என் மலர்tooltip icon

    செய்திகள்

    முரளி விஜய்
    X
    முரளி விஜய்

    சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து முரளி விஜய் விலகல்

    இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தமிழ்நாடு அணியின் முரளி விஜய் விலகியுள்ளார்.
    சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான 26 பேர் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் உத்தேச அணி கடந்த 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், பாபா அபரஜித், பாபா இந்திரஜித், முரளி விஜய் இடம் பிடித்திருந்தனர்.

    தற்போது முரளி விஜய் சொந்த காரணத்திற்கான சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக எல் சூர்யபிரகாஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான கே. விக்னேஷ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×