என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்தனர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் அறிமுக போட்டியிலேயே சதம் அடிக்க ஷுப்மான் கில் (52) மற்றும் ஜடேஜா (50)  அரைசதம் அடிக்க இந்தியா 111.1 ஓவரில் 345 ரன்கள் குவித்தது.

    நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜேமிசன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், வில் யங்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் பலன் கிடைக்கவில்லை.

    ஷுப்மான் கில் கையில் சிக்காத பந்து

    இதனால் இருவரும் அரைசதம் அடித்தனர். ஐந்து பந்து வீசு்சாளர்களையும் சோர்வடையச் செய்த நியூசிலாந்து தொடக்க ஜோடி விக்கெட்டை இழக்காமல் 57 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    டாம் லாதம் 165 பந்தில் 50 ரன்களும், வில் யங் 180 பந்தில் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி வீரர் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    கான்பூர்:

    இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா 50 ரன்னில் சவுத்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். அறிமுக போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்திய வீரர்களில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 16-வது வீரர் இவர் ஆவார்.

    அவர் 105 ரன்கள் எடுத்து வெளியேறினார். சீரான இடைவேளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. சகா 1, அக்சர் 3, அஸ்வின் 38, இஷாந்த் 0 என வெளியேறினர். உமேஷ் யாதவ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

    நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 5 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    கான்பூர்:

    இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடுகிறது.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் ஸ்ரேயாஸ் அய்யர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும் ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். 

    2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார்.

    அறிமுகப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் லாலா அமர்நாத் (1933) ஆவார். இந்தியாவுக்காக அறிமுக டெஸ்டில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆர்.எச்.ஷோதன், கிருபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரீந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவின் ஆம்ரே, சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோஹித் சர்மா. பிரித்வி ஷா, ஆகியோர் அடங்குவர். 

    ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன், 2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பிரித்வி ஷா சதம் அடித்தார். அவர் அறிமுக போட்டியிலேயே 134 ரன்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    பாலி:

    இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள யோனி லியை (ஜெர்மனி) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற நேர்செட்டில் யோனி லியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 14-21, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோ போபோவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வு குழு நியமித்துள்ளது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகினார். 

    ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகியதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 28 வயதான கம்மின்ஸ் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணை கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிரான்சிடம் தோல்வி அடைந்தது.
    புவனேஸ்வர்:

    12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    முதல் நாளில் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 4-5 என்ற கணக்கில் பிரான்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, கனடா அணிகள் மோதின. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதியி இந்தியா 4-1 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆக்ரோஷம் தொடர்ந்தது. இந்திய வீரர்கள் சஞ்சய், அராய்ஜித் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தனர். 

    இறுதியில், இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டி இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.
    கல்லெ:

    இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன்னில் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 147 ரன்னும், டி சில்வா 61 ரன்னும், நிசங்கா 56 ரன்னிலும் வெளியேறினர். 

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கைல் மேயர்ஸ் 45 ரன்னும், பிராத்வெயிட் 41 ரன்னும், கார்ன்வால் 39 ரன்னும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரமா 4 விக்கெட்டும், மெண்டிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. கருணரத்னே 83 ரன் எடுத்தார். மேத்யூஸ் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடுத்து, 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜோஷ்வா டி சில்வா 54 ரன் சேர்த்தார். பானர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டும், லசித் எம்பல்டெனியா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கேப்டன் திமுத் கருணரத்னே தேர்வு செய்யப்பட்டார்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி தனது முதல் அரை சதத்தை அடித்து அசத்தினார்.
    கான்பூர்:

    இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில்-அகர்வால் களமிறங்கினர். ஜேமிசன் பந்து வீச்சில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய அகர்வால் 13 ரன் எடுத்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா வழக்கமாக மெதுவாகவே விளையாடினார். மறுபக்கம் ஆடி கொண்டிருந்த கில் தனது 4-வது அரை சதத்தை பதிவு செய்தார். அரை சதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஜேமிசன் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

    இந்நிலையில் அணியின் கேப்டன் ரகானே களமிறங்கினார். அவரது பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இந்த போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். புதிதாக களத்தில் வந்த அவர் பவுண்டரிகளை பறக்க விட்டு அருமையாக ஆடினார்.

    தொடர்ந்து மந்தமாகவே ஆடி வந்த புஜாரா 88 பந்துகளை சந்தித்த நிலையில் 26 ரன்னில் சவுத்தி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்த நிலையில் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.

    எப்படியும் அரைசதமாவது அடிப்பார் என எதிர்பார்த்த ரகானே 63 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்து ஜேமிசன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

    இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். பொறுப்பாக ஆடி வந்த அய்யர் தனது முதல் போட்டிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த ஜடேஜாவும் தனது 17-வது அரை சதத்தை கடந்தார். 

    இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாளில் 84 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.  ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும் ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும், சவுத்தி 1 விக்கெட் வீழ்த்தினர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை கழற்றிவிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    அதற்கு முன்பாக வீரர்கள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு வீரர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி தக்க வைக்கப்படுவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. மற்ற 3 வீரர்கள் யார்? என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 3 வீரர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தக்கவைக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    வெளிநாட்டு வீரர்களில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தக்க வைக்கப்படலாம். அவர் சென்னை அணியில் இடம்பெற விரும்பவில்லை என்றால் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் 4-வது வீரராக தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டூபெலிசிஸ் தக்கவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவரது பெயர் ஏலம் பட்டியலில் இடம் பெறும்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரி‌ஷப் பண்ட், அக்‌ஷர்படேல், பிரித்வி ஷா, நார்ஜே ஆகியோரும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோரும் தக்க வைக்கப்படுகிறார்கள். அந்த அணியில் பொல்லார்டும், இஷான்கி‌ஷனும் தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

    புதிய அணியான லக்னோவுக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    மயங்க் அகர்வால் 13 பந்தில் வெளியேறினாலும், ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால், ஷுப்மான கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒருபக்கம் புஜாரா நிலைத்து நிற்க, மறுபக்கம் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 81 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

    ஷுப்மான் கில் 87 பந்தில் 52 ரன்களும், புஜாரா 61 பந்தில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    முழங்கை காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கியிருக்கும் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், இந்த போட்டி தனக்கு ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும் என்று கூறி உள்ளார்.
    கான்பூர்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. கான்பூரில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங்கிறகு ஒத்துழைக்கும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார் கேப்டன் ரகானே. மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.  

    நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், முழங்கை காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கியிருக்கிறார். இந்த போட்டி தனக்கு ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும் என்று கூறி உள்ளார். ரச்சின் ரவீந்திரா அறிமுக வீரராக களமிறங்குகிறார். அஜாஸ் படேல் மற்றும் வில் சோமர்வில்லே ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்திய அணி: மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

    நியூசிலாந்து அணி:  டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ்,  டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், வில் சோமர்வில்லி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவார் என, இந்திய அணி கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரகானே பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் காயத்தால் வெளியேறிவிட்டார்.

    இதனால் வழக்கமான டெஸ்ட் அணியில் இடம்பெறும் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக புதிய நபர்களை ஆடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும். இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என பொறுப்பு கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார். ஷுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இதன்மூலம் மும்பையை சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆக ள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் முதல்தர கிரிக்கெட்டில் 4592 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 52.18 ஆகும். ஆனாலர், ரெட் பந்தில் கடைசியாக 2019-ம் அண்டு இரானி கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
    ×