என் மலர்
விளையாட்டு
- அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
- பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- முதல் போட்டியில் இலங்கை-நெதர்லாந்து மோதுகிறது.
- இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு லக்னோவில் தொடங்கும் 19-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணிதான் போதிய மூன்று ஆட்டத்திலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
நெதர்லாந்து அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
இவ்விரு அணிகளும் உலக கோப்பைக்கான தகுதி சுற்றில் இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.
மதியம் 2மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியும் கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. தென்ஆப்பிரிக்கா 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- டேவிட் வார்னருக்கு 13 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.
- வார்னர், 6 சிக்ஸ் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்துள்ளார்.
பெங்களூரு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 18-வது லீக்கில் ஆஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உஸ்மா மிர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 13 ரன்னில் இருந்த போது அப்ரிடி பந்து வீச்சில் டாப் எட்ஜ் ஆனது. அந்த கேட்ச்சை ஷதாப் கானுக்கு பதிலாக களமிறங்கிய உஸ்மா மிர் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.
இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட வார்னர், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். அதிரடியாக விளையாடிய வார்னர், 6 சிக்ஸ் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்துள்ளார். மறுமுனையில் விளையாடிய மார்ஷ் தனது பங்கிற்கு 6 சிக்ஸ் 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 31 ஓவர் முடிவில் 214 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
- இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.
- இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும்.
உலகக் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாகிப் ஆல் ஹசன் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார். அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 754* 2. ஷாகிப் அல் ஹசன் : 743 3. அர்ஜுனா ரணதுங்கா: 727 ஆகியோர் உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் 2 சிக்சர் அடித்ததன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர் அடித்த கேப்டன் என்ற இயன் மோர்கன் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் 1. ரோகித் சர்மா : 61 (2023இல்) 2. இயன் மோர்கன் : 60 (2019இல்) 3. ஏபி டீ வில்லியர்ஸ் : 59 (2015இல்)
- பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
- சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வந்தவர்கள் சச்சின், சேவாக். இருவரும் களத்தில் நின்றால் அனல் பறக்கும். தொடக்க ஆட்டக்காரர்களாக இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர். பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
இரட்டை சதத்தை இன்று பலர் அடித்தாலும் அதனை முதலில் தொடங்கி வைத்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான். முதல் இரட்டை சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் அதிரடி நாயகனாக சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் ஒருமுறை பொறுமையாக விளையாடும்படி கூறினேன். "சரி" என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, தயவுசெய்து ஒரு சலிப்பான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் விரு.
இவ்வாறு அவர் கூறினார்.
When I once told him to go slow and stay on the crease, he said, "ok" and then smashed the very next ball for four. Happy birthday to the man who likes to do exactly the opposite of what I say.
— Sachin Tendulkar (@sachin_rt) October 20, 2023
So, I am going to say, please have a boring birthday, Viru. ? pic.twitter.com/i45fSXvvtV
- இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன.
பெங்களூரு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 18-வது லீக்கில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுடம் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உஸ்மா மிர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
பெங்களூரு சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். அத்துடன் பவுண்டரி அளவும் சிறியது என்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளின் லெவன்:-
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஜம்பா, ஹேசில்வுட்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, உஸ்மா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி, அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
- சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
- அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வங்களாதேசம் அணி பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ரஹீம் எதிர்கொண்டார். அவர் கொடுத்த அற்புதமான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா தாவி பிடித்து அவுட்டாகினார். அப்போது இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியின் நடுவில் கொடுக்கப்படும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை எனக்கு கொடுங்கள் என்று ரவீந்திர ஜடேஜா சைகை செய்த போது ஃபீல்டிங் பயிற்சிசாளர் கைதட்டி பாராட்டினார்.
மறுபுறம் ஏற்கனவே விக்கெட் கீப்பர் ராகுலும் அபாரமான கேட்ச் பிடித்ததால் இந்த போட்டியின் முடிவில் யாருக்கு அந்த விருது கொடுப்பது என்ற குழப்பம் பயிற்சியாளருக்கு ஏற்படும் அளவுக்கு இந்தியாவின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.
இந்நிலையில் சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஓய்வு அறையில் உள்ள டிவியில் அந்த விருது யாருக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் சிறந்த பீல்டர் விருது மைதானத்தில் உள்ள டிவியில் திரையிடப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாரத வீரர்கள் மற்றும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் டிராவிட் மற்றும் ரோகித் ரியாக்ஷன் வேற லெவலில் இருந்தது. அனைத்து வீரர்களும் பீல்டிங் பயிற்சியாளரை கட்டியணைத்து மகிழ்ந்தனர்.
அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- வரும் 22-ந் தேதி தரம்சாலாவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்களாதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 50 ஓவர் முடிவில் 256 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடி சதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வரும் 22-ந் தேதி தரம்சாலாவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். காயம் குறித்த சிகிச்சைக்காக அவர் பெங்களூர் செல்ல இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார். அதற்கு அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் கார்த்திகேயன் விளையாடினார்.
- செஸ்ஸில் முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் ஆனார்.
கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி புதன்கிழமை கிளாசிக்கல் செஸ்ஸில் முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் ஆனார்.
நடந்து வரும் கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய 24 வயதான இந்திய வீரர் கார்ல்சனை வீழ்த்தினார்.
இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பிரதம் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வாழ்த்துக்கள் கார்த்திகேயன். கத்தார் மாஸ்டர்ஸ் 2023-ல் சிறந்து விளங்கியவர். அவரது வெற்றி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. நடப்பு செஸ் சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபாரமான சாதனை படைத்துள்ளார்.
அவர் அற்புதமான வேலையைத் தொடரட்டும், மேலும் அடுத்த சுற்றுக்கு அவருக்கு சிறந்ததாக இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சொந்த சாதனைக்காக கோலி விளையாடவில்லை என லோகேஷ் ராகுல் கூறினார்.
- பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது ஒருநாள் போட்டியில் அவரது 48-வது சதமாகும்.
நேற்றைய போட்டியில் கோலி-லோகேஷ் ராகுல் ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. கோலி 85 ரன்களில் இருந்தபோது இந்தியா வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராகுல் ஒரு சிங்கிள் கூட எடுக்காமல் கோலி சதம் அடிப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே கோலி, சதம் அடிப்பதற்காக விளையாடினார் என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இதுதொடர்பாக லோகேஷ் ராகுல் கூறும் போது, விராட்கோலி சதமடிப்பதற்காக நான் சிங்கிள் எடுப்பதை தவிர்த்தேன். அப்போது கோலி என்னிடம், நீங்கள் சிங்கிள் எடுக்காமல் போனால் அது நன்றாக இருக்காது. ஏனென் றால் நான் சொந்த சாத னைக்காக விளையாடுகி றேன் என அனைவரும் நினைப்பார்கள் என்று கூறினார். சிங்கிள் எடுக்கும் படி கூறினார். ஆனால் வெற்றி நமக்கு உறுதியாகி விட்டதால் நீங்கள் சதமடியுங்கள் என்று நான்தான் அவரிடம் கூறினேன். 30 ரன்கள் தேவைப்பட்டபோது அனைத்து பந்துகளையும் நான் தடுத்து ஆடுகிறேன். பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
41-வது ஓவர் முடிவில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கோலி 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். 42-வது ஓவரை வீசிய நசூம் முதல் பந்தை லைக் சைடில் வைடாக வீசினார். ஆனால் அந்த பந்துக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டல் போரக் வைடு கொடுக்கவில்லை.
2-வது பந்தில் கோலி ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசம் அணிக்கெதிராக பந்து வீசும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது
- 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார்
புனேயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றியை ருசித்துள்ளது.
இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும்போது காயம் அடைந்தார். அதன்பின் களம் இறங்கவில்லை. அடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் காயம் இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித் சர்மா கூறியதாவது:-
வங்காளதேசம் அணிக்கு எதிரான வெற்றி சிறப்பானது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. முதலில் நாங்கள் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை நம்முடைய பக்கத்திற்கு திருப்பினர். அனைத்து போட்டிகளிலும் பீல்டிங் சூப்பராக இருந்தது. இது வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அவர்களின் சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும். பந்து வீச்சாளர்கள் எந்த லெந்தில் பந்து வீச வேண்டும் என்று புரிந்து வைத்துள்ளனர்.
ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். கேட்ச் பிடித்தார். இருந்தபோதிலும், சதத்தை உங்களால் முந்தி செல்ல முடியாது.
ஒரு அணியாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். வீரர்கள் அறையில் சிறந்த பீல்டருக்கு பதக்கம் வழங்குவது, உத்வேகம் அடைவதற்காகத்தான்.
ஹர்திக் பாண்ட்யா சற்று வலி இருப்பதாக உணர்கிறார். மிகப்பெரிய அளவில் கவலை அளிக்கும் வகையில் அவரது காயம் இல்லை. நாளை காலை (இன்று) அவர் எழுந்து நடக்கும்போது எவ்வாறு உணர்கிறார் என்று பார்க்க வேண்டும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடுவோம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வந்து ஆதரவு அளிக்கிறார்கள்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- விராட் கோலி சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன், அணியை வெற்றி பெற வைத்தார்
- உலகக் கோப்பையில் விராட் கோலியின் 3-வது சதம் இதுவாகும்
புனேயில் நடைபெற்ற இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். கடைசியில் இந்திய அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி 80 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் கே.எல். ராகுல் ஒருபுறம் நிற்க, அனைத்து ரன்களையும் விராட் கோலி அடித்து சதத்தை தொட்டார்.
சதம் அடித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது விராட் கோலி பேசியதாவது:-
ஆட்ட நாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து திருடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க விரும்பினேன். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சில அரைசதங்கள் அடித்துள்ளேன். ஆனால், அவற்றை சதமாக மாற்ற முடியாமல் போனது. நான் கடந்த சில வருடங்களாக அணிக்கு செய்து வரும் பணியின் தொடர்ச்சியாக, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து வைக்க விரும்பினேன்.
ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. எனது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது. தேவைப்படும் போதெல்லாம் பவுண்டரிகள் அடிக்க, பீல்டர்களுக்கு இடையில் பந்தை அடிப்பதற்கு, விரைவாக ரன்கள் அடிக்க முடிந்தது.
வீரர்கள் அறையில் சிறந்த சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு குழுவாக ஒருவரையொருவர் சிறப்பாக நேசிக்கிறோம். அதை நீங்கள் ஆடுகளத்தில் பார்ப்பீர்கள். இது நீண்ட நாள் நடைபெறும் தொடர். வீரர்கள் ஆடுகளத்தில் இதுபோன்று சிறப்பாக விளையாட, வீரர்கள் அறையில் சில உத்வேகம் தேவை. சொந்த மண்ணில், ரசிகர்கள் முன் விளையாடுவதை சிறந்த உணர்வு. இதை நாங்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
வங்காளதேசம் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நேரத்தில் ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






