என் மலர்
விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களை மிரல வைக்கும் ரசிகர்களின் பேனர் வாசகம்
ஐபிஎல் 2022: காதலியா? கிரிக்கெட்டா? மிரள வைக்கும் ரசிகர்களின் பேனர் வாசகங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்காக ரசிகர்கள் வைத்திருக்கும் பேனர் வாசகங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத சென்னை, மும்பை அணிகள் கடைசி 2 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீசனில் ரசிகர்களின் பேனர் வசனங்கள் கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.
21-லீக் போட்டியில் குஜராத்-ஐதராபாத் அணிகள் ஏப்ரல் 11-ந் தேதி மோதின. இதில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது ரசிகர் ஒருவரின் கையில் வைத்திருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் வைத்திருந்த பேனரில் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்வதாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி ரசிகையின் பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த ரசிகை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளார். போட்டியின் போது வைத்திருந்த பேனரில் விராட் கோலி தனது 71-வது சதத்தை எப்போது அடிக்கிறாறோ அப்போதுதான் நான் டேட்டிங் செய்வதாக இருந்தது. இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது.

22-லீக் போட்டியில் பெங்களூர்- சென்னை அணிகள் மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் ரசிகையின் பேனர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருந்தது. அவர் வைத்திருந்த பேனரில், பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என இருந்தது.

இதே போட்டியில் மற்றோரு ரசிகரின் பேனர் கேமரா மேனுக்காக வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் விளையாட்டு வீரர்களுக்கு வைத்திருக்கும் பேனர்களுக்கு மத்தியில் இந்த ரசிகர் கேமரா மேனுக்கு பேனர் வைத்திருந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதில் பெண்களை மட்டும் கேமராவில் பதிவு செய்கின்றனர். ஆண் ரசிகர்களையும் பதிவு செய்யலாமே என்று இருந்தது. இந்த புகைப்படமும் வைரலானது.

25-வது லீக் போட்டியில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதின.இதில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ரசிகர் ஒருவரின் பேனர் அவரது காதலி குறித்து இருந்தது. அந்த பேனரில் எனது காதலி நானா அல்லது ஐபிஎல் கிரிக்கெட்டா என கேட்டால். நான் அதற்கு ஐபிஎல் போட்டியை தேர்வு செய்தேன் என்று அந்த பேனரில் இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுவரை ரசிகர்களிடமிருந்து சில நகைச்சுவையான பதாகைகள் சமூக வலைதளங்கில் வைரலான நிலையில் இன்னும் பல பேனர்களை எதிர்பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்...ரிங்குசிங், பந்து வீச்சாளர்களுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
Next Story






