என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உகாண்டாவில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணியினர் 47 பதக்கங்களை வென்றனர்.
    கம்பாலா:

    உகாண்டா தலைநகர் கம்பாலாவில் பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் பெற்று அசத்தினர்.

    பாலக் கோலி, அபு  ஹுபைதா மற்றும் அம்மு மோகன் ஆகியோர் தலா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். மானசி ஜோஷி மகளிர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் தங்கம் வென்றார். 

    தங்கம் வென்றவர்கள்: மனோஜ் சர்க்கார், சுகந்த் கதம், ஹர்திக் மக்கர், அபு ஹுபைதா, தினகரன், பாலக் கோலி, மானசி ஜோஷி, ஜோதி, அம்மு மோகன், அர்வாஸ் அன்சாரி, தீப் ரஞ்சன், சிராக் பரேத்தா, ராஜ் குமார், மந்தீப் கவுர், ருத்திக், சிவராஜன்.

    டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், ஆடவர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான இரட்டையர் எஸ்எல்3-எஸ்எல்4 போட்டியில் மனோஜ் சர்க்காருடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பின்னர் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 போட்டியில் பாலக் கோலியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி கோப்பை கைப்பற்றியது.
    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த்-ஜெகதீஷன் களமிறங்கினர். முதல் ஓவரில் 9 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த நிஷாந்த் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும். 

    அடுத்து வந்த சுதர்சன் 9, சஞ்சய் யாதவ் 5, முகமது 5, என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 15-வது ஓவரில் விஜய் சங்கர் 18, ஜெகதீஷன் 41 அடுத்தடுத்து வெளியேறினர். 

    அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் தமிழக அணிக்கு வெற்றியை தேடி தந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 1 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.  

    வெற்றி கொண்டாட்டத்தில் தமிழக அணி வீரர்கள்

    சையது முஸ்தாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி 3-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
    அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழா - இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன், சிஎஸ்கே அணி கேப்டன் தல டோனி மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.
    சென்னை:

    அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அழகு சாதனவியல் ஹேர் ஸ்டைல் சலூன் (Cosmetology Hair style & Medi Saloon) என்று அழைக்கப்படும், இங்கு தலை முடி, நகம், தோல், இமை உள்ளிட்ட அனைத்திற்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு சரிசெய்யப்படும். டாக்டர் நிஷா மற்றும் அப்பு ஆகியோர் அன்லான் ஆர்ட் சலூனின் நிறுவனர்கள். 

    எம் எஸ் டோனி

    இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன், சிஎஸ்கே அணி கேப்டன் டோனி ஆகியோர் அன்லான் ஆர்ட் சலூனை திறந்து வைத்து அறிமுகப்படுத்தினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ், கலா மாஸ்டர், நடிகர்கள் விக்ரம் பிரபு, கலையரசன், ஓவியர் மற்றும் நடிகர் ஏ.பி.ஶ்ரீதர், பிக்பாஸ் ஷாரிக், பிக்பாஸ் நமீதா மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்த தல டோனி, அதன் பின் அங்கு வந்திருந்த சிறுவர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    இறுதிப்போட்டி டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். 5.1 ஓவர்களில் 32 ரன் எடுப்பதற்குள் கர்நாடகா அணியின் 3 விக்கெட்டை தமிழக வீரர்கள் கைப்பற்றினர்.

    இதனையடுத்து 20 ஓவர் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடி வருகிறது. தற்போது வரை தமிழக அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹரி நிசாந்த் 12 பந்துகளில் 23 ரன்களை எடுத்துள்ளனர். 

    ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் புதிய கூட்டணி முதல் 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

    கொல்கத்தா:

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    கொல்கத்தாவில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது.

    கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 31 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கி‌ஷன் 21 பந்தில் 29 ரன்னும் (6 பவுண்டரி), தீபக் சாஹர் 8 பந்தில் 21 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். சாண்ட்னெர் 3 விக்கெட்டும், போல்ட், ஆடம் மிலின், பெர்குசன், சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 17.2 ஓவர்களில் 111 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 73 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் அதிகபட்சமாக 36 பந்தில் 51 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர் ) எடுத்தார். அக்‌ஷர் படேல் 9 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்சல்படேல் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், யசுவேந்திர சாஹல், வெங்கடேஷ் அய்யர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை “ஒயிட் வாஷ்” செய்தது. ஏற்கனவே ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் புதிய கூட்டணி முதல் 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

    போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித்சர்மா சுழற்பந்து வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த தொடரில் சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அக்சர் படேல், ஹர்சல் படேல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த சாஹலும் நன்றாக வீசினார்.

    வெங்கடேஷ் அய்யருக்கு பந்து வீசும் திறமை இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவரது பந்து வீச்சை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

    வெற்றியுடன் தொடரை தொடங்கி இருப்பது முக்கியமானது. எல்லாமே மனநிலையை பொருத்துதான் இருக்கிறது. பனித்துளி விழும் முன்பே பந்து பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வந்தது. நடுவரிசை பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. ஆனால் கடந்த 2 போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்று இருக்கிறது. ஹர்சல் படேல் 8-வதாக வந்தாலும் பேட்டிங் செய்கிறார். அவர் அரியானா அணிக்கு தொடக்க வீரராக ஆடியவர். தீபக் சாஹல் பேட்டிங்கை இலங்கை தொடரில் பார்த்தோம். அவரும் சிறப்பாக ஆடினார். சாஹல் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக் கூடியவர்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறி உள்ளார்.

    பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும்போது, “நியூசிலாந்து அணி உலக கோப்பையில் விளையாடிய 3 நாட்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளது. இது உண்மையிலேயே மிக எளிதானது அல்ல. இளம் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்” என்றார்.

    அடுத்து இரு அணிகள் இடையே இரண்டு டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது. 

    20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு அணியும் 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். அதில் 3-ல் தமிழகமும், 6-ல் கர்நாடகமும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டை ஆனது.
    புதுடெல்லி:

    13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான முன்னாள் சாம்பியன் கர்நாடகாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று(திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் மகுடத்துக்காக இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

    தமிழக அணி அரைஇறுதியில் ஐதராபாத்தை 90 ரன்னில் சுருட்டி மிரட்டியது. வேகப்பந்து வீச்சாளர் சரவணகுமார் 5 விக்கெட்டுகளை அள்ளினார். கர்நாடகா அணி அரைஇறுதியில் விதர்பாவை 4 ரன் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது. இவ்விரு அணிகளும் 2019-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சந்தித்த போது அதில் கர்நாடகா ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தமிழக அணி வரிந்து கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இவர்கள் 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். அதில் 3-ல் தமிழகமும், 6-ல் கர்நாடகமும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.
    வங்காளதேச அணி பேட்ஸ்மேனின் காலில் வேண்டுமென்றே பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து டாக்காவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது அந்த வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன் அபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய பந்தில் அபிப் சிக்சர் அடித்ததால் கோபத்தை அப்ரிடி இந்த வகையில் வெளிப்படுத்தி நடவடிக்கையில் சிக்கி இருக்கிறார்.
    டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-0 என வென்று அசத்தியது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் விளாசினார். இது ரோகித் சர்மாவின் 30வது அரை சதமாகும்.

    இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 30 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 29 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் அசாம் 25 அரை சதத்துடம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா எட்டியுள்ளார். 

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில இலங்கையின் நிசங்கா, கருணரத்னே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது.
    கல்லெ:

    வெஸ்ட் இண்டீஸ் அணி  இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு முதல் டெஸ்ட் கல்லெயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா, கேப்டன் கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர். பொறுப்புடன் ஆடிய நிசங்கா அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார். ஒஷாடா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  பொறுப்புடன் ஆடிய கருணரத்னே சதமடித்து அசத்தினார். டி சில்வா அரை சதமடித்தார்.

    முதல் நாள் முடிவில் இலங்கை அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 132 ரன்னும், டி சில்வா 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும், காப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    கொல்கத்தா:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடந்தது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன. குறிப்பாக அக்சர் படேலின் பந்துகளை சமாளிக்க  முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    டேரில் மிட்செல் 5 ரன்களிலும், மார்க் சாம்பன், பிலிப்ஸ் இருவரும் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணி, சற்று நிதானமாக ஆடியது.  அரை சதம் கடந்த குப்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் 2  விக்கெட்டுகளும் எடுத்தனர். 

    இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி உள்ளது. 
    150க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார்.
    கொல்கத்தா:

    நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா,  31 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதில், 5 பவுண்டரி, 3 சிக்சர்களும் அடங்கும். 

    இந்த போட்டியில் 3 சிக்சர்கள் அடித்ததன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லை ரோகித் சர்மா எட்டினார். 

    150க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் 124 சிக்சர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்களில் அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 91 சிக்சர்கள் அடித்துள்ளார்.
    கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.
    கொல்கத்தா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த ரோகித் சர்மா, 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 103. 

    வெங்கடேஷ் அய்யர் (20), ஸ்ரேயாஸ் அய்யர் (25), ஹர்ஷல் படேல் (18), அக்சர் பட்டேல் (2 ரன், அவுட் இல்லை), தீபக் சாகர் (21 ரன், அவுட் இல்லை) ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்க,  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7  விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக பின்கள வீரர்களின் அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே ஆரவார வரவேற்பை பெற்றது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது. 
    ×