என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிம்ரன் ஹெட்மயர் தாமதமாக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் நிதிஷ் ரானா, ரிங்கு ஆகியோர் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் சிம்ரன் ஹெட்மயர் தாமதமாக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளரான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
பினிஸ்சர் என்றால் 14-வது ஓவர் அல்லது 15-வது ஓவரில் களமிறங்குவது என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி அல்ல அவரது ஆட்ட திறனைப் பார்த்து அவரை சில ஓவர்களுக்கு முன்னாள் கூட களமிறங்க வைக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சிம்ரன் ஹெட்மயரை தாமதமாக களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் 2022: காதலியா? கிரிக்கெட்டா? மிரள வைக்கும் ரசிகர்களின் பேனர் வாசகங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்காக ரசிகர்கள் வைத்திருக்கும் பேனர் வாசகங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத சென்னை, மும்பை அணிகள் கடைசி 2 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீசனில் ரசிகர்களின் பேனர் வசனங்கள் கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.
21-லீக் போட்டியில் குஜராத்-ஐதராபாத் அணிகள் ஏப்ரல் 11-ந் தேதி மோதின. இதில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது ரசிகர் ஒருவரின் கையில் வைத்திருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் வைத்திருந்த பேனரில் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்வதாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி ரசிகையின் பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த ரசிகை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளார். போட்டியின் போது வைத்திருந்த பேனரில் விராட் கோலி தனது 71-வது சதத்தை எப்போது அடிக்கிறாறோ அப்போதுதான் நான் டேட்டிங் செய்வதாக இருந்தது. இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது.

22-லீக் போட்டியில் பெங்களூர்- சென்னை அணிகள் மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் ரசிகையின் பேனர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருந்தது. அவர் வைத்திருந்த பேனரில், பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என இருந்தது.

இதே போட்டியில் மற்றோரு ரசிகரின் பேனர் கேமரா மேனுக்காக வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் விளையாட்டு வீரர்களுக்கு வைத்திருக்கும் பேனர்களுக்கு மத்தியில் இந்த ரசிகர் கேமரா மேனுக்கு பேனர் வைத்திருந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதில் பெண்களை மட்டும் கேமராவில் பதிவு செய்கின்றனர். ஆண் ரசிகர்களையும் பதிவு செய்யலாமே என்று இருந்தது. இந்த புகைப்படமும் வைரலானது.

25-வது லீக் போட்டியில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதின.இதில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ரசிகர் ஒருவரின் பேனர் அவரது காதலி குறித்து இருந்தது. அந்த பேனரில் எனது காதலி நானா அல்லது ஐபிஎல் கிரிக்கெட்டா என கேட்டால். நான் அதற்கு ஐபிஎல் போட்டியை தேர்வு செய்தேன் என்று அந்த பேனரில் இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுவரை ரசிகர்களிடமிருந்து சில நகைச்சுவையான பதாகைகள் சமூக வலைதளங்கில் வைரலான நிலையில் இன்னும் பல பேனர்களை எதிர்பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்...ரிங்குசிங், பந்து வீச்சாளர்களுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
சாம்பியன் லீக் மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய போட்டிகளிலும் ரஷிய கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.
பாரிஸ்:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ரஷியா மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த சீசன் சாம்பியன் லீக் மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய போட்டிகளிலும் ரஷிய கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “2022-23ம் ஆண்டு சீசனில் கிளப் போட்டிகளில் எந்த ரஷிய கிளப் அணிகளும் விளையாட அனுமதி கிடைக்காது. மேலும் அறிவிப்பு வரும் வரை ரஷிய கிளப் அணிகள் மற்றும் தேசிய அணிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடக்கும் பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ரஷிய அணி விலக்கப்பட்டது. அதற்கு பதில் போர்ச்சுக்கல் அணி இடம் பெற்றது.
மேலும் 2028 அல்லது 2032ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் ரஷியாவின் முயற்சியும் தகுதி இல்லாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் 2022- சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி 9 ஆட்டத்தில் 8 வெற்றி பெற்றுள்ளது. 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் முனைப்பில் குஜராத் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் விர்த்திமான் சகா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் முகமது சமி, ரஷித்கான் பெர்குசன் ஆகியோர் உள்ளனர்.
பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கும் குஜராத் அணி ஏற்கனவே பஞ்சாப்புடன் மோதிய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளன.
அந்த அணியில் ஷிகர்தவான், லிவிங்ஸ்டன், பானுகா ராஜபக்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாகர், ரிஷிதவான், சந்தீப் சர்மா ஆகியோர் உள்ளனர்.
பஞ்சாப் அணி ஒரு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் அந்த உத்வேகத்தை அடுத்த ஆட்டத்தில் தொடர தவறவிட்டு விடுகிறது. இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.
குஜராத்துக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் 190 ரன் இலக்கை நிர்ணயித்தும் தோல்வி அடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் முயற்சிக்கும். மேலும் குஜராத்தின் தொடர் வெற்றிக்கு பஞ்சாப் முட்டு கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்...ரிங்குசிங், பந்து வீச்சாளர்களுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
வலை பயிற்சியில் உமேஷ் யாதவுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன் எடுத்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆரோன் பின்ச் 4 ரன்னிலும், பாபா இந்திரஜித் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் நிதஷ் ராணா ரிங்கு சிங் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.
நிதிஷ் ராணா 48 ரன்னுடனும், ரிங்குசிங் 42 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:
பவர்பிளேவில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவர்பிளேயில் 36 ரன்களை விட்டு கொடுத்து விக்கெட்டை கைப்பற்றினர். அது போன்ற தொடக்கம் தான் எங்களுக்கு தேவைப்பட்டது.
உமேஷ் யாதவ், கடினமான நீளங்களை வீசுகிறார். அவர் தனது வேகத்தை அதிகரித்துள்ளார். வலை பயிற்சியில் அவருக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அவரிடம் நிறைய திட்டங்கள் உள்ளது. அதை அறிவது மிகவும். கடினம்.
ஒரு கேப்டனாக நீங்கள் அவருக்கு பந்தை கொடுக்கும் போது அவர் எப்போதும் திட்டங்களை செயல்படுத்த தயாராக இருப்பார். சுனில் நரேன் அணிக்கு ஒரு பெரிய சொத்து. அவரிடம் நான் எப்போது பந்தை கொடுக்கிறேனோ விக்கெட்டுகளை எடுக்க தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாளராக இருக்கிறார். அவர் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்.
ரிங்கு சிங்கை பற்றி நான் டிரசிங் அறையில் சக வீரர்களுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் தனது 2வது அல்லது 3வது ஆட்டத்தில் விளையாடும்போது, நெருக்கயான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருந்த விதம் மிகவும் சிறப்பானது. அந்த சூழலில் நிதிஷ்ராணாவுடன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது பாராட்ட வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார் என்றார்.
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுசாம்சன் கூறும்போது, ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. அவர்கள் (கொல்கத்தா) நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் நாங்கள் சில பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும்.
15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் போராட்டத்தை வெளிப்படுத்தினோம். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றார்.
கொல்கத்தா அணி 4வது வெற்றியை (10 ஆட்டம்) பெற்றது. ராஜஸ்தான் 4வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற, டூட்டி சந்த்திற்கு இந்த போட்டியில் 2வது இடமே கிடைத்தது.
பெங்களூரு:
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் , ஒலிம்பிக் வீராங்கனை டூட்டி சந்தை, பின்னுக்கு தள்ளிய இளம் வீராங்கனை பிரியா மோகன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்
200 மீட்டம் ஓட்டம் இறுதி ஆட்டத்தில் பிரியா மோகன் 23.90 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். 24.02 வினாடிகளில் பின்தங்கிய டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ராஞ்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புளோரன்ஸ் பர்லா 24.13 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இது சிறந்த தொடக்கம் என்றும், தங்க பதக்கம் வென்றது சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற உதவும் என்றும், பிரியா மோகன் தெரிவித்தார்.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன் 49 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 54 ரன்கள் சேர்த்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஜாஸ் பட்லர் 22 ரன்களும், ரியான் பராக் 19 ரன்களும் சேர்த்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர், 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், அனுகுல் ராய், ஷிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச் 4 ரன்னுடன் வெளியேற பாபா இந்திரஜித் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்ராணா, ரிங்குசிங்கும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். நிதிஷ்ராணா 48 ரன்களும், ரிங்குசிங் 42 ரன்களும் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
19.1 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்ததுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 49 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 54 ரன்கள் சேர்த்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஜாஸ் பட்லர் 22 ரன்களும், ரியான் பராக் 19 ரன்களும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர், 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், அனுகுல் ராய், ஷிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
நடால், ஜோகோவிச் கண்டனத்தையடுத்து விம்பிள்டன் அவர்களுக்கு பதிலளித்துள்ளது.
லண்டன்:
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. அதேபோன்று ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது என தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடையால் அமெரிக்க ஓபன் சாம்பியன் டேனில் மெத்வதேவ், ஆண்ட்ரி ரூப்ளேவ், ஃபிரெஞ்ச் ஓபன் போட்டியில் 2வது இடம் பிடித்த அனஸ்தேசிய பாவ்லியுசென்கோவா உள்ளிட்ட முக்கிய ரஷிய வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஜரென்காவும் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இவர் ரஷிய படைகளுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இதற்கு டென்னிஸ் நட்சத்திரங்கள் ரஃபேல் நடால், ஜோகோவிக் ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நடால் கூறியதாவது:-
ரஷியாவை சேர்ந்த எனது டென்னிஸ் நண்பர்கள், சக வீரர்கள் விம்பிள்டனொல் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்று வரும் ரஷிய போருக்கு அவர்கள் ஒன்றும் காரணம் கிடையாது. அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
ரஷிய வீரர்களின் தடை விம்பிள்டன் எடுத்த முடிவு. அரசாங்கம் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. வரும் வாரங்களில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். இதுகுறித்து வீரர்கள் எதாவது முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நடால் தெரிவித்திருந்தார்.
இந்த தடை குறித்து ஜோகோவிச் கூறுகையில்,
கடந்த வருடம் கொரோனா தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலியாவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். அதுவும் இதும் ஒன்றல்ல. இருப்பினும் நான் எத்தகைய சிக்கல்களை சந்தித்தேனோ அதேபோன்ற சிக்கல்களை தான் எனது நண்பர்கள் சந்திக்கிறார்கள். நான் இப்போதும் என் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன். நான் விம்பிள்டனுக்கு ஆதரவு தர மாட்டேன். இது நியாயம் அல்ல. இது சரியல்ல.
இவ்வாறு ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
இவர்களின் கருத்துக்கு விம்பிள்டன் போட்டியை நடத்தும் அனைத்து இங்கிலாந்து கிளப் பதிலடி கொடுத்துள்ளது. இத்தகைய நியாயமற்ற மற்றும் இதற்கு முன் இல்லாத ராணுவ ஆக்கிரமிப்பின் சூழ்நிலையில்,டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷ்ய அல்லது பெலாரஸ் வீரர்கள் பங்கேற்பது மூலம் ரஷ்ய ஆட்சி எந்த நன்மையையும் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா இரண்டு அணிகளை களமிறக்குகிறது.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பிரவின் திப்சே அணியை வழிநடத்துவார்.

ஓபன் பிரிவு முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத், இரண்டாவது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் பயிற்சியாளராக இருப்பார்கள். பெண்கள் முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டேவும், இரண்டாவது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்வப்னில் தோபடேவும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2014ம் ஆண்டு நார்வேயில் நடந்த ட்ரோம்சோ செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. அதன்பின்னர் 2020-ல் இணையம் வழியாக நடந்த ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் ரஷியாவும் இணைந்து தங்கம் வென்றன. 2021-ல் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.

இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து, ரஷியாவில் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிகள் விவரம்:
ஓபன் பிரிவு அணி-1: விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், கே.சசிகிரண்.
ஓபன் பிரிவு அணி-2: நிஹால் சரின், டி குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி.
பெண்கள் அணி-1: கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.
பெண்கள் அணி-2: வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ராத், திவ்யா தேஷ்முக்.
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார். அவர் இரண்டு முறை 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஆட்டத்தின் 10வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முதலில் இந்த வேகத்தில் வீசினார். இதில் அவர் பவுண்டரி அடித்தார். பின்னர் 19வது ஓவரில் டோனிக்கு போட்ட யார்க்கர் பந்து 154 கிலோ வேகத்தில் வந்தது. இந்த ஐ..எல். சீசனில் அதிவேகத்தில் பந்து வீசிய பெர்குசனை அவர் முந்தினார். குஜராத் அணி வீரரான பெர்குசன் 153.9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இருந்தார்.
24 வயதான காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் இந்த சீசனில் அதிவேகத்தில் பந்து வீசிய ‘டாப்5’ல் நான்கில் இடம் பெற்றுள்ளார். அவர் இதற்கு முன்பு 153.3 கி.மீ., 153.1 கி.மீ., 152.9 கி.மீ. வேகத்தில் வீசி இருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
புனே:
ஐதராபாத் அணியுடனான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேசியதாவது:
பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி எங்களுக்கு நல்ல இலக்கை வெற்றிக்கரமாக பந்துவீச வழங்கினர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலே 25 ரன்கள் விட்டு கொடுத்தோம். இதனால் வித்தியாசமான முறையில் பந்துவீசும் சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தள்ளப்பட்டனர்.
ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தை வைத்து எதையாவது செய்யுங்கள் என எப்போதும் நான் சொல்வேன். என்னுடைய இந்த கருத்தை மற்றவர்கள் ஏற்பார்களா என தெரியாது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் 7வது ஓவரிலிருந்து 14வது ஓவர் வரை கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.
கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு அவர் தான் இந்த சீசனில் கேப்டனாக செயல்படப் போகிறார் என தெரியும். முதல் 2 போட்டியில் ஜடேஜாவின் கேப்டன் பொறுப்பை நான்தான் கவனித்தேன். அதன்பிறகு ஜடேஜாவிடம் நீ தான் முடிவுகளை அணிக்காக எடுக்க வேண்டும் என்று கூறினேன்.
கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களில் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன்ஷிப்பின் அழுத்தம் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பாதிக்க செய்தது. அவரது மனதும் சோர்வடைந்தது. இதனால் தான் ஜடேஜா விலகினார் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி அணி வீரருக்கு அபராதம்






