என் மலர்
விளையாட்டு
ஜாம்பவானுக்கு விடுத்த சவால் தவறானது என்றும் கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
மும்பை:
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பந்தை பேட்டின் விளிம்பால் மேல்வாக்கில் 25-க்கும் அதிகமான ஷாட்டுகள் இடைவிடாமல் அடித்து ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதை சவாலாக ஏற்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இதே போல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

அதற்கு யுவராஜ் சிங், ‘ஜாம்பவானுக்கு (தெண்டுல்கர்) நான் விடுத்த சவால் தவறானது என்பதை அறிவேன். கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, ரோகித் சர்மா பேட்டின் கைப்பிடியால் பந்தை மேல்வாக்கில் அடிக்கும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சக வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ரஹானே ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு இந்த சவாலை ஏற்கும்படி கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பந்தை பேட்டின் விளிம்பால் மேல்வாக்கில் 25-க்கும் அதிகமான ஷாட்டுகள் இடைவிடாமல் அடித்து ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதை சவாலாக ஏற்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இதே போல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் அவரது சவாலை ஏற்று தெண்டுல்கர் சற்று வித்தியாசமாக களம் இறங்கி இருக்கிறார். தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு பார்க்காமலேயே சிறிது நேரம் பேட்டின் விளிம்பால் பந்தை தொடர்ச்சியாக மேலே தட்டிவிட்டபடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘யுவராஜ்.... உங்களுக்கு சவாலை திருப்பி அனுப்புகிறேன். ஆனால் இங்கு ஒரு திருப்பம் வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு எளிதான வாய்ப்பை வழங்கினீர்கள். நான் கடினமான சவாலை அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரோகித் சர்மா பேட்டின் கைப்பிடியால் பந்தை மேல்வாக்கில் அடிக்கும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சக வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ரஹானே ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு இந்த சவாலை ஏற்கும்படி கூறியுள்ளார்.
ரசிகர்கள் இன்றி விளையாட்டு மைதானங்கள் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதால் விளைாட்டு வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதில் ஒன்று ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்களையும், விளையாட்டு காம்ப்ளக்ஸ்களையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதனால் கடந்த 54 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குச் சென்று வழிகாட்டு நெறிமுறையின்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டிகளைக் கூட நடத்தலாம்.
வீரர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு சாத்தியமா? என்ற கேள்வு எழுந்துள்ளது.
ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்வதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவது சாத்தியம் இல்லாதது. அதையும் மீறி வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற சாத்தியம் இல்லை.
வங்கதேசத்தில் மட்டும் தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிறுவர்கள் அவர்களை தங்களின் ஆதர்ஷ புருஷர்களாக பார்த்து ஆராதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகளவில் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமை இது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு.
இந்நிலையில், வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். வங்கதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும்.
ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள வங்கதேச அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி கோபம் அடைந்ததை 2 முறை பார்த்து இருக்கிறேன் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து சமீபகாலமாக பல கிரிக்கெட் வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்திய அணிக்கு 2 உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் அவர் தலைமையிலான அணி கைப்பற்றியது.
கிரிக்கெட் உலகில் டோனியை “கேப்டன் கூல்” என்று பொதுவாக அழைப்பது உண்டு. அதாவது மிகவும் நெருக்கடியான நேரத்தில் கூட அவர் பொறுமையை இழக்க மாட்டார். மேலும் சக வீரர்களை கடுமையாக பேசமாட்டார்.
தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். மிக முக்கியமாக மைதானத்தில் போட்டியின்போது கோபப்படமாட்டார். ஆனால் சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவங்கள் நடந்தாலும் மற்ற கேப்டன்களை ஒப்பிடுகையில் டோனி கூல் கேப்டன் தான்.
இந்த நிலையில் டோனி கோபம் அடைந்ததை 2 முறை பார்த்து இருக்கிறேன் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;-
டோனி பொதுவாக கோபப்படமாட்டார் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.
2007 மற்றும் 2011 உலக கோப்பையில் சில நேரங்களில் நாங்கள் சிறப்பாக ஆடாத போது டோனி கோபப்பட்டு இருக்கிறார்.
அவரும் மனிதர்தானே. அவருக்கு வரும் கோபம் நியாயமானதாகவே இருக்கும். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது.
ஐ.பி.எல்.போட்டிகளின் போது பீல்டிங்கை சரி செய்யாத வீரர்கள் மீதும் கோபப்பட்டு இருக்கிறார்.
ஆனாலும் டோனி அமைதியானவர் தான். உலகில் மற்ற கிரிக்கெட் கேப்டன்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் டோனி நிதானமானவர்தான். கேப்டன் கூல் தான்.
2011 உலக கோப்பை இறுதி போட்டியில் காம்பீர்- டோனி ஜோடியின் ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் ஜெர்மனியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.
பெர்லின்:
ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் பிரபலமான கிளப் கால்பந்து போட்டிகளில் பன்டெஸ்லிகாவும் ஒன்று. இந்த போட்டி ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடத்தப்படுகிறது. இதன்படி விறுவிறுப்பாக நடந்து வந்த 57-வது பன்டெஸ் லிகா கால்பந்து தொடர் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் 13-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. வீரர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்ததை தொடர்ந்து பன்டெஸ்லிகா போட்டியை நடத்த அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் ஜெர்மனி அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதலோடு பன்டெஸ்லிகா போட்டி இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தாக்கத்துக்கு இடையே நடத்தப்படும் முதல் பெரிய போட்டி இது தான்.
இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். நடப்பு சாம்பியன் பயர்ன் முனிச் 55 புள்ளிகளுடன் முதலிடத்திலும் (17 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி), போரசியா டார்ட்மன்ட் 51 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லிப்ஜிக் 50 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணைப்படி அடுத்த மாதம் 27-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் ஆட்டங்கள் நடக்கும். வழக்கமாக ஒவ்வொரு ஆட்டத்திலும் 3 மாற்று ஆட்டக்காரர்களை பயன்படுத்தலாம். இந்த எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தி சமீபத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. இதன்படி இந்த போட்டியில் முதல்முறையாக 5 மாற்று ஆட்டக்காரர்கள் வரை பயன்படுத்தப்பட உள்ளனர்.
இன்று 6 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் டார்ட்மன்ட்-எப்.சி.ஸ்கால்க் (இரவு 7 மணி), லிப்ஜிக்-பிரைபர்க் (இரவு 7 மணி), என்ட்ராச்-எம் கிளாட்பேச் (இரவு 10 மணி) ஆகிய அணிகளின் மோதலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
ரசிகர்கள் அதிகளவில் ஒன்று கூடும் போது கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் யாரும் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஸ்டேடியம் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளன. போட்டி ஏற்பாட்டாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒளிபரப்பு தாரர்கள், ஊடகத்தினர், நடுவர்கள், கால்பந்து நிர்வாகிகள், மருத்துவ உதவியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பந்து எடுத்து போடும் சிறுவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகபட்சமாக 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. களத்தில் உள்ள வீரர்கள், நடுவர்கள் தவிர அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், வீரர்களுடன் கைகுலுக்கக்கூடாது, கோல் அடிக்கும் போது மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து கொண்டாடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஓய்வு பெறுவதற்குள் பெடரர், நடாலின் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சிறப்பை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜோகாவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெல்கிரேடு:
டென்னிசில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (19), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (17) ஆகியோர் உள்ளனர். 38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை.
இதே சமயம் சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் கடைசி 6 கிராண்ட்ஸ்லாமில் 4-ஐ கைப்பற்றி இருக்கிறார். ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வரும் 32 வயதான ஜோகோவிச் அளித்த ஒரு பேட்டியில், ‘எனக்கு என் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. ஓய்வு பெறுவதற்குள் பெடரர், நடாலின் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சிறப்பை என்னால் எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதே போல் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையையும் என்னால் படைக்க முடியும். இவற்றை அடைவது தான் எனது இலக்கு. 40 வயது வரை கூட நான் விளையாடலாம்’ என்றார்.

நிதி இழப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளிபோடப்பட்டும் இருக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. நிதி பிரச்சினையை எதிர்கொண்டு திறம்பட கடந்து செல்ல முடியும் என்று நம்புகிறோம். ஐ.பி.எல். போட்டி நடக்காமல் போனால் அது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாகும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் சம்பள பிடித்தம் குறித்து சிந்திப்போம். ஆனால் அது கடைசியான வாய்ப்பாக தான் இருக்க முடியும்.
வீரர்களின் சம்பளத்தை குறைக்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை எல்லாம் நாங்கள் செய்வோம். ஊழியர்கள் சம்பளம் உள்பட மற்ற செலவினங்களை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் நிதி இழப்பை சரிகட்டும் வகையில் எங்களது வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறோம்‘ என்று தெரிவித்துள்ளார்.

3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு:
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.
இந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) இலங்கை கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ-க்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
ஜூலை மாத இறுதியில் இலங்கை இந்தியா தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுங்கள். இதற்காக வீரர்கள் தனிமைப்படுத்துதல், ரசிகர்களின் நலனுக்காக காலி மைதானத்தில் கூட போட்டிகள் நடத்த தயாராக உள்ளோம். தயவுசெய்து இந்த தொடரை ரத்து செய்து விடாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதால் இலங்கைக்கு ஏற்கனவே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியும் பயணத்தை ரத்து செய்தால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்படும். இதன் காரணமாகவே தொடரை ரத்து செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சச்சின் தெண்டுல்கருக்கு சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதை போக்குகிறார். அவ்வப்போது சக வீரர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடுகிறார். இந்த நிலையில் அவர் புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பேட்ஸ்மேன்களான தெண்டுல்கர், ரோகித்துக்கு இவ்வாறு பந்தை அடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங்குக்கு சுலபமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதை போக்குகிறார். அவ்வப்போது சக வீரர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடுகிறார். இந்த நிலையில் அவர் புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கிரிக்கெட் மட்டையின் விளிம்பின் மூலம் பந்தை இடைவிடாமல் மேல்வாக்கில் தட்டிவிட்டு விளையாடுகிறார். இதை சவாலாக ஏற்று சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இது போன்ற வீடியோவை பதிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய விருது நடைமுறையை மாற்ற வேண்டும் என்று உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் அமித் பன்ஹால் விளையாட்டுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான அமித் பன்ஹால் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அர்ஜூனா, கேல்ரத்னா போன்ற தேசிய விருதுகளை பெறுவதற்கு தற்போதைய நடைமுறை என்னவென்றால் வீரர், வீராங்கனைகள் முதலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் விளையாட்டு கமிட்டி ஆராய்ந்து விருதுக்கு தேர்வு செய்யும்.
இதில் நிறைய பாகுபாடான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. விருதுக்கு தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டதும், பிறகு அவர்கள் நீதிமன்றத்தை அணுகியதும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. விருது நடைமுறை வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். உலகில் பெரும்பாலான உயரிய விருதுகள் வீரர்கள் விண்ணப்பம் அனுப்பி கேட்காமலேயே அவர்களது விளையாட்டு சாதனைகளை பார்த்து வழங்கப்படுகின்றன.
கேட்காமலேயே விருதுகளை வழங்குவது தான் அச்சாதனைக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம். எனவே தற்போதைய விருது நடைமுறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதில் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அமித் பன்ஹாலுக்கு அர்ஜூனா விருது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தொடர் நடைபெறாமல் போனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,480 கோடி இழப்பு ஏற்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டி தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இந்த போட்டி தொடரின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அந்த நாட்டு அரசுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கடந்த மாதம் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5 போட்டிகள் கொண்டதாக நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இரு வாரியங்களுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. இந்த சீசனில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுமா? என்று உறுதியாக சொல்ல முடியாது. வருங்காலத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்துவது குறித்து விவாதித்து இருக்கிறோம். இது அடுத்த வருங்கால அட்டவணையில் சாத்தியமாகலாம்‘ என்று கூறியிருந்தார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 5 போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஒருநாள் போட்டி தொடரும் நடைபெறுகிறது. அத்துடன் இந்த பயணத்தின் போது வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் இந்த போட்டி தொடரின் கால அளவை நீட்டிக்க செய்யும்‘ என்று பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘எங்களுடைய நிதி நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். எங்களது கைவசம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்த பிறகே ஒரு முடிவெடுக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பு மிகவும் பெரியதாகும். ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்தால் ஈர்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 1999-ம் ஆண்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் (ஆசிய சாம்பியன்ஷிப்) போட்டியில் கடைசி நாளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அந்த போட்டியில் விறுவிறுப்பு குறைவாக இருந்தது தெளிவாக தெரிந்தது. குறைவான ரசிகர்களை அனுமதித்து போட்டியை நடத்தினாலும், அவர்களை கண்காணிப்பதில் பல சிரமங்கள் உள்ளது‘ என்றார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த வாரத்தில் இருந்து வெளியில் சென்று பயிற்சியை தொடங்க வழிவகை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருப்பதால் மும்பையில் வசித்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தங்களது வெளிப்புற பயிற்சியை தொடங்குவது கடினம் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற நான், விவிஎஸ் லக்ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் ரசிகர்களும் காரணம் என டிராவிட் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிகளில் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான போட்டியும் ஒன்று.
இந்தியா முதல் இன்னிங்சில் பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா அழைத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ராகுல் டிராவிட் 180 ரன்கள் குவித்தார். விவிஎஸ் லக்ஷ்மண் 281 ரன்கள் விளாசினார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தனர். இதனால் இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் 384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா கடைசி நாளில் களம் இறங்கியது. தேனீர் இடைவேளைக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளைக்குப்பின் 46 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.
2-வது இன்னிங்சில் ஹாட்ரிக்குடன் ஹர்பஜன் சிங் விக்கெட்டுகளை வேட்டையாடினார். இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகியோர்தான் காரணம் எனக் கூறப்படும்.
ஆனால் ரசிகர்கள் அளித்த ஊக்கம்தான் முக்கிய காரணம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘கடைசி நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அங்கு நடைபெற்ற சூழ்நிலைதான் இந்தியா வெற்றி பெற காரணம்.

ஹர்பஜன் சிங் பந்து வீசி கொண்டிருந்தார். விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன. ரசிகர்களிடம் இருந்து ஆதரவு நம்பமுடியாத வகையில் இருந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள்தான் போட்டியில் வெற்றி பெற உதவியாக இருந்தார்கள். ஒவ்வொரு பந்திற்கும் பிறகு ஆதரவு, ஊக்கம், உற்சாகம் கொடுத்தார்கள். தற்போது கூட அதை என்னால் நினைவு கூர்ந்து சொல்ல முடியும். தற்போதுகூட அதை என்னால் உணர முடிகிறது.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நினைத்து பார்க்கக் கூடிய அளவில் அதிகமான விஷயங்கள் இல்லை. ஆனால், கொல்கத்தா டெஸ்டில் கடைசி நாள் தேனீர் இடைவேளிக்குப்பின் நடந்த அந்த சம்பவம். மைதானத்தில் நிகழ்ந்த அந்த சூழ்நிலை மற்றும் தீவிரம். கொல்கத்தா மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி இருந்தது’’ என்றார்.