search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட் கம்மின்ஸ், ஸ்மித்
    X
    பேட் கம்மின்ஸ், ஸ்மித்

    ஸ்மித்தை லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் போன்று தோற்றமளிக்க செய்துவிட்டார் பேட் கம்மின்ஸ்- பிராட் ஹாக்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித்தை பேட் கம்மின்ஸ் லோ-ஆர்டன் பேட்ஸ்மேன் போன்று தோற்றமளிக்க செய்து விட்டார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 174 ரன்கள் அடித்தது, பின்னர் 175 ரன்கள்  அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

    டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒரு இடத்தில் இருக்கும் ஸ்மித்திற்கு எதிராக நம்பர் பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 2-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பட்லர் ஒரு ரன் அடித்தார்.

    2-வது மற்றும் 3-வது பந்தை ஸ்மித்தால் தொட முடியவில்லை. 4-வது பந்தில் பேட்டில் உரசியது போன்று சென்றது. அனைத்து வீரர்களும் அப்பீல் கேட்க நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். தினேஷ் கார்த்திக் ரிவியூ கேட்கவில்லை.

    அடுத்த பந்து பேட்டில் பட்டு மேலே சென்றது. அருகில் யாரும் இல்லை என்பதால் கேட்சில் இருந்து தப்பினார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது ஓவரிலேயே ஸ்மித்தை அவுட்டாக்கிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

    முதல் போட்டியில் 3 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான  பேட் கம்மின்ஸ் அடுத்த இரண்டு போட்டிகளில் அசத்தினார்.

    இந்த போட்டியில் ஸ்மித்தை லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் போன்று தோற்றமளிக்க செய்து விட்டார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில் ‘‘ஸ்மித்திற்கு பந்து பேட்டின் உள்ளேயும், வெளியேயும் விளம்பில் பட்டுச் சென்றது. ஐந்தாவது பந்திலேயே ஆட்டம் இழந்திருக்க வேண்டும். ஆனால் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

    பேட் கம்மின்ஸ் சிறப்பாகவும், குயிக்காகவும், துல்லியமாகவும் பந்து வீசினார். இதை ஸ்மித்தால் எதிர் கொள்ள முடியாது நிலை ஏற்பட்டது’’ என்றார்.
    Next Story
    ×