என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா சாதனை
Byமாலை மலர்21 Nov 2021 4:34 PM GMT (Updated: 21 Nov 2021 4:34 PM GMT)
150க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார்.
கொல்கத்தா:
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, 31 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதில், 5 பவுண்டரி, 3 சிக்சர்களும் அடங்கும்.
இந்த போட்டியில் 3 சிக்சர்கள் அடித்ததன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லை ரோகித் சர்மா எட்டினார்.
150க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் 124 சிக்சர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்களில் அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 91 சிக்சர்கள் அடித்துள்ளார்.
Next Story
×