என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்குமார் ஷர்மா, விராட் கோலி
    X
    ராஜ்குமார் ஷர்மா, விராட் கோலி

    விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரானார்

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சிறுவனாக இருக்கும்போது, அவருக்கு பயிற்சி அளித்த ராஜ்குமார் ஷர்மா, தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஷர்மா. விராட் கோலி சிறுவனமாக இருக்கும்போது ராஜ்குமார் ஷர்மா பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் ராஜ்குமார், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் 2020-2021 உள்நாட்டு போட்டிகளில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது.

    55 வயதாகும் ராஜ்குமார் துரோணாச்சார்யா விருதை 2016-ல் வென்றுள்ளார். டெல்லி சீனியர் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள குர்ஷரன் சிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×