search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாகிஸ்தான் அணியுடன் தோல்வி- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம்
    X

    பாகிஸ்தான் அணியுடன் தோல்வி- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம்

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
    • என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் புதுமுக வீராங்கனைகள் போதுமான ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    சில்கெட்:

    வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி வீராங்கனைகள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 124 அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். வழக்கமாக 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கும் இவர் இன்றைய போட்டியில் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஹர்மன்பிரீத் "எங்கள் பேட்டிங்கின் போது நடுவரிசையில் அணியின் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சித்தோம். அதுதான் எங்களை இன்று பாதித்தது. நிச்சமாக இது துரத்தக்கூடிய இலக்காக தான் இருந்தது.

    ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை. என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் புதுமுக வீராங்கனைகள் போதுமான ஆட்டங்களில் விளையாட வேண்டும். இன்றைய போட்டி மற்றவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.

    அதே நேரத்தில் நாங்கள் எந்த அணியையும் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடியது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்" என்றார்.

    Next Story
    ×