search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குயின்டான் டி காக்
    X
    குயின்டான் டி காக்

    சரியான நபர் கிடைக்கும் வரை கேப்டனாக இருப்பதில் மகிழ்ச்சி: குயின்டான் டி காக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டான் டி காக். இவர் ஒயிட்-பால் அணிகளுக்கு கேப்டனாக உள்ளார். டெஸ்ட் போட்டிக்கும் அவர்தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒர்க்-லோடு காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பதவி அவரிடம் ஒப்படைக்கப்படாது என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

    ஆனால் 2021 சீசன் வரைக்கும் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டனுக்கான சரியான நபரை கண்டுபிடிக்கும் வரை கேப்டன் பதவியை ஏற்றுக் கொள்வதில் சந்தோசம் என 
    குயின்டான் டி காக்
     தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டி காக் கூறுகையில் ‘‘தேர்வாளர்கள் என்னிடம் சூழ்நிலையை விளக்கும்போது, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். வெளிப்படையாகவே, நான் உடனடியாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

    நான் இதுகுறித்து நினைக்கவே இல்லை. தற்போது நம்மிடம் வந்துள்ளது என புரிந்து கொண்டேன். இது இந்த சீசனுக்காகத்தான். இது நீண்ட காலத்திற்கானது அல்ல. யாராவது ஒருவரை தேடிப்பிடிக்கும்போது அவரது கையில் கொடுக்கப்படும். அந்த வீரர் நீண்ட கால கேப்டன் பதவியை ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். அதை என்னால் செய்ய முடியாது. என்னுடைய தட்டில் ஏராளமாக இருக்கிறது. தற்போது இதை நான் செய்ய இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×