என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும்.
    • 90- களில் நாங்கள் விளையாடியபோது, ​​அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகிறது.

    இந்த தொடரில் நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்திய பி அணி, தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் அளவுக்கு திறன் கொண்டது என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் அதுல் வாசன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும். ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர். இப்போது அவர்களை விட நாம் மிகச் சிறந்த அணியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அதுல் வாசன் கூறினார்.

    • நடைபந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர், சந்தீப் குமார் 2 மணி 39.15 நிமிடத்தில் கடந்து 23-வது இடத்தை பிடித்தார்.
    • பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பிரியங்கா 24-வது இடத்தை பிடித்தார்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை தொடங்கியது.

    ஆண்களுக்கான 35 கிலோ மீட்டர் நடைபந்தயம் முதலில் நடைபெற்றது. இதில் கனடா வீரர் டன்பி தங்கம் வென்றார். அவர் 2 மணி 28.22 நிமிட நேரத்தில் பந்தய தூரத்தை கடந்தார்.

    பிரேசிலை சேர்ந்த போன்பாம் வெள்ளிப்பதக்கமும் (2 மணி 28.55 நிமிடம்) ஜப்பான் வீரர், கட்சுகி வெண்கல பதக்கமும் (2 மணி 29.16 நிமிடம்) பெற்றனர். இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், சந்தீப் குமார் 2 மணி 39.15 நிமிடத்தில் கடந்து 23-வது இடத்தை பிடித்தார்.

    பெண்களுக்கான 35 கிலோ மீட்டர் தூர நடை பந்தயத்தில் ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரெஸ் 2 மணி 39.01 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றார்.

    இத்தாலியை சேர்ந்த பால் மிசானோ வெள்ளியும் (2 மணி 42.24 நிமிடம்), ஈக்வடார் வீராங்கனை மிலேனா டோரஸ் வெண்கலமும் (2 மணி 42.44 நிமிடம்) பெற்றனர்.

    இந்திய வீராங்கனை பிரியங்கா 24-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 3 மணி 5.58 நிமிடங்களில் கடந்தார்.

    • ஈஷாவின் முதல் உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
    • இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

    நிங்போவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    ஈஷா 242.6 புள்ளிகள் பெற்று, பரபரப்பான இறுதிப் போட்டியில் சீனாவின் யாவோவை 0.1 என்ற கணக்கில் வீழ்த்தினார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ யெஜின் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    ஈஷாவின் முதல் உலகக் கோப்பை தங்கம் இதுவாகும். இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. தங்கப் பதக்கத்தை வென்ற மற்ற நான்கு நாடுகளுடன் இந்தியா இணைந்தது.

    • எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
    • நாங்கள் எங்களுடைய திட்டங்களை வெளிப்படுத்த முடியும் என்றால் வெற்றி நிச்சயம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் போட்டியில் ஓமன் அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    பாகிஸ்தான் நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-

    நாங்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றால், எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் திறமை எங்களிடம் உள்ளது.

    எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓமனுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள்.

    நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மூன்று பேரும் மாறுபட்ட ஸ்பின்னர்கள். நாங்கள் சைம் என்பவரையும் கொணடுள்ளோம். இவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் என வரும்போது, ஏராளமான ஸ்பின்னர்கள் தேவை.

    இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.

    • உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.
    • பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான பயிற்சியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் இணையத்தில் வைரலானது. இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.18 கோடி மதிப்புடையது என தகவல் வெளியாகியுள்ளது.

    உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா வைத்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பணத்தை விட (ரூ.2.6 கோடி) பல மடங்கு அதிகம் என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

    • உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.
    • வீராங்கனைகளே இந்த பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.

    லிவர்பூர்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய வீராங்கனை நூபுர் ஷியோரன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 80-க்கும் மேற்பட்ட எடை பிரிவின் அரைஇறுதியில் அவர் துருக்கி வீராங்கனை ஷெய்மா துஸ்டசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஏற்கனவே 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருந்தார்.

    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது. வீராங்கனைகளே இந்த பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.

    • INDVsPAK கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
    • போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது.

    இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போட்டி நடக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து முதமுறையாக இந்தியா அணி மனம் திறந்து பேசியுள்ளது.

    இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "இந்திய அரசு என்ன முடிவு செய்கிறதோ அதற்கு பி.சி.சி.ஐ ஒத்துழைக்கிறது. எங்கள் கவனம் எப்போதும் போட்டியில்தான் இருக்கும். இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக இருக்கும்" என்று தெரிவித்தார். 

    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 அரையிறுதி போட்டிகளில் இந்த ஜோடி தோல்வியடைந்தது.
    • தொடர் தோல்விகளுக்கு தற்போது சாத்விக்-சிராக் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானை சேர்ந்த சென் செங் குவான் - லின் பிங் வை ஜோடி உடன் மோதியது.

    இப்போட்டியில் 21-17, 21-15 என்ற நேர்செட்கணக்கில் வெறும் 38 நிமிடங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.

    இது 2024 ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபனுக்குப் பிறகு சாத்விக் - சிராக் ஜோடியின் முதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உதிவே முதல்முறையாகும்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்த இந்த ஜோடி அந்த தோல்விகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    • பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் பில் சால்ட் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில உள்ளனர்.

    • முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 304 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் பிலிப் சால்ட் 39 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பிலிப் சால்ட் படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.

    ஏற்கனவே, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனையை பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் மார்கிரம் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.

    இதில் சாத்விக் சிராக் ஜோடி முதல் செட்டை 21-14 என கைப்பற்றியது. 2வது செட்டை தாய்லாந்து ஜோடி 22-20 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 3வது செட்டை 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தைவானின் லின் பிங் வெய்-சென் செங் குவான் ஜோடியை சந்திக்கிறது.

    ×