என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அபிஷேக் சர்மா
    X
    அபிஷேக் சர்மா

    அபிஷேக் சர்மா, மார்க்ராம் அசத்தல்... குஜராத் அணிக்கு எதிராக 195 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    குஜராத் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோரை அவுட் ஆக்கினார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு  செய்தது. 

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர், அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மாவுடன் மார்க்ராம் இணைய, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை விளாசினர். அபிஷேக் சர்மா 65 ரன்களிலும், மார்க்ராம் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    நிகோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. கடைசியில் அதிரடி காட்டிய ஷஷாங் சிங் 25 ரன்களுடனும், ஜான்சன் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

    குஜராத் தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோரை அவுட் ஆக்கினார்.  யாஷ் தயாள், ஜோசப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
    Next Story
    ×