search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்ப்பு
    X

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்ப்பு

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.
    • வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார்.

    இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடினார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் பொறுமையாக விளையாடினார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது.

    வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×