search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shaheen sha afridi"

    • ஷகீன்ஷா அப்ரிடி முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார்.
    • பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஷகீன்ஷா அப்ரிடி.

    நேற்றைய இறுதி போட்டியில் அவர் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹால்சை அவுட் செய்தார்.

    13-வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி புரூக்சின் கேட்சை பிடிக்கும் போது ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் களத்தை விட்டு வெளியே சென்றார்.

    அவர் 2.1 ஓவர் தான் வீசி இருந்தார். எஞ்சிய 11 பந்துகளை ஷகீன் ஷா அப்ரிடியால் வீச முடியாமல் போனது. அவர் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார். ஷகீன் ஷா அப்ரிடி தொடர்ந்து பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

    பாபர் ஆசமுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை.

    பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது. அவர்கள் 150 முதல் 155 ரன்கள் வரை எடுத்து இருந்தால் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

    ஷகீன்ஷா வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை ஷகீன்ஷா வீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதலாக ஒரு விக்கெட் கிடைத்து இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×