என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னெர் இடம் பிடித்துள்ளார்.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடைபெற இருக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணியில் சான்ட்னர், அஜாஸ் பட்டேல் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் சான்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 7-வது இடத்தில் விளையாடுவதற்கு ஆல்-ரவுணடர் அடிப்படையில் மிட்செல் சான்ட்னரை தேர்வு செய்துள்ளோம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாம் பிளண்டெல், 3. டிரென்ட் போல்ட், 4. கைல் ஜேமிசன், 5. டாம் லாதம், 6. டேரில் மிட்செல், 7. ஹென்றி நிக்கோல்ஸ், 8. மிட்செல் சான்ட்னர், 9. டிம் சவுத்தி, 10. ராஸ் டெய்லர், 11. நீல் வாக்னர், 12. வாட்லிங் (விக்கெட் கீப்பர்), 13. வில் யங்.
    பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் 10 அணிகளுக்கு ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ)ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற வியாழக்கிழமை (24-ந்தேதி) கூடுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

    முக்கியமானதாக ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்காதாம். 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுமாம்.

    10 அணிகள் என்றால் 94 போட்டிகள் நடைபெற இருக்கும். அப்படி என்றால் சுமார் இரண்டரை மாத காலம் ஆகும். அவ்வளவு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வது கடினமானதாக இருக்கும்.
    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டான் டி காக். இவர் ஒயிட்-பால் அணிகளுக்கு கேப்டனாக உள்ளார். டெஸ்ட் போட்டிக்கும் அவர்தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒர்க்-லோடு காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பதவி அவரிடம் ஒப்படைக்கப்படாது என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

    ஆனால் 2021 சீசன் வரைக்கும் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டனுக்கான சரியான நபரை கண்டுபிடிக்கும் வரை கேப்டன் பதவியை ஏற்றுக் கொள்வதில் சந்தோசம் என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டி காக் கூறுகையில் ‘‘தேர்வாளர்கள் என்னிடம் சூழ்நிலையை விளக்கும்போது, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். வெளிப்படையாகவே, நான் உடனடியாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

    நான் இதுகுறித்து நினைக்கவே இல்லை. தற்போது நம்மிடம் வந்துள்ளது என புரிந்து கொண்டேன். இது இந்த சீசனுக்காகத்தான். இது நீண்ட காலத்திற்கானது அல்ல. யாராவது ஒருவரை தேடிப்பிடிக்கும்போது அவரது கையில் கொடுக்கப்படும். அந்த வீரர் நீண்ட கால கேப்டன் பதவியை ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். அதை என்னால் செய்ய முடியாது. என்னுடைய தட்டில் ஏராளமாக இருக்கிறது. தற்போது இதை நான் செய்ய இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
    அடிலெய்டு டெஸ்டின் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் ஜோ பேர்ன்ஸ் பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் வழங்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்தியாவின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் டக்அவுட்டும், 2-வது இன்னிங்சில் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் ஸ்டார்க் பந்திலும், 2-வது இன்னிங்சில் பேட் கம்மின்ஸ் பந்திலும் வீழ்ந்தார்.

    ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஜோ பேர்ன்ஸ் முதல் இன்னிங்சில் தாக்குப்பிடித்து விளையாடினார். 2-வது இன்னிங்சில் 51 ரன்கள் விளாசினார்.

    பொதுவாக எதிரணி வீரராக இருந்தாலும் கூட ஆலோசனைகள் வழங்குவதும், கேட்பதும் உண்டு. ஆனால், பிரித்வி ஷாவுக்கு ஆலோசனை வழங்க மாட்டேன் என்று ஜோ பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ பேர்ன்ஸ் கூறுகையில் ‘‘பிரித்வி ஷாவுக்கு எதிராக நான் விளையாடும்போது அவருக்கு எந்தவிதமாக ஆலோசனைகளும் வழங்கமாட்டேன். அவர் ரன்கள் அடிக்கமாட்டார் என்று நம்புகிறேன். அவர் எந்த ஃபார்மில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. நான் அவரை பின்பற்ற மாட்டேன். அவர் இந்தியாவுக்காக விளையாடும்போது, அவர் உண்மையிலேயே தரமான வீரர். தொடர் முடிந்த பின்னர் அவருக்கு ஆலோசனை வழங்குவேன். ஆனால், முதல் ஆட்டத்திற்குப்பின் இல்லை’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை வகிக்க இருக்கும் ரகானேவுக்கு வாழ்த்து கூறிய வாசிம் ஜாபர், புதிராக ஒரு தகவலையும் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா-இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டாக நடக்கிறது.விராட் கோலி இந்தியா திரும்பியதால், ரகானே கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    இந்திய அணியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். பல முன்னணி கிரிக்கெட் விமர்சகளும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் ரஞ்சி டிராபியில் சாதனைப் படைத்துள்ள முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர், ரகானேவுக்கு ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ‘‘டியர் ரகானே, இங்கே உங்களுக்கான ஒரு மெசேஜ் மறைந்து உள்ளது. பாக்சிங் டே டெஸ்டிற்காக குட் லக்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

    அந்த தகவலில் ஷுப்மான் கில்கேஎல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
    டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் 300 வாரங்கள் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் திகழ்ந்து வருகிறார். இவர் நேற்றைய டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதன்மூலம் 300 வாரங்கள் தரவரிசையில் இருந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரர் 310 வாரங்கள் முதல் இடத்தில் இருந்துள்ளார். ஜோகோவிச் இன்னும் 10 வாரங்கள் இருந்தால் பெடரர் சாதனையை சமன் செய்வார்.

    33 வயதாகும் ஜோகோவிச் முதன்முறையாக 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி முதன்முறையாக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். அதன்பின் ஐந்தாவது முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். 2011 ஜூலை 4-ந்தேதியில் இருந்து 2012 ஜூலை 8-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார்.

    அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து 2012-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து. 2013-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி வரை முதல் இடத்தில் நீடித்தார்.

    அதன்பின் 2014-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதியில் இருந்து நவம்பர் 6-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார். அதன்பின் 2018-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதியில் இருந்து 2019 நவம்பர் 3-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார்.

    ரோஜர் பெடரர் தொடர்ந்து 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அபு தாபியில் அடுத்த வருடம் ஜனவரி 28-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை நடைபெறும் அபு தாபி டி10 லீக்கில் கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி, வெயின் பிராவோ விளையாடுகிறார்கள்.
    டெஸ்ட் போட்டி 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக சுருங்கி புது வடிவம் பெற்றது. அது டி20 கிரிக்கெட் போட்டியாக மேலும் சுருங்கி 3-வது வடிவமாக உருவெடுத்தது. கிரிக்கெட்டில் மேலும் பரபரப்பை கூட்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியாக தற்போது மாறியுள்ளது.

    அபு தாபியில் மூன்று முறை டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4-வது சீசன் அடுத்த வருடம் ஜனவரி 28-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஜயாத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

    இந்தத் தொடரில் கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி, வெயின் பிராவோ ஆகியோர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கிறிஸ் கெய்ல் அபு தாபி அணிக்காகவும், வெயின் பிராவோ டெல்லி புல்ஸ் அணிக்காகவும், அந்த்ரே ரஸல் வடக்கு வாரியர்ஸ் அணிக்காகவும், சுனில் நரைன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாட இருக்கிறார்கள். இவர்கள் அந்தந்த அணியின் ஐகான் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சோயிப் மாலிக் மாரதா அரேபியன்ஸ் அணிக்காகவும், இலங்கையின் திசாரா பெரேரா புனே டேவில்ஸ் அணிக்காகவும், இசுரு உதானா பங்க்ளா டைகர்கள் அணிக்காகவும் விளையாட உள்ளனர்.
    அடிலெய்டு டெஸ்டில் படுதோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டிக்கான பாசிட்டிவ் வழிகளை கண்டுபிடிக்கவில்லை எனில் இந்தியா ஒயிட்வாஷ் ஆக வேண்டும் என கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா இந்தியா தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வியடைந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டு டெஸ்ட் வரலாற்றில் மோசமான நிகழ்வை பதிவு செய்தது.

    இந்த நிலையில் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி வருகிற 26-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாட பாசிட்டிவ் வழிகளை தேட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘இந்தியா மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை சிறந்த வகையில் தொடங்க வேண்டும். ஏராளமான நேர்மறையான சிந்தனையுடன் இந்திய அணி செல்வது அவசியம். ஆஸ்திரேலியாவின் பலவீனம் அவர்களுடைய பேட்டிங்.

    மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் நம்மால் நில்ல நிலைக்கு திரும்ப முடியும் என இந்திய அணி நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்தியா பாசிட்டிவ் வழிகளை தேடவில்லை என்றால், அதன்பின் 0-4 எனத் தொடரை இழக்கும் நிலை ஏற்படும். ஆனால், நேர்மறையுடன் சிந்தித்தால், பழைய நிலைக்கு திரும்ப முடியும். சில ஃபெர்பார்மன்ஸ்க்கு பிறகு கோபம் இருக்கும். ஆனால், கிரிக்கெட்டில் எதுவென்றாலும் நிகழும்.

    இந்தியா இரண்டு மாற்றங்களை எதிர்நோக்கும். முதலில், பிரித்வி ஷாவுக்குப் பதில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம். 5-வது அல்லது 6-வது இடத்தில் ஷுப்மான் கில் களம் இறக்கப்பட வேண்டும். அவர் நல்ல பார்மில் உள்ளார். சிறப்பாக தொடங்கினால், மாற்றம் ஏற்படும்’’ என்றார்.
    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் காயம் இன்னும் சரியாகாததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
    டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாரானபோது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் க்கு காயம் ஏற்பட்டது. இதனால் டி20 தொடரில் அவர் விளையாடவில்லை.

    டி20 தொடர் முடிந்த பின்னர் முதல் டெஸ்ட் 26-ந்தேதியும், 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக்கும் இடம்பெறவில்லை.;பாபர் அசாம் இல்லாததால் முகமது ரிஸ்வான் கேப்டனாக செயல்பட உள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆடுவாரா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    4 டெஸ்ட் போட்டி தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படு தோல்வியை தழுவியது.

    இந்த மோசமான ஆட்டத்தால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்கும் 2-வது டெஸ்டில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும். இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 5 மாற்றங்கள் இருக்கும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா இடத்தில் லோகேஷ் ராகுலும், விராட் கோலி நாடு திரும்புவதால் அவரது இடத்தில் சுப்மன்கில்லும் இடம் பெறுகிறார்கள். அதாவது அகர்வாலும், ராகுலும் 2-வது டெஸ்டில் தொடக்க வீரர்களாக ஆடலாம். சுப்மன்கில் டெஸ்டில் அறிமுகமாகிறார். அவர் 4-வது வரிசையில் களம் இறங்கலாம்.

    விர்த்திமான்சகாவுக்கு பதிலாக ரி‌ஷப்பண்ட் வாய்ப்பை பெறுகிறார். வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி காயமடைந்து உள்ளதால் எஞ்சிய 3 டெஸ்டிலும் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் முகமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுகிறார்கள்.

    ஹனுமான் விகாரியின் இடத்தில் ஆல் ரவுண்டர் ஜடேஜா வாய்ப்பை பெறலாம். மேற்கண்ட தகவலை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    2-வது டெஸ்டில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் (3 வேகப்பந்து, 2 சுழற்பந்து) களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜடேஜா 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஜடேஜா காயமடைந்தார். இதனால் எஞ்சிய இரண்டு 20 ஓவர் போட்டியிலும், முதல் டெஸ்டிலும் அவர ஆடவில்லை.

    தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றுவிட்டதால் 2-வது டெஸ்டில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஜடேஜா ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    ஹனுமான் விகாரி மிடில் ஆர்டர் வரிசைக்கு பொறுத்தமானவர் என்பதால் அவர் கழற்றிவிடப்படுவாரா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் அவர் அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 16 ரன்னும் 2-வது இன்னிங்சில் 8 ரன்னும்தான் எடுத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சிறுவனாக இருக்கும்போது, அவருக்கு பயிற்சி அளித்த ராஜ்குமார் ஷர்மா, தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஷர்மா. விராட் கோலி சிறுவனமாக இருக்கும்போது ராஜ்குமார் ஷர்மா பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் ராஜ்குமார், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் 2020-2021 உள்நாட்டு போட்டிகளில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது.

    55 வயதாகும் ராஜ்குமார் துரோணாச்சார்யா விருதை 2016-ல் வென்றுள்ளார். டெல்லி சீனியர் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள குர்ஷரன் சிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய அணியின் பேட்டிங்கை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கிண்டல் செய்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கிண்டல் செய்துள்ளார்.

    இந்திய அணி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘நேற்று காலை தூங்கி எழுந்தவுடன் டி.வி.யை ஆன் செய்தேன். இரண்டாம் நாள் ஆட்டத்தை நான் பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டை பார்த்தவுடன் இந்தியா 369 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது என நினைத்தேன். அதனால் எனது கண்களை துடைத்துக் கொண்டு ஸ்கோர் போர்டை உற்று பார்த்தேன். அதில் 36-க்கு பக்கத்தில் ‘/’ குறி இருப்பதை கவனித்தேன்.

    9 பேட்ஸ்மேன்கள் அவுட்,  ஒருவர் ரிட்டயர்ட் ஹர்ட் என தெரிந்து கொண்டேன். நிச்சயம் இந்த தோல்வி தர்மசங்கடமான ஒன்று. ஒட்டுமொத்த பேட்டிங் டீமின் தோல்வி. இந்தியாவோடு ஒப்பிடும்போது பாகிஸ்தானே மேல்தான் என தோன்றுகிறது” என அக்தர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2013-ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 49 ரன்கள் ஆட்டமிழந்ததே, அணியின் குறைந்தபட்ச ரன்னாகும்.
    ×