என் மலர்
செய்திகள்

ரோகித் சர்மா
டி20 போட்டிகளில் அதிக அரைசதம் - விராட் கோலி சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா
டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-0 என வென்று அசத்தியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் விளாசினார். இது ரோகித் சர்மாவின் 30வது அரை சதமாகும்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 30 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 29 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் அசாம் 25 அரை சதத்துடம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா எட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்...கல்லெ டெஸ்ட் - கருணரத்னே சதத்தால் முதல் நாள் முடிவில் இலங்கை 267/3
Next Story






