search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் பிரதமர்
    X
    ஜப்பான் பிரதமர்

    2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகம் - ஜப்பான் பிரதமர் தகவல்

    2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார்.
    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனி ரோவில் நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    கொரோனா வைரஸ் 2021-க்குள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

    கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப் படுத்தப்படாத வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறாது. ஜப்பானில் அவசர நிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்ததால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×