என் மலர்
விளையாட்டு
சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், எல்லைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கான அட்டவணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் 2-வது டெஸ்ட் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் நடக்கிறது. 3-வது போட்டி நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் நடைபெறுகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கிறது.
சிட்னியில் திடீரென கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அருகில் உள்ள மாநிலங்கள் சிட்னியில் இருந்து வரும் நபர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சிட்னி எல்லைகளை மூட உள்ளது.
விக்டோரியா மாநிலம் சிட்னியில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்கள் கோரன்டைனில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனால் சிட்னியில் இருந்து வார்னர், சீன் அப்போட் முன்னதாகவே மெல்போர்ன் வந்துவிட்டனர்.
மெல்போர்ன் போட்டி முடிந்த பின், சிட்னியில் போட்டி நடைபெற்றால் அதன்பின் குயின்ஸ்லாந்து மாநிலம் செல்வது கடினம். ஆகையால் 2-வது மற்றும் 3-வது போட்டி மெல்போர்னில் நடக்கலாம். இல்லையெனில் 3-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் நடக்கலாம். அப்படியும் இல்லை என்றால் அடிலெய்டில் 3-வது போட்டி நடத்தப்படலாம் என் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், சிட்னியில் ஏற்கனவே போட்டி நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
விராட் கோலி இல்லாத நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு உதவ ராகுல் டிராவிட்டை பிசிசிஐ உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க வேண்டும் என வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டது, ஹசில்வுட் 5 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும் சாய்த்தனர். விராட் கோலி அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. முகமது ஷமியும் காயத்தால் விலகியுள்ளார்.
விராட் கோலி இல்லாமல் இருக்கும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு உதவுவதற்காக இந்திய கிரிக்கெட் அகாடமியின் ஆலோசகராக இருக்கும் ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என பிசிசிஐ-க்கு முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
‘‘அணியின் உதவிக்காக ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலியா கண்டிசனில் மூவ் ஆகும் பந்தை எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து வழிகாட்ட அவரை விட சிறந்தவர் யாருமில்லை. அவருடைய வருகை இந்திய அணிக்கு நெட் பயிற்சியில் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். கிரிக்கெட் அகாடமி கொரோனா தொற்றால் 9 மாதங்களாக மூடிதான் கிடக்கிறது. அவரை அனுப்பி வைக்கலாம்.
விராட் கோலி இல்லாத நிலையில், பிசிசிஐ அவரை அணிக்கு சிறந்த வகையில் உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 14 நாட்கள் கோரன்டைனில் இருந்தாலும், 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன் அவரால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் ஆலோசனை வழங்க முடியும். ஜனவரி 7-ல்தான் சிட்னி டெஸ்ட் தொடங்குகிறது’’ என்றார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஒரெயொரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் 2017-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றது. முதல் போட்டியாக இந்தியாவை எதிர்த்து விளையாடியது. அதன்பின் அயர்லாந்து, வங்காளதேச அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் முடிவு செய்திருந்தது. இதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் சம்மதம் தெரிவித்தது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த ஒரு டெஸ்ட் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிராக சிட்னி சிக்சர்ஸ் அணியின் டேனியல் கிறிஸ்டியன் 16 பந்தில் அரைசதம் விளாச, சிட்னி சிக்சர்ஸ் 38 ரன்னில் வெற்றி பெற்றது.
பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 11-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ்- அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.
சிட்னி சிக்சர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. டேனியர் ஹியூக்ஸ் 41 பந்தில் 46 ரன்களும், டேனியல் கிறிஸ்டியன் 16 பந்தில் 50 ரன்களும் விளாச, சிட்னி சிக்ர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.
பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 139 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேனியல் கிறிஸ்டியன் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்களில் சுருண்ட நிலையில், பேட்ஸ்மேன்களை குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இரண்டு நாள் ஆட்ட முடிவில் இந்தியா 62 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது நாள் காலையில் ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டை இழந்தது.
பேட்ஸ்மேன்களில் மோசமான ஆட்டமே 36 ரன்னில் ஆல்-அவுட் ஆக காரணம் என விமர்சனம் எழும் நிலையில், கவாஸ்கர் பேட்ஸ்மேன்களை திட்டுவது நியாயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஸ்டார்க் 3 ஓவர்கள் பந்து வீசிய பின்னர் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் பந்து வீசியதை பார்க்கும்போது, அவர்கள் நிறைய கேள்விகளை கேட்டார்கள். ஆகவே, இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகிய விதத்தை வைத்து விமர்சனம் செய்வது சரியல்ல. ஏனென்றால், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள்.
நீங்கள் தரமான பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது, லைன் மற்றும் லெந்த் துல்லியமாக இருக்கும்போது ரன்கள் குவிப்பது கடினம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அது நடந்தது.
எந்த ஒரு அணியும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்ததை பார்ப்பது சிறந்ததாக இருக்காது. ஆனால், மற்ற எந்தவொரு அணியாக இருந்தாலும், இதுபோன்ற பந்து வீச்சில், விரைவில் சுருண்டு இருப்பார்கள். 36-ல் இல்லை என்றாலும், 72 அல்லது 80-90 ரன்களில் ஆல்-அவுட் ஆகியிருப்பார்கள்.
இதேபோன்றுதான் லண்டனில் 1974-ல் சீதோஷ்ண நிலை பந்து ஸ்விங் ஆவதற்கு சாதகமாக இருந்தது. எந்தவொரு பேட்ஸ்மேனும் மோசமாக ஷாட்ஸ் ஆடவில்லை. நாங்கள் அனைவரும் எல்.பி.டபிள்யூ. அல்லது விக்கெட் கீப்பர் கேட்ச் ஆனோம். ஐந்து நட்சத்திர பேட்ஸ்மேன்கனை நான் பெற்றிருந்தாலும் அவர்கள் 42 ரன்களை தாண்டியிருக்க மாட்டார்கள்’’ என்றார்.
சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை காரணமாக டேவிட் வார்னர், சீன் அப்போட் மெல்போர்ன் சென்றுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இருவரும் சிட்னியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகினர். மெல்போர்னில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிலையில் சிட்னி அமைந்துள்ள நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் சிட்னியில் இருந்து விக்டோரியா மாநிலம் வரும் நபர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் எனக்கூறி விக்டோரியா மாநிலம் எல்லையில் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனால் சிட்னியில் உள்ள வார்னர், அப்போட் உடனடியாக விக்டோரியா மாநிலம் மெல்போர்ன் சென்றனர். இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருவரும் செல்ல இருக்கிறார்கள்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
ஜெர்மனியில் நடைபெற்ற உலக கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா மூன்று தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றது.
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் கடந்த 16-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 3 தங்க பதக்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹாலை எதிர்த்து களம் இறங்க இருந்த ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யன் கடைசி நேரத்தில் விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.
இந்திய வீரர்கள் முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கிலோ) அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தமிழ்நாடு அணியின் முரளி விஜய் விலகியுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான 26 பேர் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் உத்தேச அணி கடந்த 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், பாபா அபரஜித், பாபா இந்திரஜித், முரளி விஜய் இடம் பிடித்திருந்தனர்.
தற்போது முரளி விஜய் சொந்த காரணத்திற்கான சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக எல் சூர்யபிரகாஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான கே. விக்னேஷ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் நீடிக்கும் நிலையில், புஜாரா ஒரு இடம் பின்தங்கியுள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 74 ரன்கள் அடித்தார். 2-வது இன்னிங்சில் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்சில் 1 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 1 ரன்னும் எடுத்திருந்தார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான புள்ளிகளில் ஸ்மித் 10 புள்ளிகளை இழந்த நிலையில், விராட் கோலி இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றார்.
இதனால் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 888 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 25-ல் இருந்து 13 ஆக குறைந்துள்ளது.
கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும், லாபஸ்சேன் 4-வது இடத்திலும், பாபர் அசாம் 5-வது இடத்திலும், டேவிட் வார்னர் 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
முதல் இன்னிங்சில் 40 ரன்களுக்கு மேல் அடித்தாலும், 2-வது இன்னிங்சில் டக்அவுட் ஆன புஜாரா ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் 9-வது இடத்திலும், டாம் லாதம் 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க வீரர் வரிசையில் பிரித்வி ஷா- ஷுப்மான் கில்லுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
பயிற்சி ஆட்டத்தில் ஷுப்மான் கில்தான் சிறப்பாக விளையாடினார். ஆனால், பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 0, 2-வது இன்னிங்சில் 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா. இதனால் மெல்போர்ன் டெஸ்டில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
விராட் கோலி மெல்போர்ன் டெஸ்டில் விளையாடவில்லை. அவரது இடத்தில் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் தொடக்க வீரராக கேஎல் ராகுல் களம் இறக்கப்படவாய்ப்புள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் சதம் அடித்த போதிலும், அவருக்குப் பதிலாக சாஹா சேர்க்கப்பட்டார். அவர் 9, 4 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் சாஹா நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
முகமது ஷமி காயத்தால் வெளியேறியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாகவும் மற்றொரு வீரர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதனால் பாதி அணி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அடிலெய்டு டெஸ்டில் பும்ரா வீசிய பவுன்சர் பந்து தாக்கி ஜோ பேர்ன்ஸ் காயம் அடைந்தார், இருந்தாலும் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட தகுதி பெற்றார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸ் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவியாக இருந்தார்.
அவர் விளையாடும்போது பும்ரா திடீரென வீசிய பவுன்சர் பந்து முழங்கையை பலமாக தாக்கியது. வலி தாங்க முடியாமல் மருத்துவ உதவி மேற்கொண்டார். கையில் முறிவு ஏற்பட்டிருக்குமோ? என ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயப்படக்கூடிய அளவிற்கு ஒன்றுமில்லை என்பதால் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட தகுதி பெற்றார்.
ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 164 இலக்கை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டிப்பிடித்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளிக்க, அனுபவ வீரரான முகமது ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 99 ரன்கள் விளாசினார். இவர் மட்டுமே சிறப்பாக விளையாடியதால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி 4 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னார் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மாரட்டின் கப்தில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டிம் செய்பெர்ட் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் 19.2 ஓவரில் 164 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி றெ வைத்தது.
செய்பெர்ட் 63 பந்தில் 84 ரன்களும், கேன் வில்லியம்சன் 42 பந்தில் 57 ரன்களும் விளாசினர். ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதி நேப்பியரில் நடக்கிறது.






