என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் மீண்டும் அரை சதமடித்து அசத்தினார்.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடினார்.

    தேவ்தத் படிக்கல் 15 ரன்னும், சஞ்சு சாம்சன் 16 ரன்னும், மிட்செல் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 67 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.
    நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    சென்னை:

    ஐ.பி.எல். சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில்  9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) கோப்பையை வென்றுள்ளது.  5 தடவை 2-வது இடத்தை பிடித்தது. 

    இவ்வாறு சென்னை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக  விளங்கிய கேப்டன் டோனி இந்த சீசனில் இல்லை. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.

    ஆனால், டோனி இல்லாத நிலையில் இந்த சீசனில் சென்னை அணி  எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில் 9ம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில், கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க உள்ளார் ஜடேஜா. கேப்டன் பதவியை ஏற்க டோனியும்  சம்மதித்துள்ளார்.

    இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை மீண்டும் எம்.எஸ்.டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா. அவர் தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சி.எஸ்.கே. அணியை வழிநடத்தவும் டோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் அணியை வழிநடத்த டோனி ஒப்புக்கொண்டார்.

    இவ்வாறு சிஎஸ்கே தெரிவித்துள்ளது.
    பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத்தின் மில்லர், திவாட்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் சார்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட், ஷமி, ரஷீத் கான், பெர்குசன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சஹா, ஷுப்மான் கில் ஜோடி 50 ரன்களை கடந்தது.

    சஹா 29 ரன், ஷுப்மான் கில் 31 ரன், சாய் சுதர்சன் 20 ரன், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் திவாடியா ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39 ரன்னும், திவாட்டிய 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் ஆடிய வீரர்களுடன் முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி தான் ஆடிய 8 போட்டிகளில் அனைத்திலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
    குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி, படிதார் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

    அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர். டூ பிளசிஸ் டக் அவுட்டானார். 

    அடுத்து இறங்கிய ரஜத் படிதார் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். படிதார் 52 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    குஜராத் சார்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட், ஷமி, ரஷீத் கான், பெர்குசன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    இம்ரான் மாலிக் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசி வரும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் இருக்கிறார். 

    இந்த தொடரில் மாலிக் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 விக்கெட்டுகளை குஜராத் டைடன்ஸுக்கு எதிரான சன் ரைசர்ஸின் கடைசி போட்டியில் எடுத்தார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 3வது இடத்தில் உம்ரான் மாலிக் இருக்கிறார். இவர் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்த தொடரில் கண்டறியப்பட்ட சிறந்த முகம் என உம்ரான் மாலிக் தான் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 7 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களுடன் அந்த அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

    டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது.
    தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாமல் தன்னை 2017-ல் திவாலானவராக அறிவித்தார்.
    லண்டன்: 

    முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (54). இவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முறை வென்றவர்.

    லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். அப்போது இவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது.

    தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய அவர் அதை திருப்பிச் செலுத்தாமல் தன்னை 2017-ல் திவாலானவராக அறிவித்தார். சொத்துக்களை மறைத்து ஏமாற்றியதாக 20 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது.

    இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
    உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
    மணிலா:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது. 

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார். 

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார். 

    இதனையடுத்து ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
    புனே:

    நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. போட்டி நிறைவுக்கு பின்னர் லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் முட்டாள்தனமான கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் இன்னிங்ஸின் முடிவில் நான் ஏமாற்றமடைந்தேன், எரிச்சலடைந்தேன்.

    நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். நாங்கள் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்திருந்தால், 180 முதல் 190 வரை எடுத்திருக்கலாம். 

    விளையாட்டை படிப்பதில் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தவறான ஷாட்களை விளையாடாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். 

    போட்டி முழுவதும் குருணால் சிறப்பாக செயல்பட்டார். இந்த சீசனில் அவர் தனது பந்துவீச்சில் முழு உழைப்பை செலுத்தி உள்ளார். ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்காமல் பந்து வீசுவது முக்கியமானது,  அவர் நடுத்தர ஓவர்களில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை எங்களுக்குக் கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் டி காக், தீபக் ஹூடா ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது.
    புனே:

    புனேவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 42 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கே.எல்.ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். 

    அவருக்கு தீபக் ஹூடா ஒத்துழைப்பு கொடுத்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் டி காக் அவுட்டானார். ஹூடா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    அடுத்து வந்த குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி மற்றும் ஜேசன் ஹோல்டர் என யாரும் நிலைத்து நிற்கவில்லை. 

    இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணியில் துவக்க வீரரும் கேப்டனுமான மயங்க் அகர்வால் 25 ரன்கள் அடித்தார். ஷிகர் தவான் 5 ரன்னுடன் வெளியேற, ஜானி பேர்ஸ்டோவ் 32 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    லிவிங்ஸ்டோன் 18 ரன்னுக்கு அவுட்டானார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து. 

    இதையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி பெற்றது.

    பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் டி காக், தீபக் ஹூடா ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது.
    புனே:

    புனேவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 42 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கே.எல்.ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். அவருக்கு தீபக் ஹூடா ஒத்துழைப்பு கொடுத்தார்.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் டி காக் அவுட்டானார். ஹூடா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி மற்றும் ஜேசன் ஹோல்டர் என யாரும் நிலைத்து நிற்கவில்லை.   

    இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×