என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய இந்தியா 351 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்களில் ஆல் அவுட்டானது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் ஆல் அவுட்டானது.
இதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:
இது ஒரு சிறப்பான வெற்றி. உண்மையைச் சொல்வதானால், ஒரு கேப்டனாக இதுபோன்ற விளையாட்டுகளை நான் எதிர்நோக்குகிறேன்.
இது சர்வதேச விளையாட்டை விட அதிகமாக இருந்தது. ஆபத்தில் இருப்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தோற்றால் நிறைய ஏமாற்றம் இருக்கும். வீரர்கள் சிறந்த குணத்தை வெளிப்படுத்தினர். அவர்களும் அதை ரசித்தார்கள், அழுத்தமான சூழ்நிலைகளில் அதை அனுபவிப்பதும் முக்கியம்.
விராட் மற்றும் ரோகித் அணியின் ஒருங்கிணைந்த பகுதிகள். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.
ஆட்டத்திற்கு முன் விராட்டுடன் நன்றாக அரட்டையடித்தேன். 50 ஓவர் வடிவத்துடன் பழக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு உண்மையிலேயே நன்றி.
350 ரன்கள் எடுப்பது எப்போதும் முக்கியமானது. பேட்டர்கள் பந்தை துரத்துகிறார்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் பேட்டர்கள் அதை உறுதி செய்வார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் மிகவும் தாமதமாக எழுந்தது, அந்த பார்ட்னர்ஷிப் அதை 36-வது ஓவருக்கு கொண்டு சென்றது. பவர் பிளேயிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை வெஸ்ட் இண்டீசுக்கு வரும்போது விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இந்தியா 351 ரன்களை குவித்தது.
- இந்திய அணியில் 4 வீரர்கள் அரை சதமடித்து அசத்தினர்.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 85 ரன்னிலும், இஷான் கிஷன் 73 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 51 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி வரை நின்ற ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது.
அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களைக் கடந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர்.
இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
- போட்டிக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
சென்னை:
ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகளும் சென்னை வந்தடைந்தன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விமானம் மூலம் பாகிஸ்தான் அணி சென்னை வந்தடைந்தது. அவர்களுக்கு எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.
அணியின் எண்ணிக்கை 143 ஆக இருந்தபோது இஷான் கிஷன் 73 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார். 41 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின் அசத்தலாக ஆடியது.
5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது. பாண்ட்யா சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
- இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடங்கியது.
- டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று எதிர்பார்ப்பு.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளன.
தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள இஷான் கிஷான் மற்றும் ஷூப்மன் கில் விரையாடி வருகின்றனர்.
- கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது.
- நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பி மற்றும் சி பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நைஜிரியா மற்றும் சி பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வியட்நாம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோல் போட ஆரம்பித்த நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து கோல்களை பதிவு செய்தனர்.
இறுதியில் நெதர்லாந்து அணி 7 கோல்களை பதிவு செய்தது. கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் 0-0 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது.
இதன் மூலம் இ பிரிவில் வியட்நாம் மற்றும் போர்ச்சுகல் அணி வெளியேறியது. நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
- 3 நாட்கள் கடும் உழைப்புக்கு பிறகு கிடைத்த பலனாக இந்த நிழல் ஓவியம் உருவாக்கப்பட்டு இருப்பதாக அதில் ஷிந்து மவுரியா குறிப்பிட்டுள்ளார்.
- இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவரின் முயற்சியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மவுரியா தீக்குச்சிகள் மற்றும் மெல்லிய மரக்கீற்றுகளை பயன்படுத்தி ஒரு வடிவத்தை உருவாக்குகிறார். அந்த வடிவத்தின் மீது ஒளியை விழ வைக்கும் போது விராட் கோலி சிரிப்பது போன்ற நிழல் உருவப்படம் தோன்றுகிறது.
3 நாட்கள் கடும் உழைப்புக்கு பிறகு கிடைத்த பலனாக இந்த நிழல் ஓவியம் உருவாக்கப்பட்டு இருப்பதாக அதில் ஷிந்து மவுரியா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவரின் முயற்சியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை.
- 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை.
ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இதனால் 384 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர்.

அதனால் 334 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பந்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது.
பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பந்தை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
- வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
- இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.
அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார்.
- காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர்.
- அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு விரைவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமராவதிக்கு வந்தார்.
அப்போது அமராவதியை தலைநகராக இருக்க வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும், அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் அம்பத்தி ராயுடுவின் காரை வழிமறித்தனர்.
அவரை இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர், அவர் காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர். அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார். மேலும் அமராவதிக்கு தான் தனது ஆதரவு என்று கூறி ஜெய் அமராவதி என முழக்கமிட வற்புறுத்தினர்.
அதற்கும் அவர் மறுத்து கண்டிப்பாக அமராவதி தான் ஆந்திராவின் நிரந்தர தலைநகராக இருக்கும் என கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். இதன் காரணமாக அமராவதி போராட்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
- ஷாய்ஹோப், ஹெட் மயர், ஒஷானே தாமஸ் ஆகியோர் 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. அதை தொடர்ந்து இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட்இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஷாய்ஹோப், ஹெட் மயர், ஒஷானே தாமஸ் ஆகியோர் 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணி விவரம்:-
ரோவ்மேன் பவல்(கேப்டன்), கெய்ல் மேயர்ஸ் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், மெக்காய், ரோமரியோ ஷெப்பர்டு, ஒடியன் சுமித், ஒஷானே தாமஸ்.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
- போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.
சென்னை:
ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி நடக்கிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.
இந்த போட்டியை தமிழகத்தின் எல்லா பகுதியிலும் உள்ள ரசிகர்களும் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போட்டியின் நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன. விமான நிலையத்தில் இரு அணியினருக்கும் எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேருகிறது. சீனா, பாகிஸ்தான் அணிகள் இரவில் வந்தடைகின்றன.
இதற்கிடையே, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3.30 முதல் 4.30 மணி வரை தென்கொரியா அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜப்பான், மலேசியா அணிகள் தலா ஒரு மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.
முன்னதாக தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் சியோக் யோ ஷின் கூறுகையில், 'இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராக இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பயன்படுத்தி கொள்வோம். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதே எங்களது நோக்கமாகும்' என்றார்.






