என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார்.

    டொரண்டோ:

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அங்குள்ள டொரண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சாம்சனோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • 2 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
    • கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

    சென்னை:

    லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கல்லூரிகள், பள்ளிகள் இடையேயான 89-வது பெர்ட்ராம் நினைவு விளையாட்டு போட்டிகள் நாளை ( 15- ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    இதில் லயோலா, எம்.சி.சி, திருச்சி ஜமால் முகமது பி.எஸ்.ஜி. (கோவை) உள்பட 50 கல்லூரிகளும், 15 பள்ளிகளும் ஆகமொத்தம் 65 அணிகள் பங்கேற்கின்றன.

    கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. 2 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    கைப்பந்து, கூடைப்பந்து, பால் பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ், கபடி, கோகோ ஆகிய விளையாட்டுகள் நடைபெறுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் டென்னிஸ் (ஒற்றையர் பிரிவு) ஆகிய போட்டிகள் நடக்கிறது. பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 லட்சமாகும்.

    மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்கியராஜ், விளையாட்டு இயக்குனர் எம்.எஸ். ஜோசப் அந்தோணி ஜேக்கப், உடற்கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • நாங்கள் பேட்டிங்கில் சாதிக்க தவறிவிட்டோம்.
    • தொடரை இழந்ததற்காக நான் பெரிதும் வருத்தப்படவில்லை.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடைசி 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் தொடரை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங்கில் சாதிக்க தவறிவிட்டோம். அது ஆட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு ஆடியது. 10 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் ஆட்டத்தின் தன்மையை இழந்தோம். மற்ற வீரர்கள் நன்றாக ஆடினார்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். சிறப்பாக விளையாட தவறி விட்டேன். தோல்விக்கு நானே காரணம்.

    தொடரை இழந்ததற்காக நான் பெரிதும் வருத்தப்படவில்லை. அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கு (2024) இன்னும் நாட்கள் அதிகமாக இருக்கிறது. அடுத்து 50 ஓவர் உலக கோப்பை பற்றிய சிந்தனை தான் இருக்கிறது. தோல்வி சில நேரங்களில் நல்லது. அது நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2016-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பெற்ற முதல் இருதரப்பு தொடர் வெற்றி இதுவாகும். இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நிக்கோலஸ் பூரன் தட்டி சென்றார்.

    இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

     

    அதில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடிவயிற்றில் வாங்கிய காயங்களின் படத்தையும், நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றபோது பிராண்டன் கிங் அடித்த ஷாட் பூரன் இடது முன்கையைத் தாக்கியது. அந்த தழும்பையையும் மேற்கோள் காட்டி இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்த வெற்றியை வார்த்தைகளால் கூறுவது கடினம்.
    • எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம்.

    கடைசி டி20 போட்டியில், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

    இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை படைத்தது.

    அதேபோல் 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியடையாமல் இருந்து வந்த இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட்டது.

    இந்நிலையில் மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம் என்று தொடரை வென்ற பின்னர் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ரோவ்மன் பாவெல் கூறினர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றியை வார்த்தைகளால் கூறுவது கடினம். எங்கள் உணர்வுகளை கூற போதுமான சொற்கள் இல்லை. ஒரு நெடிய தொடரில் இந்திய அணியை தோற்கடித்துள்ளோம். நேற்று இரவு (4வது போட்டி அன்று) நாங்கள் மோசமாக தோற்கடிக்கப்பட்ட பிறகு உட்கார்ந்து பேசினோம்.

    எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம். பயிற்சி ஊழியர், சேர்மன் ஆகியோருக்கு இந்த பெருமை போய்சேரும். இந்தியா போன்ற அணிக்கு எதிராக தொடரை வெல்வது பெரிய விஷயம்.

    தனிப்பட்ட செயல்திறனில் நான் பெரியவன், தனிநபர்கள் சிறப்பாக செயல்படும் போது அது அணிக்கு உதவுகிறது. நிக்கோலஸ் பூரன் ஒரு சிறந்த வீரர். ஐந்து ஆட்டங்களிலும் ஒரு வீரர் ரன்களை குவிப்பது எளிதல்ல என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் சிறப்பான ரன்களை சேர்த்தால் வெற்றிகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
    • முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

    • 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
    • இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கண்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது.

    அதை தொடர்ந்து ஆடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் யாழ்ப்பாணம் சேசிங் செய்த போது கண்டி அணியை சேர்ந்த நட்சத்திர பவுலர் இசுறு உடானா ஃபீல்டிங் செய்வதற்காக தனது அணி கேப்டன் சொன்ன இடத்தை நோக்கி திரும்பி பார்க்காமல் பின்வாக்கில் நடந்த சென்றார். அப்போது திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு அவரது அருகே சென்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் பின்னோக்கி நடந்து சென்ற அவர் திடீரென்று கிழே பார்க்கும் போது சில அடி தூரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து ஷாக் ஆனார். உறைந்து போய் தலையில் கை வைத்து பின்னர் வாயில் கை வைத்து அப்படியே மைதானத்தில் அமர்ந்தார்.


    இருப்பினும் தாமதிக்காமல் உடனடியாக அங்கிருந்து எழுந்த அவர் பாம்பு அதனுடைய ரூட்டில் விட்டு எந்த தொந்தரவும் செய்யாமல் மீண்டும் பின்னோக்கி நடந்து ஃபீல்டிங் செய்வதற்காக சென்றார். அதைத்தொடர்ந்து மெதுவாக அங்கிருந்து சென்ற பாம்பு மைதானத்திற்கு வெளியே சென்றதால் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் பட்டம் வென்றது.
    • உலக தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்தை பிடிப்பது இது 2-வது முறையாகும்.

    புதுடெல்லி:

    உலக ஹாக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய அணி (2771.35 புள்ளிகள்), இங்கிலாந்தை (2763.50 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த உயர்வை பெற்றுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் பட்டம் வென்றது.

    ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டும் டிரா கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்தை பிடிப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் இந்திய அணி 3-வது இடத்தை பிடித்து இருந்தது. நெதர்லாந்து அணி (3095.90 புள்ளிகள்) முதலிடத்திலும், பெல்ஜியம் அணி (2917.87 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடருகின்றன.

    ஜெர்மனி அணி 5-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 6-வது இடத்திலும், ஸ்பெயின் அணி 7-வது இடத்திலும், அர்ஜென்டினா அணி 8-வது இடத்திலும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த மலேசிய அணி 9-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 10-வது இடத்திலும் நீடிக்கின்றன. தென்கொரியா அணி 11-வது இடமும், பாகிஸ்தான் அணி 16-வது இடமும், ஜப்பான் அணி 18-வது இடமும் வகிக்கின்றன.

    • சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும்.
    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும்.

    கவுகாத்தி:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கடந்த பல போட்டிகளில் நான் விளையாடிய விதம் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலக போட்டிக்காக நன்றாக தயாராகி இருக்கிறேன். கடந்த பல்வேறு போட்டிகளில் எனது ஆட்ட 'பார்ம்' நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்வதுடன் முன்னேற்றமும் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டிக்கு தயாராக விளையாடிய பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அது எனக்கு நிறையை தன்னம்பிக்கையை கொடுக்கும். வரும் வாரத்திலும் நல்ல பயிற்சியை எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

    சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். ஆனால் தற்போது எனது முதல் முன்னுரிமை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான். அது முடிந்த பிறகு தான் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கவனம் செலுத்துவேன். நான் விரைவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் ஒலிம்பிக் தகுதி சுற்று முடிவைடையும் போது 'டாப்-5' இடங்களுக்குள் வருவதே எனது நோக்கமாகும். அதேநேரத்தில் நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே வரும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்ஷயா சென் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜானிக் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்குகிறது.
    • இந்தப் போட்டி வரும் 20 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்கு போட்டி இன்று தொடங்கி வரும் 20- ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உள்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்காளதேசம், மியன்மார் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    3000 தர புள்ளிகளைக் கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது.
    • இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் தரவரிசையில் 3-ம் இடத்திலுள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார்.

    இதில் சாம்சனோவா 1-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சாம்சனோவா, ஜெசிக்கா பெகுலாவுடன் மோதவுள்ளார்.

    ×