என் மலர்
விளையாட்டு
- தென் ஆப்பிரிக்கா அணியின் கிளாசன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
- இங்கிலாந்து அணிக்கு மார்க் வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் கிளாசன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
400 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடைசியில் சிறப்பாக ஆடிய அட்கின்சன் மற்றும் மார்க் வுட் முறையே 35 மற்றும் 43 ரன்களை எடுத்தனர்.
அட்கின்சன் 35 ரன்களில் ஆட்டமிழக்க, 22 ஓவர்களில் இங்கிலாந்து அணி 170 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. மார்க் வுட் ஆட்டமிழக்காமல் 43 ரன்களை குவித்து இருந்தார். அடுத்து களமிறங்க வேண்டிய ரீஸ் டோப்லி பேட்டிங் ஆடவில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
- சதீர சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நெதர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதன்படி நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கை அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 70 ரன்கள் எடுத்த போது சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 262 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான நிசாங்கா 54 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பெரரா 5 ரன்களிலும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த சதீர சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அசலங்கா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் சதீர சமரவிக்ரம 91 ரன்களுடனும், துஷன் ஹேமந்த 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த யான்சன் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டும் ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் - ஹென்றிக்ஸ் களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரர் டிகாக் 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் -ரஸ்ஸி வான் டெர் டுசென் ஜோடி சிறப்பாக ஆடினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 125 ரன்கள் இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. ரஸ்ஸி வான் டெர் டுசென் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ஹென்றிக்ஸ் 85 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்க்ரம் 42 ரன்னிலும் மில்லர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 36.3 ஓவரில் 243 ரன்களாக இருந்தது.
இதனையடுத்து கிளாசன் மற்றும் யான்சன் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சரமாறியாக விளாசினர். அதிரடியாக விளையாடிய கிளாசன் சதமும் யான்சன் அரைசதம் அடித்து அசத்தினார். சதம் விளாசிய கிளாசன் 109 ரன்களில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த யான்சன் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டும் ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
- ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
மேலும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சாதனையை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் முறியடித்துள்ளது.
- டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 70 ரன்கள் எடுத்த போது சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்க, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்தது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை வந்த டோனியை ஆப்கானிஸ்தான் வீரர் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரஷித்கான் அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் உங்களை சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சி என தலைப்பிட்டுருந்தார்.
- இங்கிலாந்து 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.
- தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு லக்னோவில் தொடங்கும் 19-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா இடம் பெறவில்லை. அதனால் பொறுப்பு கேப்டனாக மார்க்ரம் செயல்படுகிறார். இதேபோல இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் விளையாடுகிறார்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியும் கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. தென்ஆப்பிரிக்கா 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- நாளைய போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
- உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி போல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 18 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் 2-வது இடம் முறையே இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அடுத்தடுத்து உள்ளனர்.
நாளை முதல் இடத்துக்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும்போது மிரட்டலாக ரவி சாஸ்திரி கமெண்ட் கொடுப்பார். அதனை சுட்டிக்காட்டி தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்துள்ளார்.
இந்த வீடியோ உலகக் கோப்பை கிரிக்கெட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- காவல்துறை அதிகாரியை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக் கோப்பை போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகரை "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த ரசிகர் 'இந்திய ரசிகர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடும்போது, நான் ஏன் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட கூடாது?' என்று கேட்டார்.
அதற்கு அதிகாரி மீண்டும் 'அப்படி சொல்லகூடாதுதான்' என கூறினார்.
உடனே அந்த ரசிகர் அந்த அதிகாரியின் பதிலை தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்ய முயற்சித்தார். மேலும் அந்த ரசிகர், "பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல கூடாதா?" என மீண்டும் கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு போலீஸ் அதிகாரி நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தனது நாட்டு அணியினரை உற்சாகப்படுத்த ஒரு ரசிகர் அனுமதிக்கப்படாதது "வெட்கக்கேடானது" என்று அந்த காவல்துறை அதிகாரியை கடுமையாக சாடி வருகின்றனர்.
- பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- வார்னர் 13 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
இஸ்லாமாபாத்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 367 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் (163 ரன்), மிட்செல் மார்ஷ் (121 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இப்போட்டியில் டேவிட் வார்னர் 13 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தான் வீரர்கள் மீது முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கி விக்கெட்டுகளை எடுக்க முடியாத நீங்கள் குறைந்தபட்சம் எதிரணி பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்சையாவது பிடித்திருக்க வேண்டும். பேட்டிங், பீல்டிங்கில்தான் சொதப்புகிறீர்கள் என்றால் வெற்றிக்கு அடித்தளமாக அமையக்கூடிய கேட்ச்சுகளை எதிரணி தாமாக கொடுத்தும் அதை தவறவிடலாமா? உங்களால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியாத போது கேட்ச் வாய்ப்புகளை சரியாக பிடியுங்கள். நீங்கள் இவ்வாறு அதிகமாக கேட்சுகளை தவறவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அப்துல்லா ஷபீக் 64, இமாம் உல் ஹக் 71, பாபர் அசாம் 17, சவுத் ஷகீல் 34, முகமது ரிஸ்வான் 47, இப்திகார் அகமது 26, முகமது நவாஸ் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதானல் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
- பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.






