என் மலர்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, சதத்தில் சதம் அடிப்பாரா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும், ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களும் அடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள், ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் என 100 சதங்கள் விளாசியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா? என்றால், அது சந்தேகமே...
ஆனால், தற்போதைய இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது அபாரமான ஆட்டத்தால் சதமாக குவித்து வந்தார். இதனால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என நம்பப்பட்டது.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள், டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள் என 70 சதங்கள் அடித்துள்ளார். 70-வது சதத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடித்தார். அப்போது விராட் கோலிக்கு 31 வயது. சூப்பர் டூப்பர் ஃபார்மில் இருந்தார்.
இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடினால் எப்படியும் எளிதாக 100 சதங்கள் அடிப்பார் என்ற நிலையில்தான் விராட் கோலி ஆட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால், 2019-ல் இருந்து தற்போது வரை அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது.

தற்போது 33 வயதை கடந்துள்ளார். இதனால் விராட் கோலியால் 100 சதங்களை எட்ட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியை துறந்துள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. அதன்பின் பேட்டிங்கில் தீவர கவனம் செலுத்தினால் 100 சதங்களை எட்ட வாய்ப்புள்ளது.
10 அணிகளுடன் 2022 ஐ.பி.எல். சீசன் ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போட்டித்தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்த்து 10 அணிகளாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அகமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தநிலையில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கும் தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்குகிறது என்றும், சென்னையில் முதல் ஆட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இறுதிப்போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனாலும் இதுவரை போட்டி அட்டவணை இறுதி செய்யப்படவில்லை.
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிரான்சுடன் மோதுகிறது.
புவனேஸ்வர்:
12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ‘பி ’ ரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ், போலந்து, கனடா, ‘சி’ பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, தென் கொரியா, அமெரிக்கா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விலகி விட்டன.
6 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 முறை சாம்பியனான இந்தியா மற்றும் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளன.
இந்திய அணி விவேக் சாகர் பிரசாத் தலைமையில் களம் இறங்குகிறது. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தவர் ஆவார். 2016-ம் ஆண்டு பெல்ஜியத்தை தோற்கடித்து வாகை சூடிய இந்திய அணி பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. உள்ளூர் சூழல் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

முதல் நாளான இன்று இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் டிமோதீ கிளைமென்ட் தலைமையிலான பிரான்சை (இரவு 8 மணி) சந்திக்கிறது.
முன்னதாக மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம்-தென்ஆப்பிரிக்கா (காலை 9.30 மணி), ஜெர்மனி-பாகிஸ்தான் (பகல் 12 மணி), கனடா-போலந்து (பிற்பகல் 2.30 மணி), மலேசியா-சிலி (மாலை 5 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ‘பி ’ ரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ், போலந்து, கனடா, ‘சி’ பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, தென் கொரியா, அமெரிக்கா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விலகி விட்டன.
6 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 முறை சாம்பியனான இந்தியா மற்றும் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளன.
இந்திய அணி விவேக் சாகர் பிரசாத் தலைமையில் களம் இறங்குகிறது. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தவர் ஆவார். 2016-ம் ஆண்டு பெல்ஜியத்தை தோற்கடித்து வாகை சூடிய இந்திய அணி பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. உள்ளூர் சூழல் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
இந்திய இளம் படைக்கு மூத்த வீரர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சீனியர் அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறும் போது, ‘சமீபத்தில் எங்களுக்கு எதிராக ஜூனியர் அணியினர் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர். அதில் ஒரு ஆட்டத்தில் எங்களை தோற்கடித்தனர். இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான திறமை அவர்களிடம் இருப்பதாக நம்புகிறேன். ஒரு அணியாக தொடர் முழுவதும் ஒருங்கிணைந்து விளையாடினால் நிச்சயம் மீண்டும் கோப்பையை வெல்ல முடியும்.
ஜூனியர் அணியின் கேப்டன் விவேக் சாகரிடம் நான் பலமுறை பேசி இருக்கிறேன். ஒரு அணியாக உங்களது ஆட்டத்தில் முழு கவனமுடன் இருங்கள். அவ்வாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்ற கூறியிருக்கிறேன்’ என்றார்.
மற்றொரு இந்திய மூத்த வீரர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், ‘மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தின் முன்பு விளையாடும் வாய்ப்பை நமது வீரர்கள் தவற விடுகிறார்கள். கலிங்கா மைதானத்தின் அழகே ரசிகர்களின் உற்சாகமும், ஆர்ப்பரிப்பும் தான். ரசிகர்கள் இல்லாவிட்டாலும் சீதோஷ்ண நிலை நமது அணிக்கு சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

முதல் நாளான இன்று இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் டிமோதீ கிளைமென்ட் தலைமையிலான பிரான்சை (இரவு 8 மணி) சந்திக்கிறது.
முன்னதாக மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம்-தென்ஆப்பிரிக்கா (காலை 9.30 மணி), ஜெர்மனி-பாகிஸ்தான் (பகல் 12 மணி), கனடா-போலந்து (பிற்பகல் 2.30 மணி), மலேசியா-சிலி (மாலை 5 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை தேடித் தந்தவர் என்ற சாதனை படைத்தவர் மிதாலிராஜ்.
துபாய்:
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கின்றனர்.
ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தில் உள்ளார் (10 ஆயிரத்துக்கும் மேல்) என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 224/9 - மழையால் ஆட்டம் பாதிப்பு
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
கல்லெ:
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன்னில் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 147 ரன்னும், டி சில்வா 61 ரன்னும், நிசங்கா 56 ரன்னிலும் வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் 41 ரன் எடுத்து வெளியேறினார். கைல் மேயர்ஸ் 22 ரன்னும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் கார்ன்வால் 39 ரன்னில் வெளியேறினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மீதமுள்ள ஆட்டம் கைவிடப்பட்டது.
இலங்கை அணி சார்பில் மெண்டிஸ் 3 விக்கெட், ஜெயவிக்ரமா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்...ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை வென்றது சென்னை
ஐ.எஸ்.எல். காலபந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4-ம் இடம் பெற்றுள்ளது.
கோவா:
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஐதராபாத் எப்.சி அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 66-வது நிமிடத்தில் சென்னை அணி வீரரான விளாடிமிர் கோமர் ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப் படுத்தினார். அதன்பின், ஐதராபாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி (நாளைமறுநாள்) கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கே.எல். ராகுல் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப்பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரகானே (கேப்டன்), 2. மயங்க் அகர்வால், 3. புஜாரா (துணைக் கேப்டன்), 4. ஷுப்மான் கில், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. சூர்யகுமார் யாதவ், 7. விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), 8. கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), 9. ஜடேஜா, 10. அஸ்வின், 11. அக்சார் பட்டேல், 12. ஜெயந்த் யாதவ், 13. இஷாந்த் சர்மா, 14. உமேஷ் யாதவ், 15. முகமது சிராஜ், 16. பிரசித் கிருஷ்ணா.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் இருந்த கே.எல். ராகுல், முதல் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என அபார வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. இந்த டெஸ்டில் இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்திய கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டியிலும் அசத்த காத்திருந்தார். ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கான்பூர் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.
சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:
டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி தமிழக அணி சாதனை படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இந்தநிலையில் தமிழக கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி தமிழக அணி சாதனை படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இந்தநிலையில் தமிழக கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்துக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் ஷாருக் கான் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
புதுடெல்லி:
சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார்.
தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஜெகதீசன் 41 ரன்னும், ஷரி நிஷாந்த் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் தமிழக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததை முன்னாள் கேப்டன் டோனி ரசித்துப் பார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைக்கும் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற டோனி, ஷாருக் கான் கடைசி பந்து சிக்சரை ரசித்த காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கருணரத்னே சதத்தால் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கல்லெ:
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 132 ரன்னும், டி சில்வா 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நிசங்கா அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டி சில்வா 61 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கருணரத்னே 147 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சண்டிமால் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 133.5 ஓவரில் 386 ரன்னில் ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் 41 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
எனவே, இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. கைல் மேயர்ஸ் 22 ரன்னும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில் மெண்டிஸ் 3 விக்கெட், ஜெயவிக்ரமா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்...ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் - கோப்பையை வென்றார் ஸ்வெரேவ்
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை தோற்கடித்தார் ஸ்வெரேவ்.
துரின்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வடேவும், ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினர்.
இதில், ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் மெட்வடேவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஏடிபி இறுதிச்சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வெரேவ் பெறும் இரண்டாவது டைட்டில் இதுவாகும்.
இதையும் படியுங்கள்...உகாண்டா பாரா-பேட்மிண்டனில் 47 பதக்கங்கள் வென்று அசத்திய இந்திய அணி






