என் மலர்
விளையாட்டு
- 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
- போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.
சென்னை:
ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி நடக்கிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.
இந்த போட்டியை தமிழகத்தின் எல்லா பகுதியிலும் உள்ள ரசிகர்களும் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போட்டியின் நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன. விமான நிலையத்தில் இரு அணியினருக்கும் எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேருகிறது. சீனா, பாகிஸ்தான் அணிகள் இரவில் வந்தடைகின்றன.
இதற்கிடையே, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3.30 முதல் 4.30 மணி வரை தென்கொரியா அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜப்பான், மலேசியா அணிகள் தலா ஒரு மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.
முன்னதாக தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் சியோக் யோ ஷின் கூறுகையில், 'இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராக இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பயன்படுத்தி கொள்வோம். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதே எங்களது நோக்கமாகும்' என்றார்.
- இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவி ரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகடமியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.
பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.
பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:-
செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்.
- ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன்.
- இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
லண்டன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நல்லதொரு 'கம்பேக்' தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நினைக்கவில்லை.
ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். ஆனால், இங்கிலாந்து கேப்டனின் வேண்டுகோளையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார். 36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்துள்ளார். 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.
- ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், பிரனாய், பிரியான்ஷூ ரஜாவாத் ஆகிய இந்தியர்களும் களம் இறங்குகிறார்கள்.
- முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.
சிட்னி:
மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத் தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.
கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சிந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், பிரனாய், பிரியான்ஷூ ரஜாவாத் ஆகிய இந்தியர்களும் களம் இறங்குகிறார்கள்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்த சீசனில் 4 பட்டங்கள் வென்று அசத்திய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு (ஆக.21-27) தயாராகும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறது.
- 25 மாநில மல்யுத்த சங்கங்களில் 22 சங்கங்கள் தங்கள் பக்கம் இருப்பதாக ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தெரிவித்தார்.
- பிரிஜ் பூஷன், தனது குடும்பத்தில் இருந்து யாரும் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தே்ாதலில் போட்டியிடமாட்டார்கள் என்று நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடெல்லி:
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 12-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. நாளை வேட்பு மனு பரிசீலனையும், 7-ந்தேதி இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
12 ஆண்டுகள் மல்யுத்த சம்மேளன தலைவராக நீடித்த பா.ஜ.க. எம்பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. அது மட்டுமின்றி சில மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சர்ச்சை எதிரொலியாக மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார். ஆனாலும் தனது விசுவாசிகள் மூலம் முக்கிய பதவிகளை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறார். 25 மாநில மல்யுத்த சங்கங்களில் 22 சங்கங்கள் தங்கள் பக்கம் இருப்பதாக ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். தலைவர், துணைத் தலைவர்கள், பொருளாளர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அவரது ஆதரவாளர் சஞ்சய் குமார் சிங் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் பிரிஜ் பூஷன், தனது குடும்பத்தில் இருந்து யாரும் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தே்ாதலில் போட்டியிடமாட்டார்கள் என்று நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரது மகன் கரண் பிரதாப், மருமகன் விஷால் சிங் மாநில மல்யுத்த சங்கங்களில் பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் தேர்தல் களத்தில் இல்லை.
- ஆஷஸ் தொடரில் முதல் 2 போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றது.
- 3-வது மற்றும் 5-வது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
மும்பை:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.
முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என பின்னிலை வகித்தது. அதிலிருந்து மீண்டு 2-2 என சமநிலையில் இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுக்கு ஒரு மரியாதை.
இங்கிலாந்து அணியின் மீண்டு எழும் திறன் அவர்களின் மன உறுதியைக் காட்டுகிறது.
இயற்கை அன்னை எங்களுக்கு ஒரு தொடர் முடிவை மறுத்திருக்கலாம். ஆனால் அது இந்த நம்பமுடியாத விளையாட்டின் உணர்வைக் குறைக்கவில்லை.
இந்தத் தொடர் நீண்ட நாட்களாக நினைவில் நிற்கும் தொடராக அமைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
- 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- ஆனால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களில் ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 41 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜோ ரூட் 91 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள்முடிவில் ஆஸ்திரேலியா 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 58 ரன்னும், உஸ்மான் கவாஜா 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா இறங்கியது.
அணியின் எண்ணிக்கை 140 ஆக இருந்தபோது வார்னர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 72 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:
இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.
இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு:
ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.
- இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
- லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சென்னை:
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும்.
இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் சென்னைக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டு அணியை சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் ஒரு கோலும் அடிக்கவில்லை.
- பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கனடா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேலி ரசோ 9-வது நிமிடத்திலும் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.
முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியிலும் ஆஸ்திரேலிய அணி 2 கோல்களை பதிவு செய்தது. மேரி ஃபோலர் மற்றும் ஸ்டீபனி கேட்லி ஒரு கோல்கள் அடித்தனர்.
இதனால் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை ஒரு கோல்களும் அடிக்கவில்லை. பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.
- ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
- ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.
இன்று சி பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜப்பான் வீராங்கனையான ஹினாட்டா இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். முதல் கோலை 12-வது நிமிடத்திலும், 2-வது கோலை 40-வது நிமிடத்திலும் அடித்தார். மேலும் 29-வது நிமிடத்தில் ரிகோவும் 82-வது நிமிடத்தில் மினா டனாகாவும் கோல் அடித்தனர்.
இறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோல்வியை தழுவியது.
இதனை தொடர்ந்து சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜாம்பியா நாடுகள் மோதின. இதில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையில் ஜாம்பியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.
- 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.
- சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவர்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.
டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.
ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் நாளையும் விளைாயடி தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் அணி இருக்கிறது.
இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
இரு அணிகளும் நாளை மோதுவது 142-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 141 ஆட்டத்தில் இந்தியா 71-ல், வெஸ்ட் இண்டீஸ் 64-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை'யில் முடிந்தது. 4 ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.






