என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டென்னிஸ் தரவரிசையில் 300 வாரங்கள் முதல் இடம்: ஜோகோவிச் சாதனை
Byமாலை மலர்21 Dec 2020 1:12 PM GMT (Updated: 21 Dec 2020 1:12 PM GMT)
டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் 300 வாரங்கள் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் திகழ்ந்து வருகிறார். இவர் நேற்றைய டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதன்மூலம் 300 வாரங்கள் தரவரிசையில் இருந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரர் 310 வாரங்கள் முதல் இடத்தில் இருந்துள்ளார். ஜோகோவிச் இன்னும் 10 வாரங்கள் இருந்தால் பெடரர் சாதனையை சமன் செய்வார்.
33 வயதாகும் ஜோகோவிச் முதன்முறையாக 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி முதன்முறையாக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். அதன்பின் ஐந்தாவது முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். 2011 ஜூலை 4-ந்தேதியில் இருந்து 2012 ஜூலை 8-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார்.
அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து 2012-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து. 2013-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி வரை முதல் இடத்தில் நீடித்தார்.
அதன்பின் 2014-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதியில் இருந்து நவம்பர் 6-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார். அதன்பின் 2018-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதியில் இருந்து 2019 நவம்பர் 3-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார்.
ரோஜர் பெடரர் தொடர்ந்து 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×