என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
    • 22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

    தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.

    • இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது.
    • ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை.

    டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.

    முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர்.முஹம்மது ரிஸ்வானின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் .

    இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி கூறியதாவது:-

    நீங்கள் பந்து வீச்சில் அல்லது பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது. 11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்கள் ஆவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

    ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை. அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் அசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

    • பேட்டிங்கில் அரை சதம் விளாசிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் அசத்தினார்.
    • வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்களா தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 55 ரன்கள் அடித்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. 45 ரன்கள் வரை விக்கெட்டை இழக்காத அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். பேட்டிங்கில் அரை சதம் விளாசிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் அசத்தினார். 4 ஓவர்கள் பந்து வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • தீபக் சாஹர் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2-வது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் அடித்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    முத்தரப்பு டி20 போட்டிகளில் இன்று நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 12 பந்துகள் சந்தித்த ரிஷ்வான் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மசூத் 0 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் பாபர் அசாம் - ஷதாப் கான் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் 34 ரன்னில் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் அடித்தார். அடுத்ததாக களமிறங்கிய முகமது நவாஷ் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்னில் களத்தில் இருந்தார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

    முதல் விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா- மந்தனா ஜோடி 96 ரன்கள் எடுத்தனர். 47 ரன்னில் மந்தனா எதிர் பாராத வகையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த போது போல்ட் முறையில் வெளியேறினார்.

    16 ஓவரில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் 4 ரன்னிலும் கிரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தீப்தி சர்மா -ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கடைசி ஓவரில் தீப்தி சர்மா (10) ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்திருந்தார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    முத்தரப்பு டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலன் - கான்வே களமிறங்கினர். பின் ஆலன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். கான்வே 35 பந்துகளில் 36 ரன்களுடனும் வில்லியம்சன் 30 பந்துகளில் 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். பிலிப்ஸ் 18, நீசம் 5, பிரேஸ்வெல் 0, சோதி 2, மார்க் சேப்மேன் 32 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும் நவாஸ், முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

    • வங்காள தேசத்திற்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    பாகிஸ்தானுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக இன்று இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கவூர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக மந்தனா செயல்படுகிறார்.

    வங்காளதேசம் அணி:-

    முர்ஷிதா கதுன், ஃபர்கானா ஹோக், நிகர் சுல்தானா, ரிது மோனி, லதா மொண்டல், ஃபஹிமா கதுன், ருமானா அகமது, நஹிதா அக்டர், சல்மா காதுன், ஃபரிஹா ட்ரிஸ்னா, ஷஞ்சிதா அக்டர்.

    இந்திய அணி:-

    ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, சப்பினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், கிரண் நவ்கிரே, பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, சினே ராணா, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.

    • தனது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ள அவர் புயலுக்கு முன் அமைதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    • டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    லாகூர்:

    டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. பாகிஸ்தான அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக விலகி இருந்தார்.

    இதனால் அவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை. காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் தற்போது ஷாகின் அப்ரிடி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகிறது. எதிர்பார்த்தபடியே ஷாகின் அப்ரிடி உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    டி20 உலகக்கோப்பைக்கு 110 சதவீதம் உடல் தகுதியுடன் ஷாகின் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஷாகின் அப்ரிடி பங்கேற்பார் என தெரிகிறது. ஷாகின் அப்ரிடி தனது வேகப் பந்துவீச்சால் ரோகித் சர்மா கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தினார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    ஷாகின் அப்ரிடி காயமடைந்தது இந்தியாவுக்கு சாதகம் என கருதப்பட்டது. ஆனால் அவர் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். இதனால் சோகத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இதனிடையே இந்த செய்தியை ஷாகின் ஆப்ரிடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.


    அதில் தனது புகைப்படத்தை பதிவிட்டு உள்ள அவர் புயலுக்கு முன் அமைதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இது டி20 உலகக்கோப்பைக்கு தான் தயாராகி விட்டேன் என்பதை மறைமுகமாக கூறுகிறார் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்திய அணியில் பும்ரா காயம் அடைந்து விலகிய நிலையில் பாகிஸ்தான் வீரர் முழு உடல் தகுதியை பெற்றிருப்பது இந்திய ரசிகர்களுடைய விரக்தி அடையச் செய்துள்ளது.

    • பயிற்சியின் போது காயமடைந்த அவருக்கு கணுக்காலில் வீக்கம் இருக்கிறது.
    • அவரது காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆடவில்லை. இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    பயிற்சியின் போது காயமடைந்த அவருக்கு கணுக்காலில் வீக்கம் இருக்கிறது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவரது காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ள சாஹர் அதற்குள் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி, சேத்தன் சகாரியா ஆகியோர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான வலை பயிற்சி பவுலர்களாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

    • தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார்.
    • நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    பெங்களூர்:

    9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சுடன் மோதுகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார். இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
    • என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் புதுமுக வீராங்கனைகள் போதுமான ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    சில்கெட்:

    வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி வீராங்கனைகள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 124 அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். வழக்கமாக 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கும் இவர் இன்றைய போட்டியில் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஹர்மன்பிரீத் "எங்கள் பேட்டிங்கின் போது நடுவரிசையில் அணியின் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சித்தோம். அதுதான் எங்களை இன்று பாதித்தது. நிச்சமாக இது துரத்தக்கூடிய இலக்காக தான் இருந்தது.

    ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை. என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் புதுமுக வீராங்கனைகள் போதுமான ஆட்டங்களில் விளையாட வேண்டும். இன்றைய போட்டி மற்றவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.

    அதே நேரத்தில் நாங்கள் எந்த அணியையும் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடியது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்" என்றார்.

    ×