search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan umpire"

    • சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

    முல்தான்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 3-வது நடுவர் கொடுத்த ஒரு தவறான தீர்ப்பால், ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவுமே தலைகீழாக மாறியது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற சூழலில், 2வது போட்டியில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது போட்டியிலும் போராடி தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என தோற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 275 ரன்களை அடித்தது. இதனால் 355 என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 328 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. 2வது இன்னிங்ஸின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாவுத் சகீல் சிறப்பாக ஆடி வந்தார். அவர் 213 பந்துகளில் 94 ரன்களை அடித்திருந்த போது துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார். மார்க் வுட் வீசிய ஷார்ட் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று தவறியதால் கீப்பரிடம் கேட்ச்சானது. ஆனால் அது கேட்ச் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

    விக்கெட் கீப்பர் ஒல்லி போப் தரைக்கு மிகவும் அருகில் இருப்பது போன்று அந்த கேட்ச்-ஐ பிடித்தார். இதனால் 3-வது நடுவருக்கு பரிந்துரைத்த 2 கள நடுவர்கள், சாஃப்ட் சிக்னலாக அவுட் என முடிவு தெரிவித்தனர். விக்கெட்டை ஆராய்ந்து பார்த்த 3-வது நடுவர், தரையில் பட்டது போல தான் உள்ளது. ஆனால் எந்தவித நிரூபனமும் ஆகாததால், கள நடுவர்களின் முடிவுக்கே செல்வதாக கூறி அவுட் கொடுத்தார்.

    இந்த ஒரு முடிவால் பாகிஸ்தானுக்கு பெரும் அடி விழுந்தது. சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர். செட்டில் பேட்ஸ்மேன் என யாருமே இல்லாததால் 328 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

    சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணியிடமும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ×