என் மலர்
விளையாட்டு
- உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
- மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.
இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது.
- இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ.
தோகா
22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை) அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருக்கிறது.
பிரேசில் வெளியேறிய நிலையில் இப்போது அனைவரது கவனமும் பிரான்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 1962-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை தக்க வைக்கும் முதல் அணி என்ற மகத்தான சாதனையை நோக்கி பயணிக்கும் பிரான்ஸ் அணிக்கு கிலியன் எம்பாப்பே (5 கோல்), ஒலிவியர் ஜிரூட் (4 கோல்), கோல் வாய்ப்புகளை உருவாக்கும் கிரீஸ்மான் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். களத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் இவர்கள் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் பந்தை வலைக்குள் தள்ளிவிடுவதில் கில்லாடிகள். கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிசும் அணியின் கட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்கிறார்.
பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டோ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இது கடினமும், பரபரப்பும் நிறைந்த ஆட்டமாக இருக்கும். ஒரு அணியாக அற்புதமான பயணத்தை மேற்கொண்டு வரும் அவர்கள் சில பெரிய அணிகளை வெளியேற்றி இருக்கிறார்கள். அதனால் மொராக்கோவை நாங்கள் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்வோம். பந்து வசம் இருக்கிறதோ இல்லையோ நாங்கள் மிக தீவிரமாகவும், வேகமாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் அவர்களின் வலுவான தற்காப்பு வளையத்தை தகர்த்து முன்னேற முடியும்' என்றார்.
இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ. அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பும் உண்டு.
லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பெற்ற மொராக்கோ 2-வது சுற்றில் கோல் ஏதும் போடாத நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சாய்த்தது. மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோ ஸ்பெயினின் ஷாட்டுகளை எல்லாம் முறியடித்து ஹீரோவாக பிரகாசித்தார். தொடர்ந்து கால்இறுதியில் ஒரே கோலில் போர்ச்சுகலின் கனவை சிதைத்தது.
நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்துள்ள மொராக்கோ ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதுவும் சுயகோல் தான். இதன் மூலம் அவர்களின் தற்காப்பு ஆட்டம் எந்த அளவுக்கு பலமிக்கதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த அணியில் யூசப் இன் நெசைரி (2 கோல்), அச்ராப் ஹகிமி, ஹகிம் ஜியேச் ஆகியோர் சிறப்பாக ஆடுகிறார்கள். ஏராளமான மொராக்கோ ரசிகர்கள் குவிந்திருப்பதால் அவர்களின் ஆர்ப்பரிப்பு அந்த அணிக்கு உந்துசக்தியாக இருக்கும்.க்
இவ்விரு அணிகளும் இதுவரை 5 நட்புறவு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. உலகக் கோப்பையில் இவர்கள் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ, தாக்குதல் பாணியை கையாளும் பிரான்சுக்கும் அதிர்ச்சி அளிக்குமா அல்லது மொராக்கோவின் தடுப்பு அரணை உடைத்து பிரான்ஸ் 4-வது முறையாக இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
- மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் சொதப்பினாலும் கடைசி ஆட்டத்தில் இஷான் கிஷனின் இரட்டை சதமும், விராட் கோலியின் சதமும் இந்தியாவுக்கு 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது. அதே உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரை நமது வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.
கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில்லுடன், ராகுல் ஆடுவார் என்று தெரிகிறது. வங்காளதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் பெயரும் பரிசீலனையில் உள்ளது. மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.
அதன்படி, இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், முன்னதாக போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, வங்காளதேசத்திற்கு எதிராக முதலில் களமிறங்குகிறது.
- முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி.
- முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார்.
34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா 6வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
- இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி தோல்வி.
- இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.
மும்பை:
புரோ கபடி 9-வது லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடுகின்றன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று மும்பையில் நடைபெற்றன.

இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி, 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
இரண்டாவதாக நடைபெற்ற பிளே ஆப் சுற்று போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதால் வேதனையில் உள்ளார்
- மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வேறு கிளப்பிற்கு செல்ல இருக்கிறார்
கால்பந்து என்றாலே நமக்கு சற்றென்று நினைவுக்கு வரும் ஒரு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால் அது மிகையாகாது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் கால்பந்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
என்றாலும், போர்ச்சுக்கல் அணிக்காக உலகக் கோப்பையை இதுவரை வென்று கொடுத்தது கிடையாது. 37 வயதாகும் இவருக்கு கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக் கோப்பைதான் கடைசி உலகக் கோப்பை. இதில் எப்படியாக சாதித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தார்.
ஆனால், காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து போர்ச்சுக்கல் பரிதாபமாக வெளியேறியது. மைதானத்தில் இருந்து வீரர்கள் அறைக்கு செல்லும்போது அழுது கொண்டே சென்றார். மேலும் காலிறுதிக்கு முந்தைய மற்றும் காலிறுதி ஆட்டங்களில் மாற்று வீரராகவு களம் இறக்கப்பட்டார். இதுவும் அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
தற்போது தான் இருக்கும் நிலையை யதார்த்தத்தின் 3 அம்சங்கள் என மூன்று வார்த்தைகளில் விவரித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், ''Pain (வலி), Uncertainty (உறுதியற்ற நிலை) And Constant work (தொடர்ந்து வேலை)'' எனப் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு எளிதில் பொருள் புலப்படாத இந்த மூன்று வார்த்தைகளில் தனது தற்போதைய நிலையை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறியதை வலி என பதிவிட்டுள்ளதாகவும், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகிய நிலையில் மாற்று கிளப்பை இன்னும் தேர்வு செய்யாத நிலையை நிலையற்ற தன்னை என பதிவிட்டுள்ளதாகவும், என்னவாக இருந்தாலும் தொடர்ந்து தனது பணியை செய்ய வேண்டும். அதன் மூலம் தன்னை மேம்படுத்தி சிறந்த கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்பதை தொடர்ந்து வேலை என பதிவிட்டுள்ளதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
- கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் ஓப்பனிங் செய்வார்கள் என்பதால் அபிமன்யூவுக்கு வாய்ப்பு கிடைக்காது.
- தொடர்ச்சியாக தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார்.
சென்னை:
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவே அணியில் இடம்பெறாதது தான் பின்னடைவாக உள்ளது.
ரோகித் சர்மாவுக்கு மாற்று வீரராக வந்துள்ள அபிமன்யூ ஈஸ்வரன் தான் தற்போது ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுவரை எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் இவர் விளையாடாததால் இவரை பெயர் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்காது. இதே போல ஐபிஎல் ஏலத்திற்காக தனது பெயரை கூட அவர் பதிவு செய்யவில்லை. முழுக்க முழுக்க உள்ளூர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர்.
கடந்த 4 - 5 ஆண்டுகளாக ரஞ்சிக்கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களில் மட்டுமே சிறப்பாக ஆடி வந்த அவரை, இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு காரணமும் வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த ரன்கள் தான். வங்கதேச ஏ அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்திய அபிமன்யு 2 போட்டிகளில் 299 ரன்களை குவித்தார். இதனால் தான் மெயின் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அபிமன்யூ ஈஸ்வரனுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் ஓப்பனிங் செய்வார்கள் என்பதால் அபிமன்யூவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நான் சத்தியம் செய்து கூறுவேன், தொடர்ச்சியாக தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார்.
கடந்த 4 - 5 ஆண்டுகளாக மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவருடன் நான் பேசியிருக்கிறேன், நிறைய போட்டிகளில் விளையாடியும் இருக்கிறேன். அவரின் ஆட்டத்தை பார்த்ததால் சொல்கிறேன், நிச்சயம் இந்திய அணியில் பெரிய வீரராக திகழ்வார் என்பது போல தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோரின் இடங்கள் இன்னும் சில நாட்களில் காலியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஜாராவின் இடம் கூட கேள்விக்குறியாக தான் உள்ளது. அப்படி ஒருவேளை நடந்தால் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக அபிமன்யூ ஈஸ்வரன் நிச்சயம் அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்க் வுட் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
- தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் வந்து வீசுகிறார்.
உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது வரை பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தான் வைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 100 மைல் வேகத்தில் பந்துவீசிய ஒரே வீரர் இவர்தான். ஆனால் இன்றைய நாள் வரை அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மனுக்கு எதிராக அவர் வீசிய பந்து மணிக்கு 161.4 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக வீசப்பட்ட பந்து என்று பதிவாகியுள்ளது. ஆனாலும் அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இப்படி தனது அதிவேக பந்துவீச்சு சாதனையை முறியடிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கணிப்பினை தற்போது சோயிப் அக்தர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த அவர் கூறுகையில்:-
தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் மார்க் உட்டால் என்னைவிட அதிவேகமாக பந்துவீச முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நேர்த்தியாக பந்துவீசும் அவர் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் வந்து வீசுகிறார். இன்னும் அவர் தீவிர முயற்சி எடுத்தால் நிச்சயம் என்னுடைய இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியை சேர்ந்த 32 வயதான முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டியின்போது உம்ரான் மாலிக் பந்தில் காயம் அடைந்தார்
- எக்ஸ்-ரே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை இடம் பிடிப்பது குறித்து முடிவு தெரியும்.
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. நாளை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
இந்திய அணியில் ரோகித் சர்மா காயத்தால் விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை போட்டி தொடங்கும் நிலையில் வங்காளதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய பந்து, சாகிப் அல் ஹசன் விலா எழும்பில் தாக்கியது. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அப்போது ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.
இன்று பயிற்சி மேற்கொண்டபோது, வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் பயிற்சியில் இருந்து விலகி எக்ஸ்-ரே எடுப்பதற்கான மருத்துவமனை சென்றுள்ளார். இன்று மாலைதான் முடிவு தெரியும். அதன்பின் சாகிப் அல் ஹசன் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வங்காளதேச அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- டி 20-யில் பாபர்- ரிஸ்வான் ஜோடி அபாரமாக விளையாடு வருகிறது
- இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் பெரிதாக ஜொலிக்கவில்லை
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
பாதுகாப்பு காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த இங்கிலாந்து, தற்போது சுற்றுப் பயணம் செய்து தொடரையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் தோல்வியை அந்நாட்டு ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பாகிஸ்தான் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததுதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டால், பாகிஸ்தான் அதன்பின் குறைந்த ஸ்கோரில் சுருண்டு விடுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அது டி20யாக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி.
முல்தான் டெஸ்ட் நேற்றோடு முடிவடைந்தது. தோல்விக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஒரு பத்திரிகையாளர் ''இந்த கேள்வி ரசிகர்கள் சார்பில் கேட்கப்படுகிறது. பாபர் அசாம், ரிஸ்வான் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அணியின் ஸ்கோர் உங்கள் இருவரையும் சார்ந்து இருப்பதுதான் அதற்கு காரணம்'' எனக் கேள்வியை எழுப்பினார்.
கேள்வியை பத்திரிகையாளர் முடிப்பதற்குள், பாபர் ஆசம் கோபம் அடைந்து ''ஆகவே, நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?. நாங்கள் டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா?'' என ஆவேசம் அடைந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர் ''இல்லை. இந்த விசயத்தில் உங்களுடைய எண்ணம் என்ன? என்பதை தான் கேட்டேன். உங்கள் வீரர்கள் டி20-யில் விளையாட வேண்டுமா?'' என்றார்.
இதுதொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாபர் அசாம் ''நான் இதுபோன்று எதையும் நினைக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.
- சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர்.
- அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.
முல்தான்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 3-வது நடுவர் கொடுத்த ஒரு தவறான தீர்ப்பால், ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவுமே தலைகீழாக மாறியது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற சூழலில், 2வது போட்டியில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது போட்டியிலும் போராடி தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என தோற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 275 ரன்களை அடித்தது. இதனால் 355 என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 328 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. 2வது இன்னிங்ஸின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாவுத் சகீல் சிறப்பாக ஆடி வந்தார். அவர் 213 பந்துகளில் 94 ரன்களை அடித்திருந்த போது துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார். மார்க் வுட் வீசிய ஷார்ட் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று தவறியதால் கீப்பரிடம் கேட்ச்சானது. ஆனால் அது கேட்ச் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.
விக்கெட் கீப்பர் ஒல்லி போப் தரைக்கு மிகவும் அருகில் இருப்பது போன்று அந்த கேட்ச்-ஐ பிடித்தார். இதனால் 3-வது நடுவருக்கு பரிந்துரைத்த 2 கள நடுவர்கள், சாஃப்ட் சிக்னலாக அவுட் என முடிவு தெரிவித்தனர். விக்கெட்டை ஆராய்ந்து பார்த்த 3-வது நடுவர், தரையில் பட்டது போல தான் உள்ளது. ஆனால் எந்தவித நிரூபனமும் ஆகாததால், கள நடுவர்களின் முடிவுக்கே செல்வதாக கூறி அவுட் கொடுத்தார்.
இந்த ஒரு முடிவால் பாகிஸ்தானுக்கு பெரும் அடி விழுந்தது. சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர். செட்டில் பேட்ஸ்மேன் என யாருமே இல்லாததால் 328 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.
சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணியிடமும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
- லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன்.
- 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
தோகா:
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது.
தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்' என்றார்.
லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல' என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.






