என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லங்கா பிரிமீயர் லீக்கில் தம்புல்லா வைக்கிங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்.
    லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் - தம்புல்லா வைக்கிங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி 165 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் (76), அவிஷ்பா பெர்னாண்டோ (39) சிறப்பாக விளையாடினர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.

    பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தம்புல்லா வைக்கிங் அணி களம் இறங்கியது. வனிந்து ஹசரங்கா 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்த தம்புல்லா 128 ரன்னில் சுருண்டது.

    இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் (டிசம்பர் 16-ந்தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    பந்து வீச்சாளர்கள் முடக்கப்பட்டவர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சச்சின் தெண்டுல்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    டி20 கிரிக்கெட் வந்த பிறகு, ரசிகர்களை குசிப்படுத்த வேண்டிய காரணத்தால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நோ-பால் என்றால் ப்ரீ ஹிட், தடினமான பேட் போன்றவைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது.

    இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பேட்டிற்கும் பந்திற்கும் இடையிலான பேலன்சில் குறைபாடு உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நேரத்தில் கொரோனா முன்னேச்சரிக்கை காரணமாக பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகில் உள்ள பந்து வீச்சாளர்கள் முடக்கப்பட்டவர்களாக உணர்வதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘உமிழ்நீருக்கு மாற்றாக ஏதும் பயன்படுத்த வில்லை இல்லை, பவுலர்கள் ஊனமுற்றவர்கள். தற்போது நான் உமிழ்நீருக்கு மாற்று நம்மிடம் இல்லை. கிரிக்கெட் எப்போதுமே வியர்வை மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றை கொண்டுள்ளதாகும். வியர்வைவிட உமிழ் முக்கியமானது என்று நான் கூறுவேன். பந்து வீச்சாளர்கள் உமிழ்நீரையே விரும்புவார்கள்’’ என்றார்.
    விராட் கோலி இல்லாததால் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் பதவியை ஏற்க இருக்கும் ரகனேவுக்கு நெருக்கடி இருக்காது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விராட் கோலி விளையாடுகிறார். மற்ற மூன்று போட்டிகளில் ரகானேதான் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    கேப்டன் பதவி நெருக்கடியால் ரகானே தடுமாற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏற்கனவே கேப்டன் பதவியில் வெற்றியை ருசித்துள்ள ரகானேவுக்கு நெருக்கடி இல்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியால் ரகானேவுக்கு உண்மையிலேயே நெருக்கடி இல்லை. ஏனென்றால் இரண்டு முறை, அதாவது இரண்டு போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சாலாவிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    அதனால் கேப்டன் பதவியை பொறுத்தவரைக்கும் அவருக்கு நெருக்கடி இல்லை. ஏனென்றால், மூன்று போட்டியிலும் பொறுப்பு கேப்டன்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆகையால் கேப்டன் பதவியை என்ற சிந்தனை சுமந்து செல்வார் என நான் பார்க்கவில்லை’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வியடைந்ததோடு, 2020-ம் ஆண்டு கிரிக்கெட்டை சோகத்துடன் முடித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஜூலை மாதம் இங்கிலாந்தில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று பயோ-செக்யூர் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விளையாடினர்.

    அதன்பின் ஐபிஎல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பலர் விளையாடினர். தற்போது நியூசிலாந்து சென்று 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி20 கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 0-2 என இழந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 0-2 எனக் கைப்பற்றியது.

    தோல்விக்குப்பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், ‘‘இந்த வருடம் மிகவும் கடினமானது. வீட்டிற்குச் சென்று ஆறு மாதம் ஆகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘இது மிகவும் கடினமான வருடம். இது அணிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் கடினமானது என்பது தெரியும். தற்போது ஆறு மாதமாக வீட்டிற்குச் செல்லவில்லை. நான்-ஸ்டாப்பாக சென்று கொண்டிருக்கிறேன். எங்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்து பெற வேண்டும்’’ என்றார்.
    கடைசி ஓவரில் 22 ரன்கள் வளாசி சதம் அடித்த தூண்டியது கோபம்தான் என ரிஷப் பண்ட் நடந்ததை விவரித்துள்ளார்.
    இந்திய - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. பகல்-இரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இரண்டு அணிகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தன.

    2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹனுமா விஹாரி சதம் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் 81 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிய ஒரு ஓவர்தான் இருந்தது.

    இந்த ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து 73 பந்தில் சதம் விளாசினார். சதம் அடித்தது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் ‘‘சதம் அடிக்க 20 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். என்னுடைய முதல் ரியாக்சன், என்னால் அந்த ரன்னை எடுக்க முடியாது என்பதுதான். முதல் பந்து என்னுடைய வயிற்று பகுதியில் தாக்கியது. இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

    அதன்பின் எனக்குள்ளே ஒன்றிரண்டு ஷாட்கள் ஆட வேண்டும் என நினைத்தேன். அப்போது ஹனுமா விஹாரி என்னிடம் வந்து சதத்தை பூர்த்தி செய்ய முடியும் என்றதுடன், முயற்சி செய்து பார் என்றார். அப்படி செய்தால் நாளை காலை எந்த அவசரம் இல்லாமல் விளையாடலாம் என்றால். நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சதத்தை அடைய முடியும் என்றால் சிறந்ததாக இருக்கும். பவுலர் பந்து வீசினார். நான் எனது ஷாட்டை அடித்தேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக வேறு மாதிரியான திட்டம் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி நெருக்கடி கொடுப்பார்களோ? அதேபோல் சுழற்பந்து வீச்சில் தனிநபர் ஒருவராக நாதன் லயன் நெருக்கடி கொடுக்கக் கூடியவர்.

    கடந்த முறை இந்தியாவுக்கு எதிராக தொடரை இழந்த நிலையில், இந்த முறை வேறு மாதிரியான திட்டம் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘கடந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக என்ன நடந்தது. எப்படி அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது பற்றி எங்களுக்கு வெளிப்படையாக தெரியும். நாங்கள் அது பற்றி பேசியுள்ளோம். வேறு மாதிரியா திட்டத்துடன் களம் இறங்குவோம்.

    இந்தியாவக்கு எதிராக என்னுடைய திட்டம் குறித்து வெளிப்படையாக கூற இயலாது. ஆனால் இந்திய ஆஸ்திரேலியா அணியில் சிறந்த அதிர்வு இருக்கும். நாங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பாக இருந்ததை விட தற்போது மிகவும் சிறந்த இடத்தில் இருக்கிறோம்.

    இந்த வலுவான அணியில் நான் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் கொஞ்சம் கூடுதலாக பயிற்சி செய்துள்ளோம். களத்தில் இறங்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான அட்டவணை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நடைபெற்ற லீக் ஆட்டங்கள் முடிவில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச், டார்ட்மண்ட் உள்பட 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    இன்று யார் யாருடன் மோதுவது? என்பதை தெரிந்து கொள்வதற்கான குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் முடிவில் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி அணியான பார்சிலோனா- பிரான்ஸின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மற்ற போட்டிகளில் விளையாடும் அணிகள்:-

    1. பொருஸ்சியா மோன்செங்லாட்பேக் (ஜெர்மனி) - மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)
    2. லஜியோ (இத்தாலி) - பேயர்ன் முனிச் (ஜெர்மனி)
    3. அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்)- செல்சி (இங்கிலாந்து)
    4. லெய்ப்ஜிக் (ஜெர்மனி) - லிவர்பூல் (இங்கிலாந்து)
    5. போர்ட்டோ (போர்ச்சுக்கல்) - யுவென்டஸ் (இத்தாலி).
    6. செவியா (ஸ்பெயின்) - பொருஸ்சியா டார்ட்மண்ட் (ஜெர்மனி)
    7. அட்லாண்டா (இத்தாலி) - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)

    ஒவ்வொரு அணியும் எதிர் அணியுடன் லெக்1, லெக்2 என்ற அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். கோல்கள் அடிப்படையில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    முதல் லெக் பிப்ரவரி 16 மற்றும் 17-ந்தேதி மற்றும் 23/24-ந்தேதிகளிலும், 2-வது லெக் மார்ச் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி, 16 மற்றும் 17-ந்தேதிகளிலும் நடைபெற இருக்கிறது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் நியூசிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐசிசி கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை அறிமுகப்படுத்தியது. இதில் முன்னணியில் இருக்கும் 8 அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடர்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பைக்காக மோதும்.

    தொடக்கத்தில் இருந்து இந்தியா முதல் இடம் வகித்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சதவீதம் அடிப்படையில் தரவரிசை கணக்கிடப்படும் என ஐசிசி தெரிவித்தது.

    இதனால் இந்தியா 2-வது இடத்திற்கு சரிந்தது. ஆஸ்திரேலியா மூன்று தொடர்களிலர் 296 புள்ளிகள் பெற்றிருந்தாலும் சதவீதம் அடிப்படையில் 82.22 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    இந்தியா 4 தொடர்களில் விளையாடி 360 புள்ளிகள் பெற்று 75 சதவீதத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியதால் 300 புள்ளிகள் பெற்றுள்ள நியூசிலாந்து 2.50 சதவீதம் பெற்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு தொடர்களிலும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    புள்ளிகள் பட்டியல்

    இல்லையெனில், நியூசிலாந்து பாகிஸ்தான், வங்காளதேச அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்குத் 2-வது இடம் பிடித்து நியூசிலாந்த இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. வங்காளதேசம் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்திய அணியின் இளம் வீரரான ஷுப்மான் கில், ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வியாழக்கிழமை (17-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியில் ஷுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    முதல் பயிற்சி ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை என்றாலும், 2-வது பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மான் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘வங்காளதேசத்திற்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுவதற்காக பிங்க்-பாலில் பயிற்சி மேற்கொண்டோம். அதன்பின் 2-வது பயிற்சி ஆட்டத்திற்கு (ஆஸ்திரேலியா ஏ) முன்பு வரை போட்டி களத்தில் பிங்க்-பாலை எதிர்கொள்ளவில்லை.

    ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்வது மிகவும் அச்சுறுத்தலானது. ஆனால், நான் உண்மையிலேயே போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட சிறந்த வாய்ப்பு ஏதுமில்லை. ஆஸ்திரேலியா மண்ணில் ரன்கள் குவித்தால், தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அடிலெய்டு:

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேகப்பந்து வீரர் அபோட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தொடக்க வீரர்கள் வார்னர், புகோவ்ஸ்க்கி ஆகியோர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடவில்லை.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்களிலும் விராட் கோலி இடத்தில் யாரை களம் இறக்கலாம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 17-ந் தேதி பகல்-இரவாக அடிலெய்டில் தொடங்குகிறது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆட மாட்டார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து பாதியில் நாடு திரும்புகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 3 டெஸ்டில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இந்த நிலையில் 3 டெஸ்ட்களிலும் விராட் கோலி இடத்தில் யாரை களம் இறக்கலாம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கோலி ஒரு டெஸ்டில்தான் விளையாடுகிறார். அதற்கு பிறகு ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவார். ஆனால் கோலியின் 4-வது வரிசையில் களம் இறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுகிறது.

    கோலி இல்லாத இடத்தில் எனக்கு தெரிந்து ரகானே களம் இறங்குவார் என்று நினைக்கிறேன். அப்போது ரகானே இடத்தில் கே.எல்.ராகுலோ அல்லது சுப்மன்கில்லையோ களம் இறக்கினால் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 0-4 என்ற கணக்கில் இழக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு சூறாவளிகள் ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை அதுவும் கூக்கபுரா புதிய பந்தில் சமாளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் எத்தகைய வலுமிக்க பவுலர்கள் என்பதை அவர்கள் நிரூபித்து காட்டி விடுவார்கள். இந்த டெஸ்ட் தொடரில், முதலில் நடக்க உள்ள பகல்-இரவு இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) டெஸ்ட் முக்கியமானது. அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஒரு போதும் தோற்றது கிடையாது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அதன் பிறகு விராட் கோலி இல்லாத இந்திய அணி எஞ்சிய மூன்று டெஸ்டுகளிலும் தோற்று தொடரை 0-4 என்ற கணக்கில் இழக்க நேரிடும்.

    காயத்தால் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதலாவது டெஸ்டில் ஆடாதது இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாகும். புகோவ்ஸ்கி காயத்தால் விலகி விட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணியில் யார் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்பதில் கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது. ஆனாலும் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட் நல்ல நிலையில் உள்ளனர். அது மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை எதிர்கொண்டு எந்த அணியும் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன் குவித்ததில்லை. அதனால் தான் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று சொல்கிறேன்.

    இவ்வாறு வாகன் கூறினார்.
    ×