search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டேவிட் வார்னர்
    X
    டேவிட் வார்னர்

    ஐபிஎல் 2022: இரண்டு சாதனை பட்டியலில் இடம் பிடித்த டேவிட் வார்னர்

    கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 42 ரன்கள் அடித்ததன் மூலம் இரண்டு சாதனை பட்டியலில் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 41-வது லீக் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதியதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியை சேர்ந்த டேவிட் வார்னர் 26 பந்தில் 42 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இரண்டு சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் சுனில் நரேன் பந்து வீச்சில் 176 ரன்கள் குவித்துள்ளார். 2 முறை மட்டுமே அவுட் ஆகி உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

    1. சுனில் நரேனுக்கு எதிராக டேவிட் வார்னர் 176 ரன்கள் (2 முறை அவுட்)

    2. பியூஸ் சாவ்லாவுக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 175 ரன்கள் (4 முறை அவுட்)

    3. அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலி 160 ரன்கள் (1 முறை அவுட்)

    4. மிஸ்ரா பந்து வீச்சில் விராட் கோலி 158 ரன்கள் (2 முறை அவுட்)

    5. பிராவோ பந்து வீச்சில் விராட் கோலி 157 ரன்கள் (1 முறை அவுட்)

    6. உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விராட் கோலி 150 ரன்கள் (3 முறை அவுட்)

    மேலும் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் 1000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் 1005 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

    1. சென்னை அணிக்கு எதிராக ஷிகர் தவான் (1029)

    2. கொல்கத்தா அணிக்கு எதிராக ரோகித் சர்மா (1018)

    3. பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் (1005)

    4. கொல்கத்தா அணிக்கு எதிராக வார்னர் (1000)

    Next Story
    ×