என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 42 ரன்கள் அடித்ததன் மூலம் இரண்டு சாதனை பட்டியலில் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 41-வது லீக் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதியதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியை சேர்ந்த டேவிட் வார்னர் 26 பந்தில் 42 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இரண்டு சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் சுனில் நரேன் பந்து வீச்சில் 176 ரன்கள் குவித்துள்ளார். 2 முறை மட்டுமே அவுட் ஆகி உள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்
1. சுனில் நரேனுக்கு எதிராக டேவிட் வார்னர் 176 ரன்கள் (2 முறை அவுட்)
2. பியூஸ் சாவ்லாவுக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 175 ரன்கள் (4 முறை அவுட்)
3. அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலி 160 ரன்கள் (1 முறை அவுட்)
4. மிஸ்ரா பந்து வீச்சில் விராட் கோலி 158 ரன்கள் (2 முறை அவுட்)
5. பிராவோ பந்து வீச்சில் விராட் கோலி 157 ரன்கள் (1 முறை அவுட்)
6. உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விராட் கோலி 150 ரன்கள் (3 முறை அவுட்)
மேலும் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் 1000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் 1005 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்
1. சென்னை அணிக்கு எதிராக ஷிகர் தவான் (1029)
2. கொல்கத்தா அணிக்கு எதிராக ரோகித் சர்மா (1018)
3. பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் (1005)
4. கொல்கத்தா அணிக்கு எதிராக வார்னர் (1000)
இதையும் படியுங்கள்...சச்சின், விராட் கோலி பட்டியலில் இணைந்த குல்தீப் யாதவ்
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் மோசமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐபிஎல்லின் வலிமையான அணியாக கருத்தப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு அனைத்து போட்டிகளிலும் வெளியேறி வருகிறார்.
அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலியும் சொற்ப ரன்களில், சில சமயம் டக் அவுட் ஆகி வெளியேறி வருகிறார். இருவரும் ரன்கள் குவிக்க வேண்டும் என விரும்பும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் மோசமாக விளையாடுவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
‘இருவரும் சிறந்த வீரர்கள். விரைவில் இருவரும் ஃபார்முக்கு திரும்பி விளையாடுவார்கள், அதிக ரன்களை அடிக்க தொடங்குவார்கள் என நம்புகிறேன். விராட் கோலியின் தலையில் என்ன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஆனால் தனது மோசமான ஃபார்மில் இருந்து அவர் மீண்டு வருவார்’ என தெரிவித்துள்ளார்.
அதுபோல ஐபிஎல் அணிகள் குறித்து பேசிய கங்குலி, அனைத்து அணிகளும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றன. எந்த அணி வேண்டுமானலும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. குறிப்பாக குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றன.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் டெல்லி அணியை சேர்ந்த குல்தீப் யாத்வ் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2022 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விலங்கிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அவர் 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவரையும் அவர் வீசியிருந்தால் 5 விக்கெட்டை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் பந்து ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியதாக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் குல்தீப் யாதவ் 8 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சாஹால் உள்ளார். இவர் 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதன் மூலம் ஒரு சீசனில் அதிக முறை ஆட்ட நாயன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார்.
ஒரு சீசனில் அதிக முறை ஆட்ட நாயன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியல்:-
5 விராட் கோலி - 2016
4 குல்தீப் யாதவ் - 2022
4 ருதுராஜ் கெய்வாட் - 2021
4 ரோகித் சர்மா - 2016
4 அமித் மிஸ்ரா - 2013
4 சச்சின் தெண்டுல்கர் - 2010
4 யூசப் பதான் - 2008
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரசல் அவுட் ஆன வேகத்தில் சாப்பாடு சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவி உள்ளது.
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரசல் 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிக்கொடுத்தது. அந்த நிலையில் அடுத்து வந்த ரசல் முதல் 2 பந்தில் ரன் எடுக்காமல் இருந்த அவர் 3-வது பந்தை பேட்டிங் கோட்டிற்கு வெளியே சென்ற ஆட முயற்சித்த போது ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.
இக்கட்டமான சூழலில் தனது விக்கெட்டை இழந்த ரசல் குறித்து ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் அவுட் ஆன வேகத்தில் ரசல் அறைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தார். அவர் சாப்பாடு எடுத்து வைக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் டுவிட்டரில் ரசலை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு ரசிகர் கூறியதாவது:- தாமதமாக வந்தால் உணவு முடிந்து விடும் என்று சொல்லியிருப்பாங்க. அதனால் தான் உடனே அவுட் ஆகி சாப்பிட சென்று விட்டார் என அவர் கூறினார்.
இந்த சீசனில் ஆந்த்ரே ரசல் 9 போட்டிகளில் விளையாடி 227 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 10-வது சீசனில் ரசல் 1927 ரன்களும் 82 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...பேட் கம்மின்சை வெளியில் உட்கார வைப்பது சரியான முடிவு இல்லை- யுவராஜ் சிங்
கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிதிஷ் ரானா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்து வீச்சில் 4 பவுலர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 5-வது பவுலராக ரசல் இருந்தார். இந்த போட்டியில் டிம் சவுத்தி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவருக்கு பதிலாக பேட் கம்மின்ஸ் அணியில் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ரசிகர்களின் கருத்தாக இருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கொல்கத்தா அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் அணியில் சேர்க்காதது சரியான முடிவு இல்லை. அவர் இடம் பெற்றிருந்தால் கொல்கத்தா அணி 2 அல்லது 3 வெற்றிகளை பெற்றிருக்க முடியும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
இதையும் படியுங்கள்...பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும்- ஷ்ரேயாஸ் அய்யர்
தொடக்க ஜோடி இன்னும் சரியாக அமையவில்லை என தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ்ராணா 57 ரன் எடுத்தது டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய டெல்லி அணி 84 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தவித்தது. அதன்பின் ரோமன் பாவெல் அக்சர் பட்டேல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டெல்லி அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து வென்றது.
வெற்றி குறித்து டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது, நாங்கள் நடு ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் அந்த நேரத்தில் அதிகமான ரன் எடுக்க தேவைப்படாததால் இலக்கை கடந்து விட முடியும் என்பதை அறிவோம்.
ரோமன் பாவெல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவராக பார்க்கிறோம். அந்த பணியை அவர் நன்றாகவே செய்துள்ளார்.
குல்தீப் யாதவுக்கு 4வது ஓவர் கொடுக்காதது பற்றி கேட்கிறார்கள். ஆடுகளத்தின் ஒரு முனையில் இருந்து அவருக்கு இன்னொரு ஓவரை கொடுக்க நினைத்தேன். பின்னர் அவர் மறுமுனையில் இருந்து பந்து வீச முடியும் என்று நினைத்தோம். பந்து ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளரிடம் கொடுப்பது நல்லது என நினைத்தோம். வேகப்பந்து வீச்சை கொண்டு வருவதற்காக அவரை நிறுத்தினேன். அது எங்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும் என்றார்.
கொல்கத்தா அணி தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:
நாங்கள் ஆட்டத்தை மெதுவாக தொடங்கினோம். விக்கெட்டுகளையும் இழந்தோம். நாங்கள் எடுத்த ரன் இந்த ஆடுகளத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன். முதல் பாதியில் நாங்கள் விளையாடிய விதத்துக்கு எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை.
எங்கே தவறு செய்தோம் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். சரியான தொடக்க ஜோடியை அமைக்க முயவில்லை. ஏனென்றால் சில வீரர்கள் ஆட்டங்களுக்கு இடையே காயம் அடைந்தனர். தொடர்ந்து தொடக்க ஜோடிகளை மாற்றி வருவது கடந்த சில ஆட்டங்களில் கடினமாக அமைந்து விட்டது.
முதல் ஆட்டத்தில் இருந்தே சரியான கவலையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அது சரியாக அமைந்தால் அங்கிருந்து ஆட்டத்தை எடுத்து செல்லாம்.
முடிவெடுப்பதில் மிகவும் பழமைவாதமாக இருக்காமல் எங்களிடம் உள்ளதை கடைபிடித்து பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும். கடந்த காலத்தை மறந்து விட்டு புதிதாக தொடங்கி உள்ளுணர்வை திரும்பபெறுங்கள். அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. இதில் தவறு ஏற்பட்டாலும் பரவாயில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...இங்கிலாந்தின் 81-வது டெஸ்ட் கேப்டனாக பதவியேற்றார் பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதிவியில் இருந்து ஜோ ரூட் பதவி விலகியுள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை புதிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் 81-வது டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. மேலும் புதிய டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தது.
பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறியுள்ளார்.
புதிய கேப்டனாக பதவியேற்ற பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இது ஒரு உண்மையான பாக்கியம், இந்த கோடையில் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக ஜோ ரூட் செய்த அனைத்திற்கும், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுக்கான சிறந்த தூதராக எப்போதும் இருப்பதற்கும் நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். டிரஸ்ஸிங் ரூமில் ஒரு தலைவராக எனது வளர்ச்சியில் அவர் ஒரு பெரிய பகுதியாக இருந்தார், மேலும் கேப்டன் பொறுப்பில் எனக்கு அவர் உறுதுணையாக தொடர்வார்.
இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.
இதையும் படியுங்கள்...இலங்கை அணிக்கு எதிரான தொடர்- டி20 போட்டிகளில் கம்மின்ஸ்க்கு ஓய்வு
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இலங்கைக்கு செல்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சம்பாவுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
16 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் ஸ்டெகெட்டி ஆகியோர்
நீக்கப்பட்டுள்ளனர், ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணியில் ஆடுவார்கள்.
பாகிஸ்தான் தொடரில் இடம்பெறாத ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், மேக்ஸ்வேல் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா ஏ அணி இரண்டு 50 ஓவர் போட்டிகளிலும் 4 நாட்கள் அடங்கிய டெஸ்ட் போடிகளில் இரண்டிலும் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா டி20 அணி: ஆரோன் பின்ச், சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்சன், வார்னர், மேத்யூ வேட்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: ஆரோன் பின்ச், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
இதையும் படியுங்கள்...டிஎன்பிஎல் கிரிக்கெட் ஜூன் 23ல் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியீடு
இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 104 அணிகள் கலந்து கொள்கின்றன.
சென்னை:
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்கி மே 7-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் பிரிவில் வருமானவரி, இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், சுங்கஇலாகா உள்பட 74 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், சங்கம் கிளப், இந்துஸ்தான் உள்பட 30 அணிகளும் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்று முதல் மே 3-ந் தேதி வரை நேரு ஸ்டேடியத்திலும், நாக்- அவுட் சுற்று ஆட்டங்கள் மே 4-ந் தேதி முதல் தியாகராயநகர் வெங்கடநாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலிலும் நடக்கிறது.
தினசரி போட்டிகள் மாலை 4 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று ரைசிங் ஸ்டார் கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 146 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.
டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.
டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரத்வி ஷா டக் அவுட்டானார்.
டேவிட் வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். மார்ஷ் 13 ரன்னுக்கும், லதித் யாதவ் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்னுடன் வெளியேறினார்.
அக்சர் படேல் 24 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். பாவெல் 16 ரன்களில் 33 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதையும் படியுங்கள்...
டிஎன்பிஎல் கிரிக்கெட் ஜூன் 23ல் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியீடு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.
டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.
இந்த ஆண்டின் டிஎன்பிஎல் தொடரில் 28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன.
சென்னை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. அவ்வகையில் 6-வது டி.என்.பி.எல். போட்டியை வரும் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில் 6வது டிஎன்பிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. போட்டி ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டி நடைபெறும்.

28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. பிளேஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கின்றன. ஜூலை 30ம் தேதி கோவையில் இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் துவக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது.






