்ச்சைகளில் சிக்கிய போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக நின்றவன் நான். துரதிர்ஷ்டவசமாக அவரது குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கிறது. புதிய அணியில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்’.
இவ்வாறு சர்வான் கூறியுள்ளார்.

2023-ம் அண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ்டெய்லர் கூறியுள்ளார்.
வெலிங்டன்:
இந்த ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த வீரராக முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். அதற்குரிய சர் ரிச்சர்ட் ஹாட்லீ பதக்கத்தை 3-வது முறையாக டெய்லர் பெற்றுள்ளார். விருதுக்கு கணக்கிடப்பட்ட காலக்கட்டத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து 2 சதம், 9 அரைசதம் உள்பட 1,389 ரன்கள் சேர்த்துள்ளார். இது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சினின் ரன் குவிப்பை விட 200 ரன் அதிகமாகும்.
ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தட்டிச் சென்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி முதல்முறையாக ஆன்-லைன் மூலம் நடைபெற்றது. முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீ, ‘வீடியோ லிங்’ மூலம் டெய்லருக்கு புகழாரம் சூட்டினார்.
நியூசிலாந்து அணி 2015 மற்றும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் அடைந்த தோல்விகளால் ஏமாற்றம் அடைந்துள்ள ராஸ் டெய்லர் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் (50 ஓவர்) விளையாடும் ஆவலில் உள்ளார்.
36 வயதான டெய்லர் கூறுகையில், ‘ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்றாலும் 2019-20-ம் ஆண்டு சீசன் எனக்கு வியப்புக்குரியதாகவே அமைந்திருக்கிறது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடினேன். ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் பங்கேற்றது பெருமைமிக்க தருணம். அப்போது அங்கு நியூசிலாந்து ரசிகர்கள் அளித்த ஆதரவை ஒரு போதும் மறக்க முடியாது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2023-ம் ஆண்டு உலககோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. உத்வேகமும், மனரீதியாக தொடர்ந்து வலுவாக இருக்கும் போது 2023-ம் ஆண்டு உலக கோப்பையில் என்னால் ஆட முடியும். அதன் பிறகு வயது வெறும் நம்பர் தான். 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண விரும்புகிறேன்’ என்றார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.
லண்டன்:
ஐசிசி நிர்வாகம் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்துள்ளது. 2ஆம் இடத்தில் நியூசிலாந்து அணி பிடித்துள்ளது. முதல் மூன்று இடத்தில் உள்ள அணிகளுக்கு வித்தியாசம் ஒரு புள்ளி மட்டும் தான்.
ஆஸ்திரேலிய அணி 116 ரேட்டிங் உடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 115 ரேட்டிங்குடன் நியூசிலாந்து 2ஆம் இடத்திலும், 3ஆம் இடத்தில் இந்தியா 114 ரேட்டிங்கை பெற்றும் உள்ளன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து (105), இலங்கை (91), தென்னாப்பிரிக்கா (90), பாகிஸ்தான் (86), வெஸ்ட் இண்டீஸ் (79) அணிகள் இடம்பெருகின்றன.
இந்திய அணி 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் முதலிடத்தை இழந்துள்ளது. அதுவும் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் இழந்துள்ளது.
2003ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தரவரிசை கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் முதல் 3 இடத்தில் இருக்கும் அணிகள் ஒரு புள்ளி இடைவெளியுடன் இருப்பது இது 2- வது முறையாகும். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முறையே ஒரு புள்ளி இடைவெளியுடன் முதல் மூன்று இடத்தை பிடித்தன என்பது நினைவுகூறத்தக்கது.
டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற இருந்த உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை ரத்து செய்வதற்கு பணம் செலுத்தாததுதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு (2021) உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு வழங்கி இருந்த உரிமத்தை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ரத்து செய்ததுடன், அந்த போட்டியை நடத்தும் உரிமையை செர்பியாவுக்கு வழங்கியது.
அத்துடன் இந்த போட்டி உரிமத்துக்கான கட்டணத்தை (ரூ.30 கோடி) கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதிக்குள் செலுத்த தவறிய இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு ரூ.3.75 கோடியை அபராதமாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விதித்துள்ளது. செர்பியாவில் உள்ள சர்வதேச குத்துச்சண்டை சங்க வங்கி கணக்குக்கு, இந்தியாவில் உள்ள வங்கியில் இருந்து பணபரிமாற்றம் செய்வதில் உள்ள பிரச்சினையை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தீர்த்து வைக்காமல், போட்டிக்கான உரிமத்தை ரத்து செய்து இருப்பது அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிப்பதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அபய்சிங் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது.
இதுகுறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘டெல்லியில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இன்னும் கட்டவில்லை. போட்டி முடிந்து 18 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பாக்கி தொகை எங்களுக்கு வரவில்லை.
செர்பியாவில் உள்ள எங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. பாக்கி தொகை குறித்து இத்தனை காலம் பொறுமை காத்தும், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் எங்களுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி நடந்து கொள்ளவில்லை. எனவே மேலும் நிதி இழப்பை சந்திக்க வேண்டாம் என்று கருதியே இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு வழங்கிய போட்டி உரிமத்தை ரத்து செய்தோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானாகவும் திகழ்ந்த சுனி கோஸ்வாமி மாரடைப்பால் காலமானார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான சுனி கோஸ்வாமி கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
இந்திய கால்பந்து உலகில் பிரபலமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், சுனி கோஸ்வாமி. ஒருங்கிணைந்த பெங்காலில் உள்ள கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் (தற்போது வங்காளதேசத்தில் உள்ளது) 1938-ம் ஆண்டு பிறந்த கோஸ்வாமி இளம் வயதிலேயே கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டார். மோகன் பகான் கிளப்பில் இணைந்த அவர் அதில் சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார்.
1962-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் சுனி கோஸ்வாமி தலைமையிலான இந்திய கால்பந்து அணி தங்கப்பதக்கத்தை வென்றது, அவரது கால்பந்து வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது. அதில் தெற்கு வியட்நாம் அணிக்கு எதிரான அரைஇறுதியில் 2 கோல் அடித்த கோஸ்வாமி, தென்கொரியாவுக்கு எதிரான இறுதிஆட்டத்தில் ஒரு கோல் அடிக்க உதவிகரமாக இருந்தார்.
மோகன் பகான் அணிக்கும் 5 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டு இருப்பதுடன் அந்த கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் சுனி கோஸ்வாமி (145 கோல்கள்) தற்போதுவரை முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது அருமையான கால்பந்து ஆட்டத்தை பார்த்து இங்கிலாந்தை சேர்ந்த டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப் அந்த சமயத்தில் அவருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார்.
கடைசி வரை மோகன் பகான் கிளப்புக்காக மட்டுமே ஆடினார். இந்திய கால்பந்து அணிக்காக 50 ஆட்டங்களில் களம் இறங்கி இருக்கிறார். இதில் 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்றதும் அடங்கும்.

சுனி கோஸ்வாமி பற்றி இன்னொரு ஆச்சரியமும் உண்டு. கால்பந்து தவிர, கிரிக்கெட்டிலும் திறமைசாலியாக காணப்பட்டார். கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக 1962-63-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை ஆடினார். 46 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 1,592 ரன்கள் எடுத்திருப்பதுடன், 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1972-ம் ஆண்டு அவரது தலைமையிலான பெங்கால் அணி ரஞ்சி கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.
1962-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார். விளையாட்டில் அவர் அளித்த சேவையை பாராட்டி மத்திய அரசு 1963-ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1983-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது. கடந்த ஜனவரி மாதம் அவரது 82-வது பிறந்த நாளையொட்டி தபால்துறை அவரது நினைவு தபால் தலையை வெளியிட்டு கவுரவித்தது. சுனி கோஸ்வாமியின் மறைவுக்கு கால்பந்து வீரர்களும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.
ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.
அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ஆஷ்டோன் அகர், ஜோ பேர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வடே, டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.