search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீபன் பிளமிங்
    X
    ஸ்டீபன் பிளமிங்

    6 நாள் இடைவெளியை நன்றாக பயன்படுத்தினோம்: சிஎஸ்கே ஹெட் கோச்

    எங்களுக்கு கிடைத்த ஆறு நாள் இடைவெளியை நன்றாக பயன்படுத்தினோம் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. 25-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

    .ஆறு நாள் இடைவெளிக்குப்பின் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆறு நாள் இடைவெளியை நன்றாக பயன்படுத்தியுள்னோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘முதல் மூன்று போட்டிகள் அடுத்தடுத்து வந்த நிலையிலும், அனைத்து போட்டிகளும் மாறுபட்ட மைதானங்களில் நடந்த நிலையிலும் இந்த இடைவெளி கிடைத்தது நல்ல நேரம். சிதோஷ்ண நிலையை அறிய சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஒவ்வொரு அணிகளுக்கும் எதிராக முதல் அணியாக எதிர்த்து விளையாடுவது கடினமானதாக இருக்கும்.

    ஆட்டத்திற்கு வெளியேயும் எங்களுக்கு சில சவால்கள் இருந்தன. இந்த இடைவெளியை நாங்கள் சிறந்த வகையில் பயன்படுத்திக் கொண்டோம். பயிற்சியை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றில் தெளிவை பெற்றுள்ளோம்’’ என்றோம்.
    Next Story
    ×