search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து அணி
    X
    நியூசிலாந்து அணி

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்தியாவுக்கு சிக்கல்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் நியூசிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐசிசி கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை அறிமுகப்படுத்தியது. இதில் முன்னணியில் இருக்கும் 8 அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடர்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பைக்காக மோதும்.

    தொடக்கத்தில் இருந்து இந்தியா முதல் இடம் வகித்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சதவீதம் அடிப்படையில் தரவரிசை கணக்கிடப்படும் என ஐசிசி தெரிவித்தது.

    இதனால் இந்தியா 2-வது இடத்திற்கு சரிந்தது. ஆஸ்திரேலியா மூன்று தொடர்களிலர் 296 புள்ளிகள் பெற்றிருந்தாலும் சதவீதம் அடிப்படையில் 82.22 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    இந்தியா 4 தொடர்களில் விளையாடி 360 புள்ளிகள் பெற்று 75 சதவீதத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியதால் 300 புள்ளிகள் பெற்றுள்ள நியூசிலாந்து 2.50 சதவீதம் பெற்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு தொடர்களிலும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    புள்ளிகள் பட்டியல்

    இல்லையெனில், நியூசிலாந்து பாகிஸ்தான், வங்காளதேச அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்குத் 2-வது இடம் பிடித்து நியூசிலாந்த இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. வங்காளதேசம் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×