என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.
அபுதாபி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே காட்ரெல் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் குவிண்டன் டி காக் டக் அவுட் ஆனார்.
அடுத் வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் 28 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பொல்லார்டு ரோகித் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. 17 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி ஹர்திக், பொல்லார்டு ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
20 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 47 ரன்களுடன் பொல்லார்டும், 11 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சர் உள்பட 30 ரன்களும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் கட்ரோல், ஷமி, கௌதம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கேப்டர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
18 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கருண் நாயர் 3 பந்துகளை சந்தித்து குர்னால் பாண்ட்யா பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் மும்பை வீரர் ராகுல் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 44 ரன்கள் குவித்து பேட்டிசன் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
மும்பை தரப்பில் பேட்டிசன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 88 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழப்பதற்கான காரணத்தை ராபித் உத்தப்பா விளக்கியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷார்ஜாவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 216 ரன்கள் அடித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 224 இலக்கை விரட்டி சாதனைப் படைத்தது.
ஆனால் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 175 இலக்கை எட்ட முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஷார்ஜா மைதானம் சிறியது. அதிரடி ஆட்டத்திற்கு ஏற்றது. ஆனால் துபாய் ஆடுகளம் சற்று ட்ரிக் ஆனது. கவனமாக விளையாட வேண்டும்.
88 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டை இழப்பதற்கான காரணம் குறித்து ராபித் உத்தப்பா கூறுகையில் ‘‘போட்டி செல்ல செல்ல ஆடுகளம் சற்று ஸ்லோவானது. பந்து சற்று நின்று வருவது போன்று இருந்தது. இதனால் நாங்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு ஆடுகளத்திற்கு ஏற்றபடி தங்களை தயார்படுத்திக் கொண்டு, அதன்பின் பந்து வீச்சாளர்களை அடித்து விளையாடியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம்’’ என்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா சுரேஷ் ரெய்னாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 5,000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 3-வது வீரராக, தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
மேலும், இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா 38 அரைசதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரோகித் சர்மா அவருடன் இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் 44 அரைசதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா 45 பந்தில் 70 ரன்கள் விளாச, டெத் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ருத்ர தாண்டவம் ஆட பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 13-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை காட்ரெல் வீசினார். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில டி காக் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத் வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமனையில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் 28 ரன்னில் வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 13.1 ஓவரில் 83 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து பொல்லார்டு களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 16.1 ஓவரில் 124 ரன்களாக இருக்கும்போது ரோகித் சர்மா 45 ஓவரில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. 17 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரில் பாண்ட்யா ஒரு சிகஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 18 ரன்கள் சேர்த்தது. 19-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ஒரு பவுண்டரி, பொல்லார்டு 3 பவுண்டரி விளாசி மும்பை அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது.
கடைசி ஓவரை கவுதம் வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசி 3 பந்துகளையும் பொல்லார்டு சிக்ஸ்க்கு அனுப்பினார். இந்த ஓவரில் 25 ரன்கள் அடித்தது. கடைசி 18 பந்தில் 62 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.
பொல்லார்டு 20 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 30 ரன்களும் எடுது்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப்பின் 5 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனைப் படைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 2 ரன்கள் அடித்தால் 5 ரன்கள் என்ற இலக்கை எட்டுவார் என்ற நிலையில், பவுண்டரி அடித்து இலக்கை எட்டினார்.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி 5,430 ரன்களுடனும் முதல் இடத்திலும், 5,368 ரன்களுடனும் சுரேஷ் ரெய்னா 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 45 பந்தில 70 ரன்கள் விளாசினார்.
ஐ.பி.எல். தொடரின்போது வீரர்கள் பயோ-பபுள் விதிமுறைகளை மீறினால் அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனோ வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்தி வருகிறது
கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் பயோ-பபுள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். இதில் இருக்கும் வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த கூடாது. ஒருவேளை வீரர்கள் விதிமுறையை மீறினால் ஆறுநாள் தனிமைப்படுத்தப் படுவார்கள். மீண்டும் விதிமுறையை மீறினால் ஒரு போட்டியில் தடைவிதிக்கப்படும். அதையும் மீறி மூன்றாவது முறையாக மீறினால் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள்.
சென்னை அணியின் கே.எம். ஆசிப் பயோ-பபுள் விதிமுறையை மீறியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் வீரர்களை வெளியே அனுமதித்தால் அந்த அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறையாக அனுமதித்தால் ஒரு புள்ளி திரும்பப் பெறப்படும் என்றும், மூன்றாவது முறையாக அனுமதித்தால் 2 புள்ளிகள், அதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் புள்ளிகள் கழிக்கப்படும் எனவும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித்தை பேட் கம்மின்ஸ் லோ-ஆர்டன் பேட்ஸ்மேன் போன்று தோற்றமளிக்க செய்து விட்டார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 174 ரன்கள் அடித்தது, பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒரு இடத்தில் இருக்கும் ஸ்மித்திற்கு எதிராக நம்பர் பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 2-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பட்லர் ஒரு ரன் அடித்தார்.
2-வது மற்றும் 3-வது பந்தை ஸ்மித்தால் தொட முடியவில்லை. 4-வது பந்தில் பேட்டில் உரசியது போன்று சென்றது. அனைத்து வீரர்களும் அப்பீல் கேட்க நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். தினேஷ் கார்த்திக் ரிவியூ கேட்கவில்லை.
அடுத்த பந்து பேட்டில் பட்டு மேலே சென்றது. அருகில் யாரும் இல்லை என்பதால் கேட்சில் இருந்து தப்பினார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது ஓவரிலேயே ஸ்மித்தை அவுட்டாக்கிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
முதல் போட்டியில் 3 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான பேட் கம்மின்ஸ் அடுத்த இரண்டு போட்டிகளில் அசத்தினார்.
இந்த போட்டியில் ஸ்மித்தை லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் போன்று தோற்றமளிக்க செய்து விட்டார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில் ‘‘ஸ்மித்திற்கு பந்து பேட்டின் உள்ளேயும், வெளியேயும் விளம்பில் பட்டுச் சென்றது. ஐந்தாவது பந்திலேயே ஆட்டம் இழந்திருக்க வேண்டும். ஆனால் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
பேட் கம்மின்ஸ் சிறப்பாகவும், குயிக்காகவும், துல்லியமாகவும் பந்து வீசினார். இதை ஸ்மித்தால் எதிர் கொள்ள முடியாது நிலை ஏற்பட்டது’’ என்றார்.
அபு தாபியில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக், 3, சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. கீரன் பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் பேட்டின்சன், 9. ராகுல் சாஹல், 10. போல்ட், 11. பும்ரா.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-
1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. நிக்கோலஸ் பூரன், 4. மேக்ஸ்வெல், 5. கருண் நாயர், 6. ஜேம்ஸ் நீசம், 7. சர்பராஸ் கான், 8. கிருஷ்ணப்பா கவுதம், 9. முகமது ஷமி, 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி பிஷ்னோய்.
எங்களுக்கு கிடைத்த ஆறு நாள் இடைவெளியை நன்றாக பயன்படுத்தினோம் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. 25-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
.ஆறு நாள் இடைவெளிக்குப்பின் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆறு நாள் இடைவெளியை நன்றாக பயன்படுத்தியுள்னோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘முதல் மூன்று போட்டிகள் அடுத்தடுத்து வந்த நிலையிலும், அனைத்து போட்டிகளும் மாறுபட்ட மைதானங்களில் நடந்த நிலையிலும் இந்த இடைவெளி கிடைத்தது நல்ல நேரம். சிதோஷ்ண நிலையை அறிய சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஒவ்வொரு அணிகளுக்கும் எதிராக முதல் அணியாக எதிர்த்து விளையாடுவது கடினமானதாக இருக்கும்.
ஆட்டத்திற்கு வெளியேயும் எங்களுக்கு சில சவால்கள் இருந்தன. இந்த இடைவெளியை நாங்கள் சிறந்த வகையில் பயன்படுத்திக் கொண்டோம். பயிற்சியை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றில் தெளிவை பெற்றுள்ளோம்’’ என்றோம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தப்பா தவறுதலாக பயன்படுத்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்தை பளபளப்பாக எச்சில் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் இரண்டு முறை எச்சரிக்க விடுத்த பின், ஐந்து ரன்கள் அபராதம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராபின் உத்தப்பா விதிமுறையை மறந்து தற்செயலாக எச்சில் பயன்படுத்திவிட்டார்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராபின் உத்தப்பா 7 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
Robin Uthappa just used saliva on the cricket ball. Is it not banned by @ICC#RRvKKR#IPL2020@bhogleharshapic.twitter.com/EWilsl9Z01
— बेरोज़गार (@ItsRaviMaurya) September 30, 2020
நியூசிலாந்தில் இருந்து இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் வராத பென் ஸ்டோக்ஸ் முதல் பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் முதல் பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.
அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேன் வார்னே நேற்றைய போட்டியின்போது அணியுடன் இணைந்தார்.
பென் ஸ்டோக்ஸ் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து வார்னே கூறுகையில் ‘‘எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்து மிகவும் வலுவான அணியாக தோன்றும்’’ என்றார்.
மேலும், ‘‘ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்குவது எனக்கு பிடித்திருக்கிறது. சிறந்த வீரர்களுக்கு அதிகமாக பந்துகள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். என்னை பொறுத்த வரைக்கும் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களில் களம் இறங்குவது சரியானதே’’ என்றார்.
ஐபிஎல் வீரர்களுக்கான பாதுகாப்பு வளையம் விதிமுறையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கே.எம்.ஆசிஃப் மீறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கொரோனா பாதிப்பிற்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் இந்த முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து வருகிறது. அத்துடன் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் இருவருக்கு கொரோனா வந்து அவர்கள் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் விதிதான் பயோ பபுள் (Bio-Bubble). இந்த விதியின்படி ஐபிஎல் வீரர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மட்டுமே செல்ல முடியும். பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களுக்கு வீரர்கள் செல்ல முடியாது. அதேபோல் இந்த பயோ பபுள் பகுதிக்குள் வெளி ஆட்கள் வர முடியாது.
ஐபிஎல் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் பயோ பபுள் இடங்களுக்கு வெளியே ஹோட்டலில் வேறு எந்த பகுதிக்கும் வீரர்கள் செல்லக்கூடாது. அதேபோல் போட்டி, பயிற்சி தவிர வேறு காரணங்களுக்காகவும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்ல முடியாது. இந்த சூழலில்தான் சிஎஸ்கே வீரரான கே.எம்.ஆசிப் இந்த விதியை மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிஎஸ்கே பயிற்சிக்கு சென்றுவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய ஆசிப் தன்னுடைய அறை சாவியை மைதானத்தில் மறந்து வைத்துவிட்டதால் புதிய சாவியை வாங்குவதற்காக ரிசப்ஷன் வந்துள்ளார். ஆனால் இந்த ரிஷப்ஷன் பகுதி இந்த பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் பகுதி என்பதால் இது விதிமீறல் மீறியதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், பயோ-பபுள் விதிமுறையை ஆசிஃப் மீறவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘உண்மை ஆராயப்பட்டதா? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ரிசப்சன் பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இருக்கிறது. சிஎஸ்கே வீரர்கள் சந்திக்கும் ஓட்டல் ஸ்டாஃப்கள் மாறுபட்டவர்கள். ஆசிப் அங்கே சென்று, வழக்கமான ஸ்டாஃப்களுடன் பேச முடியாது. வீரர்களுடன் அர்ப்பணிப்பான குழு வேலை செய்து வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆசிஃப் சாவியை தொலைத்து விட்டு, ரிசப்சன் சென்று கேட்டது உண்மை.
வழக்கமக பணிபுரியும் ஸ்டாஃப் இடம் சென்று அவர் சாவி கேட்டகவில்லை. இந்த விசயம் ஊதி பெரியதாக்கப்படுகிறது. உண்மையை மனதில் வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் மோசமானது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். உண்மையிலேயே வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் தங்கியுள்ள இடத்திற்கு என்னாலேயே செல்ல முடியாது. அதிகாரிகளிடமிருந்து அவர்களுடைய பபுள்ஸ் மாறுபட்டது.’’ என்றார்.






