search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண்
    X
    சச்சின் தெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண்

    வார்னே பந்தில் ஆட்டம் இழந்த பின்னர் சச்சின் செய்த காரியம்?: நினைவு கூர்ந்த விவிஎஸ் லக்‌ஷ்மண்

    வார்னே பந்தில் மோசமான வகையில் ஆட்டமிழந்ததால் சச்சின் தெண்டுல்கர் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார்.
    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உடன் நீண்ட காலம் விளையாடிய வீரர்களில் ஒருவர் விவிஎஸ் லக்‌ஷ்மண். தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளதால், விளையாடிய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை சச்சின் vs வார்னே என்றே அழைக்கப்படும். சச்சினை வார்னே அவுட்டாக்குகிறாரா, வார்னேவை சச்சின் விளாசுகிறாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள்.

    1998-ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அரவுண்ட் ஸ்டம்பில் இருந்து வார்னே பந்து வீசினால் திறமையாக எதிர்கொள்வதற்காக சச்சின் உள்ளூர் லெக் ஸ்பின்னர்களை வைத்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டார்.

    ஆனால் போட்டியின்போது வார்னர் பந்தில் மோசமான வகையில் ஆட்டமிழந்ததால் சச்சின் தெண்டுல்கர் அறைக்குள் பூட்டிக்கொண்டு வெளியே வரவில்லை என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார்.

    இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘சென்னை போட்டிக்காக சச்சின் தெண்டுல்கர் நல்ல நிலையில் தயாராகியிருந்தார். முதல் இன்னிங்சில் சச்சின் தெண்டுல்கர் நான்கு ரன்னில் ஆட்டமிழந்தார். பவுண்டரி அடித்த பின்னர், மிட்-ஆன் திசையில் பிக் ஷாட்டுக்கு முயற்சி செய்தார். டர்ன் ஆகிய பந்து பேட்டில் சரியாக படாததால் மார்க் டெய்லரிடம் கேட்ச் கொடுத்தார்.

    அதன்பின் பிசியோவின் அறைக்குச் சென்ற சச்சின் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து கொண்டார். ஒரு மணி நேரத்திற்குப்பின் வெளியே வந்தார். வெளியே வந்த அவரை நாங்கள் பார்க்கும்போது, அவரது கண்கள் சிவந்து இருந்தது. அவுட்டான விதம் குறித்து மிகவும் கவலை அடைந்திருப்பார் என்று நினைத்தேன்’’ என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×