என் மலர்
விளையாட்டு
- பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.
- முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது. பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.
இந்த வெற்றியின் மூலம் தன் தலைமையேற்ற முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார். இதற்கு முன்னர் இதே சாதனையை 2007 ஆம் ஆண்டு இந்திய அண்யின் முன்னாள் கேப்டன் டோனி படைத்திருந்தார். அதே போல ஐசிசி டி 20 கோப்பையை வென்ற விக்கெட் கீப்பர் கேப்டன்களாக பட்லர் மற்றும் டோனி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.
- உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன்.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார்.
மெல்போர்ன்:
இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது.
மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக இருந்தது.
ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.
பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.
இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரே லியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன.
இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:-
உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன்.
என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாம்கரன் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
- இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது.
20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் பெங்கு பெற்றது அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம் புதுடெல்லி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது. அதே சமயம் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.
இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருபது ஓவர் உலக கோபை போட்டியில் பங்கு பெற்ற அணிகள் பெற்ற பரிசு தொகை விவரம் வருமாறு:-
இங்கிலாந்து ரூ.13.84 கோடி பாகிஸ்தான் ரூ.7.40 கோடி இந்தியா ரூ.4.50 கோடி நியூசிலாந்து ரூ.4.19 கோடி ஆஸ்திரேலியா ரூ.1.53 கோடி தென்னாப்பிரிக்கா ரூ.1.20 கோடி வங்காள தேசம் ரூ.1.20 கோடி இலங்கை ரூ.1.85 கோடி ஆப்கானிஸ்தான் ரூ.56.35 லட்சம் நெதர்லாந்து ரூ.1.85 கோடி ஜிம்பாப்வே ரூ.88.50 லட்சம் அயர்லாந்து ரூ.1.53 கோடி வெஸ்ட் இண்டீஸ் ரூ.64.40 லட்சம் ஸ்காட்லாந்து ரூ.64.40 லட்சம் நமீபியா ரூ.64.40 லட்சம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.64.40 லட்சம்
- இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார்.
- இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
மெல்போர்ன்:
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அடிப்படையில் மதிப்பு மிக்க வீரர்கள் கொண்ட அணியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வெளியிட்டுள்ளது. வல்லுனர்கள் குழு ஐ.சி.சி. 20 ஓவர் கோப்பை கனவு அணியை தேர்வு செய்தது.
இந்த அணியில் இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் 296 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். சூர்யகுமார் யாதவ் 234 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் ஆவார்.
ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் (பேட்டிங் வரிசையில் இருந்து) வருமாறு:-
அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் (கேப்டன், இங்கிலாந்து), விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் (இந்தியா), பிலிப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கரன் (இங்கிலாந்து) ஆன்ரிச் நோர்க்கியா (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட் (இங்கிலாந்து), ஷகீன்ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) 12-வது வீரர்:- ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)
போட்டியை நடத்திய ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவர் கூட ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷகீன்ஷா அப்ரிடி முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார்.
- பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது.
மெல்போர்ன்:
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஷகீன்ஷா அப்ரிடி.
நேற்றைய இறுதி போட்டியில் அவர் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹால்சை அவுட் செய்தார்.
13-வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி புரூக்சின் கேட்சை பிடிக்கும் போது ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் களத்தை விட்டு வெளியே சென்றார்.
அவர் 2.1 ஓவர் தான் வீசி இருந்தார். எஞ்சிய 11 பந்துகளை ஷகீன் ஷா அப்ரிடியால் வீச முடியாமல் போனது. அவர் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார். ஷகீன் ஷா அப்ரிடி தொடர்ந்து பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.
பாபர் ஆசமுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை.
பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது. அவர்கள் 150 முதல் 155 ரன்கள் வரை எடுத்து இருந்தால் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
ஷகீன்ஷா வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை ஷகீன்ஷா வீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதலாக ஒரு விக்கெட் கிடைத்து இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.
ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.
மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.
- இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
- முதலில் பேட்டிங் செய்த அந்த அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது.
மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது. பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் (52 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''இது கர்மா (It's call (sic) karma) என்று அழைக்கப்படும்'' எனப் பதில் அளித்திருந்தார்.
இதுகுறித்து சற்றும் எதிர்பார்க்காத சோயிப் அக்தர் ''இதை நீங்கள் உணர்வுப்பூர்வமான ட்வீட் என அழைக்கிறீர்கள்'' என அக்தர் பதில் அளித்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகரான ஹர்சா போக்லே ''பாகிஸ்தான் அணிக்கு பாராட்டு. அவர்கள் செயல்பட்ட விதத்தில் சில அணிகள் 137 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தும். சிறந்த பந்து வீச்சு அணி'' என ட்வீட் செய்திருந்தார்.
- அங்கிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் மிகவும் உதவியாக இருந்தது.
- ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட இந்தியா வருவேன்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம்கரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்தியதற்காக தொடர் நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சாம்கரன் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். விருதை பெற்ற பின்னர் பேட்டி அளித்த அவர் கூறியுள்ளதாவது: ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம், அங்கிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் மிகவும் உதவியாக இருந்தது. நான் அங்கு (இந்தியாவில்) இருந்த நாட்களை நேசித்தேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இத்தகைய பெரிய தொடர்கள்(உலகக்கோப்பை), பல போட்டிகளில் விளையாடிய வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது அற்புதமான தருணம். நான் எப்பொழுதும் கற்றுக்கொள்கிறேன், என்னை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆசிய விளையாட்டு போட்டிக்கான தேர்வு சுற்று போட்டியாக இது நடத்தப்படுகிறது.
- நாடு முழுவதும் உள்ள 115 க்கும் மேற்பட்ட பாய்மர படகு மாலுமிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பாய்மரப் படகுச் சங்கம் சார்பில் நடப்பாண்டிற்கான தேசிய சீனியர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டிகள் மும்பை துறைமுகத்தில் இன்று தொடங்கின. வரும் 20ந் தேதி வரை நடைபெறும் இந்த படகு போட்டிளில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள 15 பாய்மர படகோட்டி கிளப்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பதிவு செய்துள்ளனர்.

ஒரு சுற்றுக்கு 12 பந்தயங்கள் என மொத்தம் எட்டு சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு வகை என மூன்று வகைகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் சீனாவில் நடைபெற உள்ள அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர். ஓமன், கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்பட சர்வதேச பந்தய அதிகாரிகள் குழு, இந்த போட்டிகளை ஆய்வு செய்கிறது.
- இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது என பாபர் ஆசம் பேட்டி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:
இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது.
எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி வீரர்களிடம் தெரிவித்தேன். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். ஆனால் ஆட்டத்தின்போது துரதிர்ஷ்டவசமாக, ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.
- அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பில் சால்ட் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் கேப்டன் ஜாஸ் பட்லர் 26 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச, அணியின் ரன்ரேட் உயர்ந்தது. ஹென்றி ப்ரூக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மொயீன் அலி 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த ஸ்டோக்ஸ் அரை சதம் கடக்க, இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வசமாக்கி உள்ளது. இங்கிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்திய சாம் கரன் "தொடர் நாயகன்" விருதையும் தட்டி சென்றார்.
- உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது
- 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.
துபாய்:
2024-2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.
போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கின்றன. 2025ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027ம் ஆண்டு வங்காளதேசம் மற்றும் நேபாளத்திலும் போட்டிகள் நடக்கின்றன.






