என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.
    ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.

    அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ஆஷ்டோன் அகர், ஜோ பேர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வடே, டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
    பிரான்சில் கால்பந்து போட்டிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது முதல் இடத்தில் இருக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் லீக்-1 சாம்பியனாகிறது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி போன்ற நாடுகள் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் நடத்த முயற்சி செய்யப்பட்டு வருகின்றன.

    ஆனால் ஏற்கனவே பெல்ஜியம் கால்பந்து லீக் தொடரை ரத்து செய்து விட்டது. பிரான்ஸ் பிரதமர் செப்டம்பர் மாதம் வரை கால்பந்து போட்டிகள் நடைபெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    இதனால் பிரான்ஸ் நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான லீக்-1 இனிமேல் நடைபெற வாய்ப்பில்லை. தற்போது வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் டி மார்செய்ல் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையில் 12 புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை சாம்பியனாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கடைசி 8 வருடங்களில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருக்கிறது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்.
    அந்த்ரே ரஸல் ஆட்டத்தை பார்க்கும்போது ஹைலைட்ஸ் போன்று இருந்தது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸல் விளையாடி வருகிறார்.

    கடந்த 2019 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெரும்பாலான போட்டிகளில் அதிரடி ஆட்டம் மூலம் தனி நபராக போட்டியை வெற்றி பெற வைத்தார். இவருடன் இளம் வீரரான ஷுப்மான் கில்லும் விளையாடினார்.

    இவரிடம் அந்த்ரே ரஸல் உடன் இணைந்து பேட்டிங் செய்யும்போது கிடைத்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கூற முடியுமா? என்று கொல்கத்தா நைட் ரைடஸ் அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் கேட்டிருந்தது.

    அதற்கு ஷுப்மான் கில் ‘‘மறுமுனையில் இருந்து அந்த்ரே ரஸல் அதிரடியை பார்க்கும்போது, டி.வி.யில் ஹைலைட்ஸ் பார்ப்பது போன்று இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த்ரே ரஸல் 14 போட்டிகளில் 510 ரன்கள் விளாசினார். இதில் 52 சிக்சர்கள், 31 பவுண்டரிகள் அடங்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 40 பந்தில் 80 ரன்களும், ஆர்.சி.பி.-க்கு எதிராக 13 பந்தில் 48 ரன்களும் விளாசினார்.
    வார்னே பந்தில் மோசமான வகையில் ஆட்டமிழந்ததால் சச்சின் தெண்டுல்கர் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார்.
    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உடன் நீண்ட காலம் விளையாடிய வீரர்களில் ஒருவர் விவிஎஸ் லக்‌ஷ்மண். தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளதால், விளையாடிய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை சச்சின் vs வார்னே என்றே அழைக்கப்படும். சச்சினை வார்னே அவுட்டாக்குகிறாரா, வார்னேவை சச்சின் விளாசுகிறாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள்.

    1998-ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அரவுண்ட் ஸ்டம்பில் இருந்து வார்னே பந்து வீசினால் திறமையாக எதிர்கொள்வதற்காக சச்சின் உள்ளூர் லெக் ஸ்பின்னர்களை வைத்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டார்.

    ஆனால் போட்டியின்போது வார்னர் பந்தில் மோசமான வகையில் ஆட்டமிழந்ததால் சச்சின் தெண்டுல்கர் அறைக்குள் பூட்டிக்கொண்டு வெளியே வரவில்லை என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார்.

    இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘சென்னை போட்டிக்காக சச்சின் தெண்டுல்கர் நல்ல நிலையில் தயாராகியிருந்தார். முதல் இன்னிங்சில் சச்சின் தெண்டுல்கர் நான்கு ரன்னில் ஆட்டமிழந்தார். பவுண்டரி அடித்த பின்னர், மிட்-ஆன் திசையில் பிக் ஷாட்டுக்கு முயற்சி செய்தார். டர்ன் ஆகிய பந்து பேட்டில் சரியாக படாததால் மார்க் டெய்லரிடம் கேட்ச் கொடுத்தார்.

    அதன்பின் பிசியோவின் அறைக்குச் சென்ற சச்சின் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து கொண்டார். ஒரு மணி நேரத்திற்குப்பின் வெளியே வந்தார். வெளியே வந்த அவரை நாங்கள் பார்க்கும்போது, அவரது கண்கள் சிவந்து இருந்தது. அவுட்டான விதம் குறித்து மிகவும் கவலை அடைந்திருப்பார் என்று நினைத்தேன்’’ என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
    ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றால், வெறிச்சோடிய மைதானத்தில் விளையாட வேண்டும் என்றாலும் நாங்கள் தயார் என ரகானே தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் ஆன ரகானே நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல் 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் என கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையில் உள்ளனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்புள்ளது.

    வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றால் அப்படியே போட்டியை நடத்தலாம் என ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘நம்முடைய வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஏறக்குறைய வெறிச்சோடிய மைதானத்தில்தான் விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு அப்படி விளையாடிய அனுபவம் உள்ளது.

    ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதால் எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்களின் பாதுகாப்புதான் முக்கியம். அவர்கள் வீட்டில் இருந்து கூட லைவ் போட்டியை காணலாம். இந்த மாறுபட்ட அனுபவத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் ’’ என்றார்.
    2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார்.
    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனி ரோவில் நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    கொரோனா வைரஸ் 2021-க்குள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

    கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப் படுத்தப்படாத வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறாது. ஜப்பானில் அவசர நிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்ததால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்த நாள். பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இன்று தன்னுடைய 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், மூன்று இரட்டை சதங்கள் குவித்த வீரருக்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    பிசிசிஐ, ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடைய டெஸ்ட் அறிமுக போட்டியில் கலந்து கொண்ட வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டது. “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹிட்மேன் @ImRo45, ஸ்பெஷல் நாளான இன்று வெள்ளை உடையில் ஹிட்மேனின் அற்புதமான ஆட்டம். இது அவர் விளையாட விரும்பும் களங்களில் ஒன்று - கொல்கத்தா #HappyBirthdayRohit,” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ரோகித் சர்மாவின் பிறந்தநாளில் முதலில் வாழ்த்து தெரிவித்தவர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோகித்! இந்த மோசமான காலங்களில் உங்களுக்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஒரு கேக் தயாரியுங்கள். @ImRo45 #HappyBirthdayRohit,” என்று சுரேஷ் ரெய்னா டுவிட் செய்தார்.

    ரெய்னாவைத் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் டபுள் செஞ்சுரி நாயகன் ஹிட் மேன் ரோகித் சர்மா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    ரோகித் சர்மாவின் மனைவி, அவரது  இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:-

    நான் சுவாசிக்க முடியாத வரை என்னை சிரிக்க வைக்கும் ஒருவருக்கு, எனக்கு பிடித்த பயணத் தோழருக்கு, என் சிறந்த நண்பருக்கு, சிறந்த அப்பாவுக்கு, அவரது வாழ்க்கை சார்ந்து இருந்தாலும் பாட முடியாத ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் விரும்பிய மிகச் சிறந்த, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோ.

    இவ்வாறு ரோகித் சர்மா மனைவி அதில் தெரிவித்துள்ளார்.
    தனக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் வீரர்களில் இருந்து மிகச்சிறந்த 11 எதிரிகளை மைக் ஹஸ்சி தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி. 2005-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அந்த அணிக்காக 79 டெஸ்ட் போட்டியில் விளையாடி 19 சதம் உள்பட 6,235 ரன்கள் சேர்த்து இருக்கிறார். தனக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் வீரர்களில் இருந்து மிகச்சிறந்த 11 எதிரிகளை அவர் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரை கவர்ந்த எதிரி வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), கிரேமி சுமித், காலிஸ், ஸ்டெயின், மோர்னே மோர்கல் (4 பேரும் தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா, முரளிதரன் (இலங்கை), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோருக்கும் ஹஸ்சி இடம் வழங்கியுள்ளார். இது குறித்து 44 வயதான ஹஸ்சி கூறுகையில், ‘விக்கெட் கீப்பர் இடத்திற்கு சங்கக்கரா, டோனி, டிவில்லியர்ஸ் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய நான் மல்லுக்கட்ட வேண்டி இருந்தது. டோனி, டிவில்லியர்சை பொறுத்தவரை 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் சங்கக்கரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். அதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கினேன்’ என்றார்.

    இதற்கிடையே, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தன்னுடன் ஆடிய மற்றும் தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த லெவன் அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் சங்கக்கரா (இலங்கை), பிரெட் லீ (ஆஸ்திரேலியா) தவிர மற்ற 9 பேரும் தென்ஆப்பிரிக்க நாட்டவரே இடம் பிடித்துள்ளனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு இந்தியருக்கு கூட அவர் தனது கனவு அணியில் இடம் கொடுக்கவில்லை.
    சாத்தியம் இருந்தால் வரும் நாட்களில் தடைப்பட்ட கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் விட்டு விடலாம் என பிபா மருத்துவ கமிட்டி தலைவர் யோசனை கூறியுள்ளார்.
    லண்டன்:

    ஐரோப்பிய லீக், லா லிகா, சீரி ஏ லீக், பிரிமீயர் லீக், பண்டஸ்லிகா என்று வெளிநாடுகளில் நடக்கும் பிரபலமான கிளப் கால்பந்து போட்டிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலால் பாதியிலேயே நிற்கின்றன. எஞ்சிய போட்டிகளை மீண்டும் தொடங்க ஒரு சில கால்பந்து சம்மேளனங்கள் முயற்சித்து வருகின்றன.

    இது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) மருத்துவ கமிட்டி தலைவர் மைக்கேல் டி ஹூகே கூறுகையில், ‘சாத்தியம் இருந்தால் வரும் நாட்களில் கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை. இப்போது கால்பந்து போட்டிகளை தொடங்கினால் அது மிகப்பெரிய ‘ரிஸ்க்’ ஆகி விடும்.

    இந்த சீசனில் மீதமுள்ள ஆட்டங்களை இத்துடன் தவிர்த்து விட்டு, புதிய சீசனுக்கான போட்டிகளை சிறந்த முறையில் தொடங்க தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் விளையாட முடிவு எடுக்கும் முன்பு ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் இருக்க தனக்கு அழைப்பு வந்தது என்று அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
    மும்பை:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஆனாலும் அவர் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருக்கும் 36 வயதான டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது விருப்பத்தை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    தற்போது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. தென்ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘டிவில்லியர்ஸ் நல்ல பார்மில் இருப்பதை நிரூபித்தால் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படுவார்’ என்று தெரிவித்து இருந்தார்.

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஆனாலும் அவர் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருக்கும் 36 வயதான டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது விருப்பத்தை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    தற்போது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. தென்ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘டிவில்லியர்ஸ் நல்ல பார்மில் இருப்பதை நிரூபித்தால் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படுவார்’ என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

    ‘தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க தான் செய்கிறது. மேலும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் வகிக்க முடியுமா? என்று கேட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணிக்கு நான் திரும்ப வேண்டுமென்றால் உயர்வான பார்மில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களை விட நான் சிறப்பாக இருக்க வேண்டியதும் அவசியமானதாகும். அணியில் இடம் பெறுவதற்கு தகுதியான பார்மில் இருப்பதாக நான் உணர்ந்தால் தான், ஆடும் லெவன் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு என்னால் எளிதாக வர முடியும்.

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் நான் சிறிது காலம் இடம் பெறவில்லை. எனவே தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற இன்னும் தகுதியானவர் என்பதை நானும், மற்றவர்களும் உணர வேண்டியது முக்கியமானதாகும். தற்போது நம்மை சுற்றி கொரோனா வைரஸ் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே வருங்கால போட்டி அட்டவணையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

    ‘தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க தான் செய்கிறது. மேலும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் வகிக்க முடியுமா? என்று கேட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணிக்கு நான் திரும்ப வேண்டுமென்றால் உயர்வான பார்மில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களை விட நான் சிறப்பாக இருக்க வேண்டியதும் அவசியமானதாகும். அணியில் இடம் பெறுவதற்கு தகுதியான பார்மில் இருப்பதாக நான் உணர்ந்தால் தான், ஆடும் லெவன் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு என்னால் எளிதாக வர முடியும்.

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் நான் சிறிது காலம் இடம் பெறவில்லை. எனவே தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற இன்னும் தகுதியானவர் என்பதை நானும், மற்றவர்களும் உணர வேண்டியது முக்கியமானதாகும். தற்போது நம்மை சுற்றி கொரோனா வைரஸ் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே வருங்கால போட்டி அட்டவணையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இவர் ஓய்வு பெற்ற காலத்தில் இருந்து தற்போது வரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் நல்லுணர்வுடன் இருந்தது கிடையாது.

    தனியாக ‘யூ டியூப்’ சேனல் நடத்தி வருகிறார். அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு குறித்து அடிக்க விமர்சனம் செய்து வருகிறார்.

    பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமர்சனம் செய்த அக்தர், சட்டத்துறையில் உள்ளவர்கள் குறித்து மோசமாக பேசியதாக தெரிகிறது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் ரிஸ்வி தனிப்பட்ட முறையில் சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், எஃப்.ஐ,ஏ. சைபர் கிரைம் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.

    சட்ட சகோதரத்துவம் பற்றி பேசும்போது அக்தர் கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், அக்தரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தாங்க முடியாத சச்சின் தெண்டுல்கர் வீரர்கள் அறையில் கண்ணீர் விட்டு அழுதார் என கங்குலி தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. சச்சின் - கங்குலி ஜோடி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. கிரிக்கெட்டில் சிறந்த ஜோடியை கணக்கிட்டால் சச்சின் - கங்குலி ஜோடியை புறந்தள்ளி விட முடியாது.

    சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக பெரும்பாலான சாதனைகளை படைத்துவிட்டார். ஆனால் கேப்டன் பதவியில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. இதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    சச்சின் கேப்டனாக இருந்தபோது சவுரங் கங்குலி இந்திய அணியின் புதுமுகம். 1996-97-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்டில் தொடரில் விளையாடியது.

    முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. 3-வது டெஸ்டில் இந்தியாவுக்கு 120 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்படியாவது சேஸிங் செய்து 1990-களில் வெளிநாட்டில் தொடரை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுவிடலாம் என நினைத்தார். ஆனால் இந்தியா 81 ரன்னில் சுருண்டது.

    அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 1-0 எனத் தொடரை கைப்பற்றியது.

    போட்டியில் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் சச்சின் தெண்டுல்கர் வீரர்கள் அறையில் கண்ணீர் விட்டு அழுதார். இந்த ஒரு முறைதான் அவர் அழுதார் என்று கங்குலி நினைவு கூர்ந்துள்ளார்.

    போட்டியின்போது ‘‘தெண்டுல்கர் என்னிடம் அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க வேண்டுமென்றால், காலையிலேயே எழுந்து நன்றாக ஓட வேண்டும் எனக் கூறினார்’’ என்றார்.

    சச்சின் தெண்டுல்கர் கேப்டன் பதவியில் இருந்த விலகிய பின் சவுரங் கங்குலி 2000-த்தில் கேப்டன் பதவியை ஏற்றார். இந்திய அணி மேட்ச் பிக்சிங்கால் ஈடுபட்டு சீரழிந்த நிலையில் அணியை திறம்பட வழி நடத்தி சென்று தலைநிமிரச் செய்தவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.
    ×