என் மலர்
விளையாட்டு
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
#Deaflympics2021 begins today in Brazil. #TeamIndia has sent the biggest ever contingent
— SAI Media (@Media_SAI) May 1, 2022
Before leaving for Brazil, the contingent visited #NationalWarMemorial where they learnt about & paid tribute to our heroes @PMOIndia@rajnathsingh@salute2soldier@DeafSportsIndiapic.twitter.com/QibTk4JeJz
புனே:
ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது.
சி.எஸ்.கே. அணி பெங்களூரை 23 ரன் வித்தியாசத்தலும், மும்பையை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் கிங்சிடம் (54 ரன் மற்றும் 11 ரன்) இரண்டு முறையும், கொல்கத்தா (6 விக்கெட் லக்னோ (6 விக்கெட்), ஐதராபாத் (3 விக்கெட்), ஆகியவற்றிடம் தலா ஒரு முறையும் தோற்று இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது. புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகினார். அவர் கேப்டன் பதவியை டோனியிடம் ஒப்படைத்துள்ளார். பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதால் அதில் கவனம் செலுத்துவதற்காக ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளார். டோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்த ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி ஜடேஜாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சென்னை அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. 8 போட்டியில் 6ல் தோற்றது. இரண்டி மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு கேப்டன் பதவியால் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என 3 துறையும் பாதிக்கப்பட்டது. எஞ்சிய ஆட்டங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் டோனி மீண்டும் கேப்டனாகி உள்ளார்.
டோனியின் கேப்டன் பதவியால் சென்னை சூப்பர் கிங்ஸ் எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத்தை வீழ்த்த இயலும்.
ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி சி.எஸ்.கே.வை மீண்டும் வீழ்த்தி 6வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஐதராபாத்தின் பலமே வேகப்பந்து வீச்சுதான். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜ ன், ஜான்சென் போன்ற சிறந்த வேகப்பந்து வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 12ல் ஐதராபாத் 5ல் வெற்றி பெற்றுள்ளன.
முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி லக்னோவை வீழ்த்தி 5வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோவிடம் ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இதற்கு டெல்லி அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 7வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.






