என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு (Sports)
X
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி- அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து
Byமாலை மலர்29 April 2022 5:57 PM IST (Updated: 29 April 2022 6:11 PM IST)
இன்று நடந்த காலிறுதி போட்டியில் பிவி சிந்து , சீனாவை சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யு யான் யாஸ்லினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் பிவி சிந்து , சீனாவை சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-9 கணக்கில் பி.வி ,சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்து இரண்டாவது செட்டை 13-21 என்று ஹி பிங் ஜியாவோ கைப்பற்றினார் . இதை தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான 3 வது செட்டில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-19 என கைப்பற்றினார் .
இதன்மூலம் 21-9 ,13-21,21-19 என்ற செட் கணக்கில் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story
×