search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே
    X
    ரகானே

    எங்களுக்கு ஒன்றுமில்லை, ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றால் சரி: ரகானே சொல்கிறார்

    ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றால், வெறிச்சோடிய மைதானத்தில் விளையாட வேண்டும் என்றாலும் நாங்கள் தயார் என ரகானே தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் ஆன ரகானே நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல் 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் என கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையில் உள்ளனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்புள்ளது.

    வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றால் அப்படியே போட்டியை நடத்தலாம் என ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘நம்முடைய வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஏறக்குறைய வெறிச்சோடிய மைதானத்தில்தான் விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு அப்படி விளையாடிய அனுபவம் உள்ளது.

    ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதால் எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்களின் பாதுகாப்புதான் முக்கியம். அவர்கள் வீட்டில் இருந்து கூட லைவ் போட்டியை காணலாம். இந்த மாறுபட்ட அனுபவத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் ’’ என்றார்.
    Next Story
    ×