என் மலர்
விளையாட்டு
கேப்டன் பொறுப்புக்கு பென் ஸ்டோக்ஸ் பெயரை, கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குனர் ரோப் கீ பரிந்துரை செய்தார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 4-0 தோல்வியடைந்தது. இதேபோல் வெஸ்ட் இண்டீசிடம் 1-0 என தோல்வியடைந்தது. இந்த தொடர் தோல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சமீபத்தில் பதவி விலகினார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் அணியின் 81வது கேப்டன் ஆவார்.
கேப்டன் பொறுப்புக்கு பென் ஸ்டோக்ஸ் பெயரை, கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குனர் ரோப் கீ பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரைக்கு கிரிக்கெட் வாரியம் நேற்று மாலை ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து தொடர்களில் வெற்றி பெறாத நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கிலாந்து அணி தற்போது 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, சீன வீராங்கனை பிங் ஜியாவோவை எதிர்கொள்கிறார்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். இன்று நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் வீராங்கனை யு யான் யாஸ்லினை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 21-16, 21-16 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
போட்டி தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள சிந்து, காலிறுதி ஆட்டத்தில் மூன்றாம் தரநிலையில் உள்ள சீன வீராங்கனை பிங் ஜியாவோவை எதிர்கொள்கிறார்.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியும் காலிறுதியை உறுதி செய்தது. சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார் என ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணி ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து 7வது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.
அபிஷேக் சர்மா 42 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), மர்க்கிராம் 40 பந்தில் 56 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) சான் சிங் 6 பந்தில் 25 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஷமி 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் விர்த்திமான் 38 பந்தில் 68 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), ராகுல் திவேதியா 21 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ரஷீத்கான் 11 பந்தில் 31 ரன்னும் (4 சிக்சர்) எடுத்தனர்.
உம்ரான் மாலிக் 25 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இந்த சீசனில் புதிய சாதனை படைத்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய்விட்டது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் குஜராத் வென்றது. 22 ரன் தேவைப்பட்டது. ஜான்சென் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் திவேதியா சிக்சர் அடித்தார். 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் ரஷீத்கான் சிக்சர் அடித்தார். 4வது பந்தில் ரன் எடுக்கவில்லை.
இதனால் கடைசி 2 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரஷீத்கான் மீண்டும் சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 3 ரன் தேவை. ரஷீத்கான் கடைசி பந்திலும் சிக்சர் அடித்து அந்த அணியை வெற்றிபெற வைத்தார். கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் (திவேதியா1, ரஷித்கான்3) அடிக்கப்பட்டது.
ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி 3வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:
இது ஒரு அற்புதமான கிரிக்கெட் போட்டியாகும். 40 ஓவர்கள் முழுவதும் சிறப்பாக இருந்தது. வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றுள்ளோம். இதனால் நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோற்றுள்ளோம். குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார். இந்த போட்டி மூலம் நாங்கள் ஏராளமான விஷயங்களை கற்றோம். ஆனால் அதே நேரத்தில் 2 சிறந்த அணிகள் மோதும் போது இது மாதிரி நடக்கலாம். கடைசி ஓவரை வீசிய ஜான்சென் மீண்டும் பலம் பெற்று திரும்புவார். இன்னும்நிறைய ஆட்டங்கள் இருக்கிறது.
ஐதராபாத் அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 31ந் தேதி எதிர் கொள்கிறது.
குஜராத் அணி 7வது வெற்றியை பெற்றது. அதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. குஜராத் 9வது போட்டியில் பெங்களூரை 30ந் தேதி சந்திக்கிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி அதிகபட்சமாக 5 முறையும், சென்னை அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மும்பை:
ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
கொல்கத்தா 8,428 கோடி ருபாயுடன் 3-வது இடத்திலும், லக்னோ 8,236 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளது.
டெல்லி 7,930 கோடி ரூபாயுடன் 5வது இடத்திலும், பெங்களூரு 7,853 கோடி ரூபாயுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
ராஜஸ்தான் 7,662 கோடி ரூபாயுடன் 7-வது இடத்திலும், ஐதராபாத் 7,432 கோடி ரூபாயுடன் 8-வது இடத்திலும் உள்ளது.
பஞ்சாப் 7,087 கோடி ரூபாயுடன் 9-வது இடத்திலும், குஜராத் 6,512 கோடி ரூபாயுடன் 10-வது இடத்திலும் உள்ளது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் 2022- அதிக மெய்டன் ஓவர் வீசிய டாப் 5 வீரர்கள்
ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் விருத்திமான் சஹா, ஷுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஐதராபாத் 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அபிஷேக் சர்மா 65 ரன்களிலும், மார்க்ராம் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
குஜராத் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், யாஷ் தயாள், ஜோசப் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 22 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 10 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ராகுல் திவாட்டியா நிதானமாக ஆடினார்.
குஜராத் வெற்றி பெற கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. திவாட்டியா, ரஷீத் கான் ஜோடி போராடியது. கடைசி பந்தில் சிக்சர் அடித்து குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத் சார்பில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
குஜராத் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோரை அவுட் ஆக்கினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர், அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மாவுடன் மார்க்ராம் இணைய, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை விளாசினர். அபிஷேக் சர்மா 65 ரன்களிலும், மார்க்ராம் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நிகோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. கடைசியில் அதிரடி காட்டிய ஷஷாங் சிங் 25 ரன்களுடனும், ஜான்சன் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
குஜராத் தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோரை அவுட் ஆக்கினார். யாஷ் தயாள், ஜோசப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகிய நிலையில் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஷஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த தொடர் தோல்வியைத் தொடர்ந்து, சமீபத்தில் ஜோ ரூட் பதவி விலகினார். இந்நிலையில் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 31 வயதான ரூட், அலாஸ்டர் குக்கிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் இரண்டாவது அதிக டெஸ்ட் ரன் அடித்தவர்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் கேப்டன் பதவியை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் இயக்குனரான ரோப் கீ-யை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணியில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை மீண்டும் அணியின் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் அணிக்கான புதிய தலைமைப்பயிற்சியாளரை நியமிப்பதிலும் ரோப் கீ ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பொறுப்புகளை தனித்தனியாகப் பிரித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் கேரி கிர்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் சைமன் கட்டிச் ஆகியோரை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்...இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த சரியான ஆளு ரிஷப் பண்ட்- யுவராஜ் சிங்
இளம் வீரர் ரிஷப் பண்டை டோனியுடன் ஒப்பிடலாம் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் 3 வடிவிலான அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வயது 34. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
ரிஷப் பண்டை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இந்திய அணியை வழிநடத்துவதில் அவர்தான் சரியான வீரர் என நான் நினைக்கிறேன். அவரை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் டோனியுடன் ஒப்பிடலாம்.
ரோகித் சர்மாவுக்கு வயதாகி வரும் நிலையில் இந்திய அணிக்கு இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும். அவரது திறமையை நிருபிக்க அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதம் அல்லது ஒரு வருடம் அவரிடம் இருந்து எந்தவித எதிர்ப்பார்ப்பும் வேண்டாம். நீங்கள் இளம் வீரர்களிடம் இருந்து நல்ல திறமையை நம்ப வேண்டும் என நான் நினைக்கிறேன்.
24 வயது என்பது தடை இல்லை. அவர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்று வரை அணியை கொண்டு சென்றிருக்கிறார். அந்த வயதில் எனக்கு கேப்டன்ஷிப் பற்றி பெரிதாக தெரியவில்லை. விராட் கோலியும் அந்த வயதில் கேப்டனாக இருந்த போது நிறைய நுணுக்கங்களை தெரியாமல் இருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்கிறார்.
இதைப்பற்றி அணி நிர்வாகம் எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் டெஸ்ட் அணியை வழிநடத்த சரியான வீரர் என்று நான் நினைக்கிறேன்.
ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் 4 சதம் அடித்துள்ளார். மேலும் அவர் சிறந்த இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அவரை எதிர்கால ஜாம்பவானக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...திறமையை வீணடிக்கிறார் சஞ்சு சாம்சன் - இயன் பிஷப்
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட் ஆனது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 21 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஹசரங்காவின் முதல் ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த சாம்சன், ஹசரங்காவின் 2-வது ஓவரில் ரிவர்ஸ் சுவிப் அடிக்க முயன்ற போது பந்து பேட்டில் படவில்லை. அடுத்த பந்தும் அதே போல அடிக்க முயன்ற போது போல்ட் ஆனார்.
இந்நிலையில் சாம்சன் அவரது திறமையை வீணடிக்கிறார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருக்கிறார். அதிகமாக ரன்கள் சேர்த்து சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் அவர் தனது திறமையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய போட்டியில் ஹசரங்கா பந்து வீச்சில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். நான் சாம்சனின் தீவிர ரசிகன். அவர் சாட் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. 2-ல் தோல்வி அடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்...சிக்சர் அடித்த பராக் - கை கொடுக்க மறுத்த ஹர்சல் படேல்- வைரலாகும் வீடியோ
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி (ஆண்களுக்கு மட்டும்) வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 29-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அணிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரியான் பராக் மற்றும் ஹர்சல் படேல் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் மற்றும் பெங்களூர் அணி வீரர் ஹர்சல் படேல் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் அதிகமாக எடுக்காத நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 56 ரன்கள் எடுத்து அணிக்கு கெளவுரமான ஸ்கோரை எடுத்து கொடுத்தார்.
ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் பராக் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். ஓவர் முடிந்து அனைத்து வீரர்களும் ஓய்வு அறைக்கு செல்லும் போதுதான் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
This was after 2 sixes were hit off the last over pic.twitter.com/qw3nBOv86A
— ChaiBiscuit (@Biscuit8Chai) April 26, 2022
இதனையடுத்து பெங்களூர் அணி களமிறங்கி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டான ஹர்சல் படேல் சிக்சர் அடிக்க முயன்ற போது பராகிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் சிரித்தப்படியே அந்த கேட்ச்சை பிடிப்பார்.
One Young Talent Jealous Of Other.
— JAYAKRISHNA (@ImJK_117) April 27, 2022
Very #Unsportive Behaviour From Harshal Patel. Keep Going Riyan Parag @rajasthanroyals@RCBTweets@IPLpic.twitter.com/Sg0Pv2pfSC
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் கை கொடுப்பார்கள். அதன்படி பராக் கை கொடுக்க வரும் போது ஹர்சல் படேல் அவருக்கு கை கொடுக்காமல் சென்று விடுவார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை
ஐபிஎல் 2022 சீசனில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த பிரதிஷ் கிருஷ்ணா 8 போட்டிகளில் விளையாடி 2 மெய்டன் ஓவர்களை வீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் அதிமான மெய்டன் ஓவர்கள் வீசப்படுகிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்சல் படேல் உள்ளார். 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் டெத் ஓவரில் 2 மெய்டன் வீசி உள்ளார். அடுத்ததாக ராஜஸ்தான் அணியை சேர்ந்த பிரதிஷ் கிருஷ்ணா 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
3-வது இடத்தில் லக்னோ அணியை சேர்ந்த கிருஷ்ணப்பா கெளதம் உள்ளார். 2 போட்டிகளில் விளையாடிய இவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி அணிக்கு எதிராக 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
4-வது இடத்தில் பெங்களூர் அணியை சேர்ந்த ஹசில்வுட் உள்ளார். 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் 1 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார். கடைசி இடத்தில் உமேஷ் யாதவ் உள்ளார். இவர் 1 மெய்டன் ஓவர் உள்பட 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் இந்த சீசசின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை






