என் மலர்
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப்: 35 கிலோமீட்டர் நடை பந்தயத்தில் கனடா தங்கம் வென்றது
- நடைபந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர், சந்தீப் குமார் 2 மணி 39.15 நிமிடத்தில் கடந்து 23-வது இடத்தை பிடித்தார்.
- பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பிரியங்கா 24-வது இடத்தை பிடித்தார்.
டோக்கியோ:
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை தொடங்கியது.
ஆண்களுக்கான 35 கிலோ மீட்டர் நடைபந்தயம் முதலில் நடைபெற்றது. இதில் கனடா வீரர் டன்பி தங்கம் வென்றார். அவர் 2 மணி 28.22 நிமிட நேரத்தில் பந்தய தூரத்தை கடந்தார்.
பிரேசிலை சேர்ந்த போன்பாம் வெள்ளிப்பதக்கமும் (2 மணி 28.55 நிமிடம்) ஜப்பான் வீரர், கட்சுகி வெண்கல பதக்கமும் (2 மணி 29.16 நிமிடம்) பெற்றனர். இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், சந்தீப் குமார் 2 மணி 39.15 நிமிடத்தில் கடந்து 23-வது இடத்தை பிடித்தார்.
பெண்களுக்கான 35 கிலோ மீட்டர் தூர நடை பந்தயத்தில் ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரெஸ் 2 மணி 39.01 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றார்.
இத்தாலியை சேர்ந்த பால் மிசானோ வெள்ளியும் (2 மணி 42.24 நிமிடம்), ஈக்வடார் வீராங்கனை மிலேனா டோரஸ் வெண்கலமும் (2 மணி 42.44 நிமிடம்) பெற்றனர்.
இந்திய வீராங்கனை பிரியங்கா 24-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 3 மணி 5.58 நிமிடங்களில் கடந்தார்.






