என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சச்சின்- டிராவிட் இணைந்து பேட்டிங் செய்யும்போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளார்.
    • நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணியின் பயிற்சியாளராக டொனால்டு உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

    இருவரும் அவர்கள் விளையாடிய காலத்தில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக டொனால்டு திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் நடுவாங்குவார்கள்.

    அதேபோல், எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும் எளிதாக தடுத்து விளையாடுவார் ராகுல் டிராவிட்.

    1997-ம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அப்போது இலக்கை நோக்கி இந்திய சென்றபோது ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த ஜோடியை பந்து வீச்சால் விரைவில் பிரிக்க முடியாத தென்ஆப்பிரிக்கா வீரர்கள், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறியதாக தெரிகிறது.

    இது டொனால்டு மனதில் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. தற்போது இருவரும் சந்தித்து பயிற்சியாளராக இருக்கும் நிலையில், அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் டொனால்டு, அத்துடன் ராகுல் டிராவிட்டை டின்னருக்கு அழைத்துள்ளார்.

    இதுகுறித்து டொனால்டு தெரிவிக்கும்போது ''டர்பனில் மோசமான நிகழ்வு ஒன்று நடந்தது. நான் அதைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் அனைத்து வகையிலும் எங்களை சிதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் அதிகமாக எல்லை மீறி விட்டேன். ராகுல் டிராவிட் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை. அதைத்தவிர ஒன்றுமில்லை.

    நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அவருடைய விக்கெட்டை வீழ்த்த நான் சற்று சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொண்டேன். அதற்காக இன்னும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அவர் சிறந்த மனிதன். சிறந்த வீரர். ஆகவே, நீங்கள் அதை புரிந்து கொண்டால், உங்களுடைய இரவில் உணவு சாப்பிட விரும்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

    இதற்கு ராகுல் டிராவிட், ''நிச்சயமாக, நான் அதை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, நீங்கள் பணம் செலுத்துவதாக இருந்தால்...'' எனப் பதில் அளித்துள்ளார்.

    • அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். எபாதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293 ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2 ஓவரில் 300 ரன்னை தொட்டது.

    மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்து இருந்தது.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வின் அரைசதம் அடித்தார். 91 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 87-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 13-வது அரைசதமாகும்.

    இருவரும் சிறப்பாக ஆடியதால் இந்தியா தொடர்ந்து ரன்களை குவித்தது. 131 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்து இருந்தது. அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சிராஜ் 4 ரன்னில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.
    • பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

    பாரீஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.

    பிரான்சில் போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. இந்த வன்முறைகளை தடுத்த போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
    • வங்காள தேசம் அணி தரப்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். பொதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293-வது ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 348 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 40 ரன்னிலும் குல்தீப் யாதவ் 21 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    • கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • கோவா அணிக்கு இடம் பெயர்ந்த அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    கோவா:

    ரஞ்சி கிரிக்கெட்டில் கோவா- ராஜஸ்தான் அணிகள் (சி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் கோவாவில் உள்ள போவாரிம் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த கோவா அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கோவா 8 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்தது. சுயாஷ் பிரபுதேசாய் இரட்டை சதமும் (212 ரன், 416 பந்து, 29 பவுண்டரி), அர்ஜூன் தெண்டுல்கர் சதமும் (120 ரன், 207 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

    இதில் 7-வது வரிசையில் ஆடிய அர்ஜூன் தெண்டுல்கரின் பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த சாதனையாளரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கோவா அணிக்கு இடம் பெயர்ந்த 23 வயதான அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    இவரது தந்தை சச்சின் தெண்டுல்கரும் தனது அறிமுக முதல்தர போட்டியிலேயே சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது. அதாவது 1988-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் மும்பை அணிக்காக 15-வது வயதில் களம் கண்ட தெண்டுல்கர் 100 ரன்கள் எடுத்தார். இப்போது அவரை போன்று அவருடைய மகனும் சாதித்துள்ளார்.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

    உ.பி.யோத்தாசுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி அரைஇறுதியிலும் கலக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் சந்தித்த இரு ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.
    • இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய கேப்டனாக சவுதி பொறுப்பேற்கிறார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சவுதி, 22 முறை டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அவர் நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாவார்.

    கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேன் வில்லியம்சன் கூறும்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும். டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வில்லியம்சன் 2016 இல் பிரெண்டன் மெக்கல்லத்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இறுதி ஆட்டம்.
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர்.

    எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை  கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது. எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.
    • வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார்.

    இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடினார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் பொறுமையாக விளையாடினார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது.

    வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.
    • 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    சட்டோகிராம்:

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி. சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பண்ட், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். டி20, ஒருநாள் போட்டியில் வேண்டுமானாலும் அவர் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் டாப் வீரர் என்பதை நிரூபித்தார்.

    இதனால் சரிவிலிருந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் மீண்டது இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது. 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 இன்னிங்சில் 50 சிக்சர்களை விளாசிய 2-வது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.

    • இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
    • ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.

    தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.

    இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

    • உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
    • 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

    35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×